ஆப்கானின் பாராளுமன்ற ஆலோசகரும் ஊடகவியலாளருமான மீனா மங்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்


ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரின் கிழக்கே மீனா மங்கள் என்ற பெண் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.  அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கலாசார ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளார்.

இவர் 3 உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களிலும் இதற்கு முன் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார்.  இவரது படுகொலை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இந்த வருட தொடக்கத்தில் இருந்து நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 15 பத்திரிகையாளர்கள் வரை கொல்லப்பட்டு உள்ளனர்.  இவர்களில் 9 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர் என அறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது.
Share:

No comments:

Post a Comment