முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்குவதை விட அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும்
அவர்கள் தலைநிமிர்ந்து வாழும் உரிமையை உறுதி செய்வதுமே அரசாங்கத்தின் பொறுப்பு என ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

நேற்றைய நீர்கொழும்பு தாக்குதல் சம்பவங்களை அடுத்து முஸ்லிம்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நேற்றைய நீர்கொழும்பு சம்பவம் இலங்கை வாழ் முஸ்லிம்களை அச்சத்திற்குள்ளும் வேதனைக்குள்ளூம் தள்ளியுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் பாதுகாப்பு பிரிவிற்கு தங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வரும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் முஸ்லிம்களை அழுத்தத்திற்குள் தள்ளியுள்ளது.
பிரதமர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அரசில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எந்த முழுமையான இழப்பீடுகளும் அரசினால் வழங்கப்படவில்லை. அம்பாறை பள்ளிவாயலுக்கு செய்யப்பட்ட முழுமையான மதிப்பீடு நிராகரிக்கப்பட்டது.

பிரதமரின் அறிவிப்பு தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.அதனை ஒரு அரசியல் அறிவிப்பாகவே சமூகம் பார்க்கின்றது.

முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்குவதை விட அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவர்கள் தலைநிமிர்ந்து வாழும் உரிமையை உறுதி செய்வதுமே அரசாங்கத்தின் பொறுப்பு.

இன்று அரச தரப்பில் இருக்கும் சில பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களே முஸ்லிம்கள் தொடர்பில் விஷம பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். பங்கை தடை செய்ய வேண்டும் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் கூறுகிறார்.

உண்மைத்தன்மை அறியாமலேயே சிலர் ஷரியா பல்கலைகழகம் கட்டப்படுவதாக பிரசாரம் செய்கின்றனர்.ஓரிரு பள்ளிவாயல் வளாகங்களில் வால்கள் மீட்கப்பட்டதை ஒட்டுமொத்த பள்ளிவாயல்களில் ஆயுதம் மீட்கப்பட்டமை போன்று ஊடகங்கள் சித்தரிக்கின்றன.

பாதுகாப்பு பிரிவினர் சில இடங்களில் வரம்பு மீறி செயற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் முஸ்லிம் சமூகம் பாரிய நெருக்கடிக்குள் விழுந்துள்ளது.

இதிலிருந்து முஸ்லிம்களை மீட்டு எடுப்பது எமது கடமை கட்சி பேதங்களை மறந்து எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றினைந்து பணியாற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

(மடவளை நியூஸ்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.