நாட்டில் கடந்த மாதம் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்று மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் தற்பொழுது இனவாதத்தை தூண்டும் அரசியலே நாட்டில் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

நேற்று (15) ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். 

இதன் போது மேலும் உரையாற்றிய அவர், இன்று மக்கள் மத்தியில் சந்தேகம், வைராக்கியம், விசுவாசம் போன்றவையை தூண்டும் செயல்பாடுகள் தான் தற்பொழுது நாட்டில் காணபடுகிறது. ஒரு ஊடகம் ஒன்றில் நான் ஒரு செய்தியை பார்த்தேன். அதில் மஹிந்த ராஜபக்ஷ இருந்திருந்தால் பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ இருந்திருந்தால் குண்டு தாக்குதலை மேற்கொண்ட எட்டு பேரையும் வெள்ளை வேனில் தூக்கி இருப்போம் என எழுதபட்டிருந்தது. இந்த செய்தியின் ஊடாக என்ன தெரிய வருகிறது என்றால் வெள்ளை வேன் கலாசாரம் நல்லது எனது எழுதபட்டிருந்தது. 

இந்த அரசாங்கத்தை அரசியல்வாதிகள் ஆள்வதைவிட இந்த நாட்டில் உள்ள இராணுவத்தினர் பொறுப்பேற்றால் நல்லது என நினைக்கிறேன். ஏனெனில் அப்போதுதான் இந்த நாட்டில் அனைவரும் சமாதானத்தோடு வாழ முடியும். அமைச்சர் ரிஷாட் பதியூதினை தாக்கினால் அனைவரும் வீரராவர். 

தாம் செய்கின்ற அநியாயங்கள் கொள்ளைகள் அனைத்தையும் மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள். மக்கள் விடுதலை முன்னணி தினந்தோரும் வரலாற்றுக்கு பதில் சொல்ல கடமைபற்றுள்ளது. கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற தாக்குதலுக்கு என்ன சொல்லுவது அந்த தாக்குதலுக்கு பெயர்தான் இஸ்லாம் மத தீவிரவாத உமைத் அமைப்பு ஆகும். 

இடம்பெருகின்ற தாக்குதல்களை நாம் சரிவர இனங்கண்டால் மாத்திரம் தான் யார் இந்த தாக்குதலை மேற்கொண்டார்கள் என எம்மால் இனங்காண முடியும். தாக்குதலை மேற்கொண்டவர்கள் எதற்காக கிறிஸ்தவ ஆலயங்களையும், நட்சத்திர ஹோட்டல்களையும் தெரிவு செய்து தாக்குதலை மேற்கொண்டனர். அரசாங்கத்தின் மீது உள்ள கோபம் அல்ல. வெளிநாடுளோடு இருந்த கோபத்தின் காரணமாகத்தான் இந்த மூன்று இடங்களையும் தெரிவு செய்து தாக்குதலை மேற்கொண்டனர். 

வெளிநாடுகளில் உள்ள அரசியல்வாதிகளிடம் கோபத்தின் காரணமாக இலங்கை நாட்டில் தாக்குதலை மேற்கொண்டனர். 

பொதுமக்களுடைய பாதுகாப்பு அரசாங்கத்திடம் ஒப்படைக்கபட்டுள்ளது. அதிகூடிய முதல் செலவிடபடுகிறது. பாதுகாப்பு பிரிவினருக்கு புதிய அரசாங்கம் உருவாக்கபட்டு ஆறு மாத காலபகுதியில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் முரண்பாடு ஏற்பட்டது. 

கடந்த 21ம் திகதிக்கு பிறகு நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பிறகு கூறுகிறார்கள். பாதுகாப்பு தரப்பினரை நாங்கள் அதிகரிக்கவில்லை என கூறுகிறார்கள்.

மக்களுடைய பாதுகாப்பு குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டு கொள்ளவில்லை. “தற்பொழுது கூறமுடியாது, எனக்கு தெரியாது” என கடந்த 21ம் திகதி தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்பு யார் தாக்குதலை மேற்கொள்ள போகிறார்கள் எந்த நேரம் என பல்வேறு தகவல்களை புலனாய்வு துறையினர் வழங்கியிருந்தார்கள். 

ஆனால் நாட்டின் தலைவர்கள் மக்களின் பாதுகாப்பு குறித்து கண்டுகொள்ளவில்லை. இன்று கூறுகிறார்கள். ரிஷாட் பதியூதின் செய்தது கொள்ளை இல்லை, பசில் ராஜபக்ஷ செய்ததும் கொள்ளைதான். இலங்கையில் தாக்குதல் இடம்பெற்ற நாளில் நாட்டின் ஜனாதிபதி வெளிநாட்டிற்கு சென்று தாக்குதல் இடம்பெற்ற மறுநாள் தான் வேறு ஒரு விமானத்தில் இலங்கை நாட்டுக்கு வருகை தந்தார். 

இதனை நாங்கள் ஏற்று கொள்ள முடியாது. நாட்டின் முப்படை தலைவர் ஜனாதிபதி தான். தாக்குதல் சம்பவம் இடம்பெற்றவுடன் வெளிநாடு சென்ற ஜனாதிபதி நாடு திரும்பியிருக்க வேண்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை காரணமாக நாட்டில் உள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதியினை இந்த அரசாங்கத்தினால் பிற்போடபட்டது. 

அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கினங்க கடந்த 06ம் திகதியும் 13ம் திகதியும் பாடசாலைகள் ஆரம்பிக்கபட்டது. இருந்தாலும் பாடசாலைக்கு மாணவர்களின் வருகை குறைவாக தான் காணபடுகிறது. உணவகங்களில் வியாபாரம் இல்லை. ஹோட்டல்களில் விருந்தினர்கள் இல்லை. எனவே இந்த நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு எம்மிடம் இருக்கிறது என அவர் குறிப்பிட்டார். 

(AdaDerana)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.