கொழும்புத் துறைமுக நகரம் கொழும்பு மாவட்டத்திலும் மேல் மாகாணத்திலும் உள்ள அரசாங்க இடமாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தேசிய பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காக உயர்வான பெறுமதியைக் கொண்டதும் வெளிநாட்டு முதலீட்டை கவருவதற்குமாக கடல் மணலை பயன்படுத்தி கடலை நிரப்பியதன் மூலம் துறைமுக நகரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைவாக 269 ஹெக்டர் நிலப்பரப்பு இலங்கையின் நிலப்பரப்புடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. 

அதன் பாதை பொது நிறுவனங்களைக்கொண்ட 91 கிலோ மீற்றர் நீளத்தினாலான இரண்டு கரையோரம் முக்கிய பூங்காவொன்றும் வருடத்தின் எந்தக்காலப்பகுதியிலும் நீச்சல் மற்றும் நீர் விளையாட்டுக்கான கடலோரம் மற்றும் நகரத்தின் ஊடாக 70 மீற்றர் அகலத்தைக் கொண்ட கால்வாயொன்று அமைக்கப்படும். 

இதே போன்று உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளைக் கொண்ட ஓய்வு நிலையம் களியாட்டப் பூங்கா சர்வதேச கல்வி சர்வதேச சுகாதார சேவை மற்றும் மகாநாட்டு மண்டபம் முதலானவற்றை இந்த பிரதேசம் கொண்டுள்ளது. 

எதிர்காலத்தில் தேசிய பொருளாதாரத்திற்கு உன்னதமான பங்களிப்பை வழங்கவுள்ள கொழும்புத் துறைமுக நகரம் கொழும்பு மாவட்டத்திலும் மேல் மாகாணத்திலும் உள்ள அரசாங்க இடமாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்தல் உள்ளிட்ட பணிகளை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த பிரதேசத்தை முகாமைத்துவம் செய்தல் மற்றும் முன்னெடுப்பதற்காக தேவையான அதிகாரத்தைக் கொண்ட சொத்துக்கள் முகாமைத்துவ முறை ஒன்றை அமைப்பதற்கு மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. (AdaDerana)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.