அத்தனகல்ல தேர்தல் தொகுதியிலுள்ள பள்ளவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் ; ஐதேக அமைப்பாளர் சரணலால் வேண்டுகோள்


அத்தனகல்ல தேர்தல் தொகுயில் உள்ள பல ஜும்ஆ பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அப்பள்ளிவாசல்களுக்கு உடனடியாக பொலிஸ் அல்லது இராணுவ பாதுகாப்பினை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி ஐக்கிய தேசியக் கட்சியின் அத்தனகல்ல தொகுதி பிரதம அமைப்பாளர் சந்திரசோம சரணலால் பொலிஸ் மா அதிபரையும், பதில் பாதுகாப்பு அமைச்சரையும் வேண்டிக் கொண்டார்.

ஏற்கனவே திஹாரிய அல் மஸ்ஜிதுல் ரௌழா ஜும்ஆ பள்ளிக்கு இராணுவ பாதுகாப்பளிக்கப்பட்டிருந்தாலும், பிரதான வீதியில் உள்ள பள்ளிவாசல்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படாமையை சுட்டிக்காட்டி இவ் வேண்டுகோளை விடுத்தார்.

அவரது வேண்டுகோளில் கஹட்டோவிட்ட, உடுகொட, வெயாங்கொட, அத்தனகல்ல, ரன்பொகுனுகம, ஓகொடபொல, திஹாரிய ஜும்ஆ பள்ளிவாசல்களுக்கு மேற்படி பாதுகாப்பை வழங்கும்படி வேண்டியுள்ளார்.

இது தொடர்பாக திஹாரிய அல் மஸ்ஜிதுல் அமீனியா நிர்வாக சபையும், ஐ.தே.க. இன் அத்தனகல்ல தொகுதிக்கான முஸ்லிம் அமைப்பாளர் சமாதான நீதவான் எம்.எஸ்.பைசர்தீனும் சரணலாலின் கவனத்திற்குக் கொண்டு வந்ததால் இவ் வேண்டுகோள் கடந்த புதன்கிழமை விடுக்கப்பட்டது.

(கம்பஹா பைசர்தீன்)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here