இம்முறை அதிகமான முஸ்லிம்கள் இந்திய பாராளுமன்றத்திற்குத் தெரிவு

இந்தியாவில் மொத்தம் 24 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டதாக இந்திய முஸ்லிம்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.

இந்திய முஸ்லிம்களின் சனத்தொகை 172 மில்லியன். சுமார் 15%. மொத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 542+1+2= 545.

( ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. இருவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர்)

ஆகக்குறைந்தது முஸ்லிம்களுக்கு 80 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்கவேண்டும். தொகுதிமுறைத் தேர்தல் காரணமாக 24 தான் கிடைத்திருக்கிறது. அதற்கே மகிழ்ச்சியடைகிறார்கள் அச்சகோதரர்கள்.

இதுதான் இந்திய முஸ்லிம்களின் அரசியல் நிலை.
இந்தியாவிலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல்முறை அறிமுகப்படுத்தப்பட்டால்தான் அவர்களுக்கு பிரகாசமான அரசியல் எதிர்காலம் கிடைக்கும்.

(YLS ஹமீட் LLM)
Share:

No comments:

Post a Comment