ரமழானை இவ்வாறு கழிக்க வேண்டும் ; விளக்குகிறார் பைசர் முஸ்தபா

முஸ்லிம்கள் ரமழானை எவ்வாறு கழிக்க வேண்டும்?
- விளக்குகிறார் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா 

( ஐ. ஏ. காதிர் கான் ,)

   கண்ணியமும் புண்ணியமும் மிக்க புனித ரமழான் மாதம், நம்மத்தியில் மீண்டும் வந்துள்ளது. எனவே, நாட்டின் இன்றைய சூழ் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, நம் மத்தியில் வந்துள்ள புனித  ரமழானை, அவதானமாகவும் அமைதியாகவும்  கழிக்க வேண்டும் என, அனைத்து முஸ்லிம்களிடமும் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.    இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
   ரமழான்,  முஸ்லிம்களுக்கு மிக முக்கிய மாதம்.
   இந்த ரமழானில் நாம் எமது வணக்க வழிபாடுகளை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும். என்ற ஒரு முக்கிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.  இது தொடர்பில், தற்போது பரவலாக பல ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.  ரமழான் காலங்களில் இரவு நேரங்களில் அங்கும் இங்குமாக வீணே அலையக் கூடாது. வீதிகளில் விளையாடக் கூடாது.  பள்ளிவாசல்களுக்கு தொழுகைக்காகச் சென்றால், தொழுகை முடிந்ததும், உடனடியாக தமது வீடுகளுக்குள் அடங்க வேண்டும். கூட்டம் கூட்டமாகவோ, பாதை ஓரங்களில் கதைத்துக்கொண்டோ இருக்கக்  கூடாது. பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. குறிப்பாக, பெண்கள் அவசியத் தேவைகளின்றி  வெளியே செல்வதை இயன்றளவு தவிர்ந்து கொள்ள வேண்டும். 
   இந்த நேரத்தில்  மஸ்ஜித் உடைய நிர்வாகிகள், ஊர் மக்கள், மஸ்ஜிதின் இமாம்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய விடயங்களும் உள்ளன. அதில்  ஒன்று தான் 
   எங்களை வந்தடைந்துள்ள  புனித ரமழான் மாதம், வருடத்துக்கு ஒரு தடவை எங்களை சந்திக்கின்ற மாதம். இது  குர்ஆனுடைய மாதம். இவ்வாறான மிகுந்த  சிறப்புக்களையெல்லாம் பொதிந்துள்ள இம்மாதத்தில், நாம் கண்ணியமாகவும் கெளரவமாகவும் நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகவுள்ளது.  எங்களுடைய குர்ஆனுக்கும், தராவீஹ் தொழுகைக்கும், மற்றுமுண்டான அனைத்து அமல்களுக்கும்  எவ்விதத் தடைகளும் ஏற்படாதவாறு நாம் நடந்துகொள்ள வேண்டும். எங்களுடைய  அமல்களில் எவ்விதக் குறைகளும்  ஏற்படாதவாறு, நாம் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
   இது இவ்வாறிருக்க, மாற்று மதத்தவர்களும் எங்களுடைய ரமழானைப்  பற்றியும்,  இந்த மாதத்தில் முஸ்லிம்கள் என்னென்ன விடயங்கள் செய்கிறார்கள், அவர்களுடைய இரவு, பகல், வணக்கங்கள்  எவ்வாறு இருக்கிறது, அதனுடைய நேரங்கள், அனைத்தையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
எனவே, எங்களுடைய அமல்களுக்கு எவ்விதத் தடைகளும் அமையாதவாறு நாம் அக்கடமைகளைப் புரிய வேண்டும்.
நாம் அமல்களை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்ற  ஆலோசனைக்கு கீழால் அமல்களைக்  குறைத்துவிடாமலும், இந்த மாதத்தின் தனிச்சிறப்புக்களை இழந்து விடாமலும், நாம் புரியும் அந்த அமல்கள் சுருக்கப் படாமலும், அதனை கண்காணிக்கும் பொறுப்பு எங்களுக்கிருக்கிறது  என்பதை நாம் யாரும் மறந்துவிடக் கூடாது.
   பல வருட காலம் தொழுகையில் முழுக்  குர்ஆனையும் பூர்த்தி செய்திருக்கின்றோம். 
பல வணக்கங்களில் ஈடுபட்டிருக்கின்றோம். பல தான தர்மங்கள், ஸதகாக்கள் கொடுத்திருக்கின்றோம்.  இவைகள் அனைத்தையும் முடியுமானவரை இன்ஷா அல்லாஹ் செய்ய முற்படுவோம்.
   நமது நாடு, நமது கிராமத்தின்  பாதுகாப்பைப்  பலப்படுத்தி, தராவீஹ் 
உடைய தொழுகை அது முழுமைப்  படுத்தப்பட வேண்டும். அதில் முப்பது ஜுஸுz உவும் ஓதப்பட வேண்டும்.  பெண்கள் தராவீஹ்  தொழுகையை எவ்வாறு தொழுது கொள்ளவேண்டும் என்ற சகல விடயங்களையும், அந்தத்த பள்ளிவாசல்  நிர்வாகிகளோடும், உலமாக்களோடும், கலந்து ஆலோசித்து,  எந்தக்     குறைபாடுகளும் இல்லாமல் ரமழான் மாதத்தை கழிப்பதற்கு  உறுதி கொள்வோம். 

( ஐ. ஏ. காதிர் கான் )
Share:

No comments:

Post a Comment