2019ம் ஆண்டு 30ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஆற்றிய விசேட உரை

நேற்று முன்தினம் (29) ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபூ பகர் அல் பக்தாதி அவர்கள் 04 ஆண்டுகளின் பின்னர் காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பு தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு நிறுவனங்கள் மேலதிக பரிசீலனைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர். 

அதன் போது அவர் தமது கட்டுப்பாட்டில் இருந்து இறுதி கோட்டையான சிரியாவின் பக்கூஸ் நகரத்தினை குர்தி உட்பட நட்பு ரீதியிலான இராணுவத்தினர் கைப்பற்றியமைக்கு பழிதீர்க்கும் வகையில் இலங்கையில் தாக்குதல் நடாத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார். இலங்கையில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து தாம் சந்தோஷமடைவதாகவும் அல் பக்தாதி மேலும் தெரிவித்திருந்தார்.

அவர் வெளியிட்ட மற்றுமொரு அம்சம்தான், சந்தர்ப்பம் கிடைக்கின்ற எந்தவொரு நேரத்திலும், உலகத்தின் எந்தவொரு நாட்டின் மீதும் தாக்குதல் மேற்கொள்வதற்கு தாம் தயாராக இருக்கின்றோம் என்பதாகும். அது முழு உலகத்திற்கும் ஆபத்தான அறிவிப்பாகும். அதனால் நாங்கள் எமது நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட உடனே நாம் இது தொடர்பில் துரித கதியில் நடவடிக்கை மேற்கொண்டோம். ஏற்பட்ட குறைப்பாடு தொடர்பில் விவாதித்து கொண்டிருக்காது, நிலமையினை கட்டுப்படுத்தி நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்ததே நான் பின்பற்றிய வழிமுறையாகும்.  

அதனடிப்படையில், இதுவரை இத்தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபட்ட பலரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினருக்கு முடிந்துள்ளது. அடுத்த கட்ட தாக்கதல்களுக்காக பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்ட வெடிப் பொருட்களையும் வேறு உபகரணங்களையும் கண்டுபிடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது. 

இன்னும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அவற்றை இந்த சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக வெளியிடுவது பொருத்தமற்றது. எமக்கு மிகவும் குறுகிய காலத்தினுள் இவ்வனைத்தையும் மேற்கொள்வதற்கு, எமது புலனாய்வு பிரிவினரும், பாதுகாப்பு தரப்பினரும் வழங்கிய முழுமையான ஒத்துழைப்பே காரணமாகும். 

எமது புலனாய்வு பிரிவில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் செயற்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு தரப்பில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் செயற்படுகின்றனர். இவ்வனைவரும் தமது பணிகளை முறையாக மேற்கொண்டு வருகின்றனர். அதனால் மிகவும் குறுகிய கதியில் இந்த தாக்குதலுடன் தொடர்பான மீதமுள்ள ஒருசிலரையும் பிடித்துக் கொள்வர். 

எனினும் அவ்வனைவரையும் பிடித்துக் கொண்ட போதும், ஆபத்து குறைந்துவிடப் போவதில்லை. அல் பக்தாதின் அறிவிப்பிலிருந்து, அவர்கள் எந்தவகையான பின்னடைவினை எதிர்நோக்கிய போதும், தொடர்ந்தும் உலகத்தில் ஆங்காங்கு இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்வதற்கு திட்டமிடுவதாக தெரிய வருகின்றது.  

முழு உலகும் ஒன்றாக சேர்ந்து இந்த ஜஹாத் பயங்கரவாதத்திற்கு முகங்கொடுக்க வேண்டும். ஆகவே பயங்கரவாதத்திற்கு எதிராக முழு உலக நாடுகளுடனும் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். புலனாய்வு தகவல்களையும், விசேட அறிவினையும் பகிர்ந்து கொண்டு செயற்படுவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். 

மேலும், ஓர் நாடாக இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றாய் இணைந்து செயற்பட வேண்டும். உள்நாடு மற்றும் வெளிநாடு என நம் அனைவரதும் பாதுகாப்பினை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு துளைகள் ஏற்படாத வகையில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதைப் போன்று, இந்த கடினமான சந்தர்ப்பத்தில் தத்தமது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போலி நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பான ஊடகங்கள் தொடர்பிலும் நாம் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும். 

வெசாக் தினத்திற்கு முன்னர் இந்நாட்டில் இனப்பிரச்சினையொன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற தேவையே இவர்களுக்கு இருக்கின்றது. வெசாக் உற்சவத்தினை தவிடு பொடியாக்குவதே அவர்களது எதிர்பார்ப்பு. அவர்கள் அதற்கான பின்னணியினை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதை நான் பொறுப்புடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். 

கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது நான் நிகாப் ஆடை தடைக்கு எதிராக கருத்து வெளியிட்டேன் என சில ஊடகங்கள் என் மீது பொய்யான குற்றச்சாட்டொன்றினை முன்வைத்தமையும் அந்த திட்டத்தின் அடிப்படையிலேயே ஆகும். உண்மையில் முஸ்லிம் சமய தலைவர்கள் முன்வைத்த இந்த யோசனைகளை முழு அமைச்சரவையும் ஏற்றுக்கொண்டது. எனினும், ஊடகங்களின் இப்பொய்யான பிரச்சாரத்தினால் எமது பாமர மக்கள் மாத்திரமல்ல சமய தலைவர்களும் ஏமாற்றமடைந்தனர்.

அதன் மூலம் இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் பொறுப்பற்ற நிலையில் செயற்படுவதன் விளைவு தெளிவாகின்றது. வெசாக் தினத்தின் மகிமை அறியாது, வெசாக் உற்சவத்தினை தவிடு பொடியாக்குவதற்கு முயற்சிக்கின்ற இவ்வாறான ஊடகங்கள் எந்த தர்மத்தினை பின்பற்றுகின்றார்கள் என எனக்கு கிரகித்துக் கொள்வதற்கும் கடினமாக இருக்கின்றது. 

இது சாதாரனமானதொரு சந்தர்ப்பம் அல்ல. உலக பயங்கரவாதத்திற்கு நாம் இறையான சந்தர்ப்பமாகும். தொடர்ந்தும் உலக பயங்கரவாதத்திற்கு முகங்கொடுப்பதில் இருந்து விலகி இருப்பதற்கு நாம் தயாராக வேண்டிய சந்தர்ப்பமாகும். 

அவ்வாறான சந்தரப்பங்களில் சமய மற்றும் இனப்பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காக பொய்யான பிரச்சாரங்களை பரப்புகின்ற நபர்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை எமக்கு ஏற்படும். 

பல்வேறு ஊடகங்களின் ஊடாக உங்கள் காதுகளுக்கு எட்டுகின்ற விடயங்கள், கண்ணுக்கு புலப்படுகின்ற விடயங்கள் அனைத்தையும் பச்சையாகவே நம்பிக்கை கொள்ளாது, அவை அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அறிவுபூர்வமாக சிந்தித்து செயற்படுமாறு இந்த சந்தர்ப்பத்தில் நான் உங்கள் அனைவரிடத்திலும் வேண்டிக் கொள்கின்றேன். 

எமக்கு முன்னால் பௌத்தர்களாகிய நாம் மிகவும் விமர்சையாக கொண்டாடுகின்ற வெசாக் தினம் வருகின்றது. வெசாக் தினத்தினை பிற்போட முடியாது. வெசாக் தினத்தில் நாம் அன்னதானம், தியானம் போன்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றோம். 

விஹாராதிபதிகள் அது தொடர்பில் தத்தமது பங்களிப்பு சபைகளுடன் கலந்துரையாடி பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என நான் நம்புகின்றேன். பிரதேசத்தின் பாதுகாப்பு பிரிவினர் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளனர். 

இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் நாட்டுக்காக கைக்கோர்த்து நிற்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக வேண்டி பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த பயங்கரவாத்தினை தோல்வியுறச் செய்வதற்காக வேண்டி தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். 

ஆகவே அந்த பொறுப்பினை மனதில் கொண்டு நாம் அனைவரும் வழமை போல அன்றாட நடவடிக்கைகளை ஆரம்பிப்போம். கவனமாக செயற்படுவோம். பாதுகாப்பு தரப்பினர் உங்களது நன்மைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். 

2019-04-30   

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.