எனது  சிங்கள நண்பன் ஒருவனுக்கு முன்பு ஒரு காதலி இருந்தாள். இவர்கள் இருவரும் ஃபேஸ்புக்கில் எப்போதுமே கல்லடிபட்ட காகங்கள் போல கரைந்து கொண்டு இருப்பார்கள்.

காதலிக்குப் பிடிக்காத பதிவுகளுக்கோ போட்டோக்களுக்கோ நண்பன் லைக் போட்டு இருந்தால் ஏதோ விசாரணை கமிஷன் நடந்து நாலாயிரம் பக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டியளவுக்கு கேள்விகள் பாயும்.இவனும் பதிலுக்கு ஏதாவது சொன்னதும் ஆசீர்வாதம் கிடைத்துவிடும். உடனடி ப்ளொக்.

பின்னர் அடுத்த தொலை பேசி அழைப்பில் சமாதானமாகுவார்கள்.ஆனால் ப்ளொக்கை எடுக்க முடியாது.இரண்டு நாள் கழித்து இருவரும் மீண்டும் நண்பர்களானார்கள் என்று தரித்திரம் பிடித்த டைம்லைன் காட்டித் தொலைக்கும்.மீண்டும் ஏதாவது லடாய் வரும்.மறுபடி ஆசீர்வாதம்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் தென்னாசியாவில் ஒரு நாட்டில் என்ன பிரச்சினை வந்தாலும் முதல் வேளையாய் சோஷியல் மீடியாவை ப்ளொக் செய்கிறார் அந்நாட்டு மன்னர்.செருப்பு சைஸ் போல கலவரங்களின் பருமன், தடையை நீடிக்கும் நாட்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கிறது.

இதை எல்லாம் பார்க்கும் போது வயல் எரித்த கதை முதல் அவரை சுற்றி புனையப்பட்டு இருக்கும் அத்தனை நாடோடித்தனமான புனைவுகளும் ஒரு வேளை நிஜமாகவே நடந்து இருக்குமோ என்று திடுக்கிடும் அச்சம் ஏற்படுகிறது.

(Zafar Ahmed)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.