தேர்தலுக்குப் பின்னைய கருத்துக் கணிப்புக்கள் சரியாகிக் கொண்டு இருக்கின்றன.நிலவரத்தைப் பார்க்கும் போது மோடிதான் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிரதமர்ஆக இருக்கப் போகிறார்.

உலகத்தில் எந்தப் பிரதமரும் மோடி அளவுக்கு கலாய்க்கப்படவில்லை.முற்போக்கு எழுத்தாளர்கள் விகடன் உட்பட ஜனரஞ்சக ஊடகங்கள்,கலைஞர்கள் என்று ஒரு பெரும் பட்டாளம் மோடி மற்றும் அதன் இந்துத்துவா ஆட்சி பற்றி சமூகத்தில் கட்டியெழுப்பிய விம்பத்தைப் பார்த்த போது பா.ஜ.க பத்து தொகுதிகளையாவது கைப்பற்றினாலே பெரிய விடயம் போல இருந்தது.ஆனால் இதுவரை முந்நூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க முன்னணி வகிக்க ரிசல்ட் தலை கீழ்.அதேவேளை தமிழகத்தில் எவ்வளவு முக்கினாலும் தாமரை மலராது என்கிறளவுக்குப் படு தோல்வி.அட்ரஸ் இல்லாமல் போன கமலஹாசரின் நிலவரம் ரஜினிக்கு அனைத்தையும் மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்பதைச் சொல்கிறது.இனி கட்சியாவது காட்போர்டாவது.படத்தில் வேண்டும் என்றால் ஆட்சி அமைத்து மக்களுக்கு அபரிதமான சேவை செய்யட்டும்.

மோடியின் வெற்றி சொல்லவரும் செய்தி என்ன என்று புரியவில்லை.வட கிழக்கு மாநிலங்கள் மோடியை அவரது பொருளாதார மதக் கொள்கைகள அப்படியே ஏற்றுக் கொள்கின்றன என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.

மோடி வெல்வது தமிழகத்தில் பலருக்கு அதிர்ச்சியாய் அமையப் போகிறது.ஆனால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சிகளைத் தாங்கி அதிர்ச்சிக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்ட இலங்கை போன்ற நாட்டில் வசிக்கும் பிரஜைகளுக்கு இதில் அதிர்ச்சி ஏதும் இல்லை.ஒரு மனுஷன் ஒரு மாதத்திற்குள் எத்தனை அதிர்ச்சிகளைத் தாங்குவது ?

(ஸபர் அஹ்மத்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.