"வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ளல்"

கி.பி 1258 பெப்ரவரி மாதம் தாத்தாரியப் படையினர்  பக்தாத் நகரை சுற்றிவளைத்தது. ஜெங்கிஸ்கானின் பேரன் ஹூலகு கான் படையை  வழிநடத்திச் சென்றார். பக்தாத் ஆட்சியாளர் முஹ்தஸிம் அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டார். பக்தாதின் பைதுல் ஹிக்மா போன்ற நூலங்கள் நிர்முலமாக்கப்பட்டன. 

ஹூலகு கான் பக்தாத் நகருக்கு வெளியே முகாமிட்டிருந்தார். பக்தாத் நகரில் உள்ள மிகப்பெரிய அறிஞரை சந்திக்க வேண்டும் என்று செய்தியனுப்பினர். ஆனால் பக்தாதின் எந்த அறிஞரும் ஹூலகு கானை  சந்திக்கவிரும்பவில்லை. 

இறுதியில் பக்தாத் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகமொன்றில் பணியாற்றிய காழிகான் என்ற அறிஞர் ஹூலகு கானை சந்திக்கச்சென்றார்.     காழிகான் தன்னுடன் ஒரு ஒட்டகத்தையும், ஒர் ஆட்டையும், ஒரு சேவலையும் எடுத்துச்சென்றார்.

காழிகான் தாத்தாரிய தளபதி ஹூலகு கானின் முகாமை சென்றடைந்தார். நான் தேடிய பக்தாதின் பெரிய அறிஞரா நீங்கள் ? என்று கேட்டான் ஹூலகு
ஹூலகு கானை நோக்கிய இளம் அறிஞர் காழிகான் அவர்கள் ' நீங்கள் பெரிதாக ஒன்றைத் தேடுவீர்கள் எனில் ஒரு ஓட்டகத்தை எடுத்துவந்திருக்கின்றேன் என்றார்.

தாடியும் கூடிய உருவத்தை எதிர்பார்த்துள்ளீர்கள் என்றால் ' நான் ஒரு ஆட்டை எடுத்துவந்திருக்கின்றேன்' என்றார்.

வலுவான குரல் உடையதை  நீங்கள் தேடுகிறீர்கள் எனில் ' ஒரு சேவலை எடுத்து வந்திருக்கின்றேன்'

நீங்கள் விரும்பியதில் ஒன்றைத் தெரிவுசெய்யலாம் என்றார் இளம் அறிஞர் காழிகான்

இளம் அறிஞர் காழிகான் அறிவு ஞானம் கொடுக்கப்பட்ட  மனிதன் என்பதை உணர்ந்துகொண்ட ஹூலகுகான், அவரை நோக்கி "' மொங்கோலியாவில் இருந்து உங்களை நோக்கி பெரும் படையுடன்  என்னை வரவைத்தது எது"? என்று கேட்டான் .

அதற்கு காழிகான் அவர்கள்
'' எமது செயற்பாடுகளே உன்னை எம்மிடம் வர வைத்தன. இறைவன் எமக்கு வழங்கி அருள்களுக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்கவில்லை.
 நாம் பதவிகளுக்கும், சொத்துக்களுக்கும் அலைந்துகொண்டிருந்தோம் இறைவன் எமக்கு எவற்றையெல்லாம் முன்பு வழங்கியிருந்தானோ அவற்றை எம்மிடமிருந்து எடுத்துக்கொள்வதற்காகவே உன்னை எம்மிடம் அனுப்பினான் என்றார்

ஹூலகுகான், இளம் அறிஞரை  நோக்கி இரண்டாவது கேள்வியைத் தொடுத்தான்

"என்னை பக்தாதிலிருந்து மீண்டும் திருப்பியனுப்பக்கூடியது எது? என்று கேட்டான் அதற்கு அவர்

 " எம்மை நாமே அறிந்துகொண்டால், எமக்கு வழங்கப்பட்டவைகளுக்கு நாம் நன்றி தெரிவித்தால், எமக்கு மத்தியில் பிரச்சினைகளை உருவாக்குவோரை தூரப்படுத்திவிட்டால் இறைவன் நிச்சயமாக உன்னைத் (சோதனையை) திருப்ப அனுப்புவான் என்றார்.

பஸ்ஹான் நவாஸ்
(பட விளக்கம்; ஹூலகுவின் படை பக்தாதை சுற்றிவளைத்த போது )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.