மனித நேயம் இறக்கும் போதே அவர்களின் மதமும் இறந்து விட்டது - உடுகொட ஹஸ்னா

24/4/2019
Hasna Nishpar

ஆலயத்தில் அமைதியுடன் தொழுது கொண்டிருந்த உள்ளங்கள்  கனப் பொழுதில் கேட்ட வெடிச் சத்தத்துடன் நிரந்தரமாய் உறங்கிப் போயின.
உள்ளத்தின் அமைதியில் உறங்கியிருந்த உடல்கள் தெறித்துச் சின்னாபின்னமாயின.

குழந்தை வேண்டி வந்த ஜோடிகள், பிறந்த குழந்தையை  ஆலயம் எடுத்து வந்த சிலர், தொழில் கைக்கூட யேசுவை காண வந்த பலர் , கல்வி வரம் வேண்ட வந்த சிறிசுகள் , காதல் கைக்கூட கேட்டு நின்ற இளசுகள் .....
கேட்டு முடிப்பதற்குள்ளே இயேசு இரத்த வெள்ளத்தில் மூழ்கிய சோகமென்ன...

இலங்கையின் வனப்பை காண வந்து வனமாகிப் போன வெளிநாட்டு பயணிகள் . சொகுசு ஹோட்டல்களில் எப்படி தீவிரம் நுழைந்தது தெரியவில்லை. எண்ணியும் இருக்க மாட்டார்கள் இதை . ..

செய்திகள் எட்டின, முஸ்லிம் தீவிராதிகளின் வேலை இது என்பதாய். உடம்பு சிலிர்த்துப்
போய் கண்ணீர் சிந்தின. மனதுக்குள் “ இல்லை இஸ்லாத்தில் தீவிரவாத த்துக்கு இடமில்லை, இது ஏதோ பிழையான புரிதல்.” என்று புலம்பிக் கொண்டே உறங்கிப் போனேன் .
மறு நாள் காலை முக நூலில் ஆதார பூர்வமான தகவல்களாய் பட்டியலிடப்பட்டிருந்த பெயர்களை கண்டு ஜடமாகி நின்றேன் . கண்ணீர் வழிந்தோடியது .

எந்த ஒரு மதமும் தீவிரவாத்த்தை
போதிக்கவில்லை.மதங்கள் யாவும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறான பாதைகளே. தீவிரவாதம் குடிகொள்ளும் இதயத்துக்குள் மதங்கள் வாழ இடமில்லை.

மனித நேயம் இறக்கும் போதே அவர்களின் மதமும் இறந்து விட்டது. பிறருக்கு அநீதி இழைத்து தமக்கும் அநீதி இழைத்த அவர்கள் நரகின் எரிபொருள்களாகட்டும் .  தீவிரவாதம் குடி கொண்டிருக்கும் அத்தனை மிருகங்களுக்கும் கிடைக்கட்டும் ஓர் பெரும் தண்டனை. இறைவா விரைவில் அமைதி மலரக் கேட்கிறேன்.

-Ummu Norah -
Hasna Nishpar
UDUGODA
Share:

No comments:

Post a Comment