உலகக் கிண்ண கிரிக்கெட் - 2019 : தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது பங்களாதேஷ்


உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் அணிகள் மோதின. நாணய சுழற்சழயை வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இதையடுத்து, பங்களாதேஷ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தமிம் இக்பால் 16 ஓட்டங்களிலும், சவுமியா சர்க்கார் 42 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 

அடுத்து இறங்கிய ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் ஜோடி நிலைத்து நின்று ஆடி 142 ஓட்டங்களை சேர்த்தது. ஷகிப் அல் ஹசன் 75 ஓட்டங்களிலும், மொகமது மிதுன் 21 ஓட்டங்களிலும், முஷ்பிகுர் ரஹிம் 78 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 

இறுதியில், பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்களை எடுத்துள்ளது. மகமதுல்லா 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கமால் இருந்தனர். 

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் பெலுக்வாயோ, கிறீஸ் மாரிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து, 331 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. குயிண்டன் டி காக் 23 ஓட்டங்களிலும், மார்கிராம் 45 ஓட்டங்களிலும், டேவிட் மில்லர் 38 ஓட்டங்களிலும், வான்டெர் துஸ்சென் 41 ஓட்டங்களிலும், பெலுக்வாயோ 8 ஓட்டங்களிலும், கிறிஸ் மாரிஸ் 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 

அணித்தலைவர் டு பிளசிஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி அரை சதமடித்தார். அவர் 62 ஓட்டங்களிரல் ஆட்டமிழந்தார். டுமினி அணியின் வெற்றிக்காக போராடினார். ஆனால் அவரையும் 45 ஓட்டங்களில் வெளியேற்றினர். 

இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 309 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து பங்களாதேஷ் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்தபிசுர் ரகுமான் 3 விக்கெட்டும், மொகமது சபுதின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

(மாலைமலர்)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here