அப்பாவி மீனவர்களுக்காக கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட உதவிகள் அரசாங்கங்களால் 
அவர்களுக்குக்குள்ளேயே பகிரப்பட்டதுடன், தேவையுடையவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி தெரிவித்தார்.

25 வருடங்களாக இதுவே நடைபெற்றது என்பதுடன், தற்போதைய அரசு பதவியேற்ற பின்னர் அந்த நிலைமையை மாற்றி சகலருக்கும் பேதங்களின்றி உதவிகளை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தது, மீனவர்களின் இருப்பிட பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் முகமாக அவர்களுக்கு வீடமைப்பு உதவி வழங்கி வைக்கும் நிகழ்வில் ஆகும். தங்காலை பிரதேச செயலகத்தில் சென்ற (18) நடைபெற்ற இந்நிகழ்வில் 41 பேருக்கு இவ் உதவுத் தொகை வழங்கி வைக்கப்பட்டது. ஒருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டது. இது முதலாவது கட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், "மீனவர்களுக்கு வீடமைக்க, புனர் நிர்மாணம் செய்ய வழங்கப்படும் உதவியே இதுவாகும். 
ஐக்கிய தேசிய கட்சியின் அரசில் இதனை செய்ய முடிந்துள்ளது. சென்ற வருடமும் நூறு பேருக்கு வழங்கினோம். அடுத்த வாரம் 250 பேருக்கு வலைகளுக்கான உதவு தொகை வழங்கவுள்ளோம். யொவுன் புரவில் வைத்து நான் பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததன் பலனாக 100 இளம் மீனவர்களுக்கு உதவு தொகை வழங்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது" என்றார்.

இந் நிகழ்வில் தங்காலை நகர பிதா ரவிது வெதஆரச்சி, தங்காலை பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ரிஹ்மி ஹக்கீம்,
விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில், நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சு


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.