‘இனவாதத் தாக்குதலுடன் தொடர்புபட்ட 450க்கும் மேற்பட்டோர் விடுவிப்பு - றிஷாட்

‘இனவாதத் தாக்குதலுடன் தொடர்புபட்ட 450க்கும் மேற்பட்டோர் விடுவிப்பு - றிஷாட்
___________________________________________

அரசாங்கத்துக்கு நாங்கள் விடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் காெள்ளாதவரை அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்ளாமல் இருப்பதே எமது நிலைப்பாடு.

அத்துடன் அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ள முயற்சிப்பவர்களே என் மீது குற்றச்சாட்டு தெரிவித்திருக்கின்றார்களே எந்தப் பாதுகாப்புப் பிரிவினரும் என்மீது குற்றம் சாட்டவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் குற்றச்சாட்டுகள் சுமதத்ப்படாதவர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படும் நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தேரர்கள் தெரிவித்ததற்காகவோ அல்லது வேறு அரசியல் தலைமைகள் தெரிவித்ததற்காகவோ முஸ்லிம் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமாச் செய்யவில்லை.

மாறாக அன்றைய நிலையில் ரதன தேரரின் உண்ணாவிரதம் மற்றும் ஞானசார தேரரின் எச்சரிக்கை போன்ற காரணத்தினால் முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய அழிவு ஏற்படுவதை தடுப்பதற்கும் அதன் மூலம் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்கவுமே நாங்கள் பதவி விலக தீர்மானித்தோம்.
அத்துடன் நாங்கள் பதவி விலகும்போது அரசாங்கத்துக்கு பல கோரிக்கைகளை முன்வைத்தோம். அந்த கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவிலலை.

மேலும் இனவாதத் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டு கைதான 450க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சிறு சிறு காரணங்களுக்காக முஸ்லிம் மக்கள் கைது செய்யப்பட்டு பிணை வழங்க முடியாத வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
Share:

No comments:

Post a Comment