இரண்டாவது தடவை ஜனாதிபதி ஆசையில் இருக்கும் மைத்தரி சிங்கள பேரினவாதகளின் வாக்குகளுக்காகவே ஞானசார ஐ விடுதலை செய்தார் என்பது அனைவருக்கும் தெரிந்தமையே,
அதற்கு கைம்மாறாக ஞானசார உம் 'ஹிரு' விவாதத்தில் கூட ஜனாதிபதி மைத்ரியை மெச்சிப் பேசி இருந்தார்.

ஜனாதிபதிக்கு ஆதரவாக இருந்த முக்கியமான முஸ்லிம் அரசியல்வாதிகளான அஸாத்ஸாலி, ஹிஸ்புல்லா போன்றவர்களை பேரினவாதிகளின் எதிர்ப்பினால் இழக்கவேண்டிய நிலைமை மைத்ரி இற்கு ஏற்பட்டது ஆக தற்போதைய நிலைமையில்
மொத்தமாக உள்ள 15.7 மில்லியன் மொத்த வாக்குகளில் சுமார் 1.5 மில்லியன் முஸ்லிம் வாக்குகளில் மைத்ரிக்கு, மஸ்தானின் 7298 (2015 election votes of mastan) வாக்குகளை மட்டுமே முஸ்லிம் சமூகத்தில் இருந்து எதிர்பார்க்கலாம்.(பௌஸி,பைஸர் முஸ்தபா தேசிய பட்டியல்)
ஆக மைத்ரி இற்கு முஸ்லிம்களின் மத்தியில் வீழ்ந்துள்ள செல்வாக்கை மீளப்பெற ஏதாவது உதவிகளோ, கண்துடைப்புகளோ செய்ய வேண்டிய கட்டாய நிலைமை உள்ளது.
இந்நிலையையே ACJU பயன்படுத்தி ஜனாதிபதியிடம் 3 முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அந்தக்  கடிதத்தில் முஸ்லிம்களின் பாதுகாப்பு, சிறைகளில் உள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்தல், முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் ஆகிய 3 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

நாம் கேலிகள் செய்தாலும் மைத்ரிதான் இன்னும் நம் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற அடிப்படையில் அவரை முற்று முழுதாக ஒதுக்கவும் முடியாது.

நேற்றைய அல்மஷூரா செய்தியின்படி Acju உடனான கலந்துரையாடல்களின் பின்னரே நமது அமைச்சர் மிகவும் பாராட்டத்தக்க இன்றைய வரலாற்று முடிவையும் எடுத்திருக்கின்றார்கள்.

அரசியலை அரசியலாக புரிந்துகொள்வோம்.
எனது கருத்தில் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்.

(Arkam Mohamed)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.