1. JVP உடனான பேச்சுவார்த்தைகள்
 2. TNA உடனான பேச்சுவார்த்தைகள்
 3. மலையக கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள்
 4. மேல் மாகாண மக்கள் முன்னணியுடனான பேச்சுவார்த்தைகள்
 5. பௌத்த மகா சங்கங்களுடனான பேச்சுவார்த்தைகள்
 6. கார்டினல் மல்கம் ரன்ஜித்துடனான பேச்சுவார்த்தைகள்
 7. எதிர்க்கட்சி தலைவருடனான சந்திப்பு
 8. வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பு

இவர்களுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் சந்திப்புக்களில் முஸ்லிம்களின் பாதுகாப்பு, வீனான கைதுகள், சிறையடைப்பு, விடுதலை, திட்டமிட்ட குடிமனைகள் மற்றும் பொருளாதார நிலைகள் மீதான தாக்குதல், மத நிறுவனங்கள் மற்றும் பள்ளிவாயல்கள் மீதான தாக்குதல் போன்ற விடயங்கள் பற்றி பேசப்படவுள்ளன.

மேற்கூறப்பட்ட விடயங்களை எதிர்காலத்தில் கையாள்வது தொடர்பிலும், அவற்றில் மேற்கூறப்பட்ட தரப்பினர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு என்பன தொடர்பாகவும் பேசப்படவுள்ளன.

குறிப்பாக பதவிகளை விடவும், முஸ்லிம்கள் இந்த நாட்டில் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதும், இயல்புநிலைக்கு திரும்புவதுமே, முஸ்லிம் அரசியல் தலைமைகளின் முக்கிய நோக்கம் என்பது தெளிவாக உணர்த்தப்படவுள்ளது.

இவற்றில் நமது தலைமைகள் வெற்றி பெறவும் நமது சமூகம் நன்மையடையவும் அல்லாஹ்வை பிரார்த்தியுங்கள்.

நன்றி - ஏ.எல்.தவம் (முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.