மீண்டும் இலங்கையின் ஜனாதிபதியை தீர்மானிக்கப்போகும் சிறுபான்மை இனங்கள்

தோல்வியுரும் ஆட்சியாளனின் இறுதி ஆயுதம் இனவாதம் என்பது இலங்கை அரசியலைப் பொருத்தவரை நிதர்சன உண்மை. பேருவளை கலவரம் முதல் இன்று வரை இடம்பெற்ற அனைத்துமே அரசியல் திட்டம் என்பது அனைவரும் அறிந்தது.

இலங்கை அரசியலில் முடிசூடா மன்னனாக வலம் வந்த முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒரு அரசியல் மேதை என்றே கூறலாம். காரணம் எந்த அரசியல்வாதியோ அல்லது சாதரண மக்களோ அனைவரையும் அனைத்துக்கொண்டே செல்ல முட்பட்டவர். இதற்கு நல்ல உதாரணம் தமிழ், மொழியை கற்று அது ஐ.நா சபையில் கூட பேசி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உள்ளங்களை வெல்வதற்கு முயற்சித்தார். எனினும் இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட அநீதி தமிழ் மக்களின் உள்ளத்தில் வரை உள்வாங்கச்செய்யவில்லை. அதே நேரம் மஹிந்த ராஜபக்சவுடன் மிக நெருக்கமாக மாறிய சீனா பண்டைய சீனாவின் பட்டுப்பாதையின் கேந்திர நிலையமாக இருந்த இலங்கையை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நவீன பட்டுப்பாதையை உருவாக்க திட்டமிட்டது.

இது அமெரிக்காவின் கண்களை உறுத்தியது என்பது அனைவரும் அறிந்த உண்மை. எனவே சீன ஆதரவு அரசாங்கத்தை மாற்ற வேண்டிய தேவை மேற்கத்திய வல்லரசுகளுக்கு இருந்தது. எனினும் முடிசூடா மன்னனாக இருந்த மஹிந்த ராஜபக்சவை வீழ்த்த அவரது உள்வீட்டிலிருந்த ஒருவர் மூலமே முடியும் என திட்டம் தீட்டப்பட்டது. இதற்கான திட்டங்களில் முக்கிய பங்காற்றியது பொது பல சேனா. இதற்காக மஹிந்த ராஜபக்சவின் உள்வீட்டிலிருந்தே தெரிவு செய்யப்பட்ட நபர் கோத்தாபாய ராஜபக்ச.

ஆம்!
அமெரிக்க பிரஜை மட்டுமல்ல இஸ்ரேலில் இராணு கற்கை கற்ற கோத்தாபாய அமெரிக்க ஆதரவாளராக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. மஹிந்த ராஜபக்ச அவர்களின் காலத்தில் தனி அரசாக முன்னாள் பாதுகாப்பச்செயலாளர் செயற்பட்டிருந்தமை அனைவரும் அறிந்ததே. சில சந்தர்ப்பங்களில் மஹிந்த ராஜபக்ச அவர்களே கோத்தாபயவை கண்டு பயந்ததாக ஒரு சில அரசியல்வாதிகள் கூறக்கேட்டிருக்கிறேன்.

இத்தகைய செயற்பாட்டைக்கொண்ட கோத்தாபாயவுக்கு தான் ஜனாதிபதியாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கலாம் அல்லது ஏறபடுத்தப்பட்டிருக்கலாம். இதன் விளைவே பொது பல சேனா கோத்தாபாய ராஜபக்சவின் கீழ் கொண்டுவரப்பட்டு செயற்பட்டது.
 ( தவ்ஹீத் ஜமாத் உம் அவரின் கீழேயே செயல்பட்டதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.)
இந்த நிலையில் ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்த ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்த வல்லரசுக்கள் காயை நாகர்த்தின. ஏற்கனவே தமிழ் மக்களின் மனதில் மஹிந்த ராஜபக்ச இடம்பிடக்காதிருந்தமை கூடுதல் பலம்.

எனினும் முஸ்லிம்களின் மனதிலிருந்து குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களிடமிருந்து வேற்றுமைப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. இந்த பின்னனியிலேயே 2012ம் முதல் பொது பல சேனாவின் செயற்பாடுகள் ஆரம்பமாகின. அந்த நேரம் உட்கட்சிப் பூசலால் சிதைந்து போயிருந்த ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை பிடிப்பது சாத்தியமே இல்லாத நிலையில் 2013ம் ஆண்டு ஊடக சந்திப்பொன்றில் 2015ம் ஆண்டு தமது ஆட்சி என குறிப்பிட்டதை பலரும் நக்கலடித்தனர்.

ஆனால் அனைத்தும் திட்டப்படி நடந்தது. பொது பல சேனாவின் ஆட்டம் ஆரம்பமானது. மஹிந்த ராஜபக்சவினால் கட்டுப்படுத்த முடியாமல் போனது காரணம் சேனாவும் சாரவும் செயற்பட்டது கோத்தாபாயவின் கீழ்.

பேருவளை கலவரம் ஏற்பட்டது, முஸ்லிம்களின் மனதிலிருந்தும் மஹிந்த வேறாகினார். 2020 ஜனாதிபதி தேர்தலை நோக்கிய கோத்தாபாயவின் கனவும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி மாற்ற கனவும் மைத்தரிபால சிறிசேனவினால் ஒருங்கே நிறைவேறியது. அமெரிக்காவனது திட்டம் கச்சிதமாக நிறைவேறியது.

சீனாவின் திட்டம் ஆட்டம் கண்டது. எனினும் சீனா நிலை குலையவில்லை. இலங்கையின் சனாதிபதியை தனபக்கம் ஈர்க்க ஆரம்பித்தது. இதற்கான பேரினவாத்த்தை ஆயுதமாக பயன்படுத்த சீனா ஆரம்பித்தது. 2016 முதல் இன்று வரை முஸ்லிம்களுக்கு எதிராக பல கலவரங்கள் உருவாக்கப்பட்டன. மஹசென் பலகாய போன்ற புதிய அமைப்புகள் தோற்றம் பெற்றன. அனைத்துப்பலிகளும் ஐக்கிய தேசிய கட்சியின் மீது விழும் வண்ணம் காய்கள் நகர்த்தப்பட்டன. சிங்கள மக்களிடமிருந்து ஐக்கிய தேசிய கட்சியை வெறுக்க வைக்கும் செயற்பாடுகள் நடைபெற்றன். ஜனாதிபதி சீனா சென்றார்.
முன்னால்ஜனாதிபதயும் பின்னலேயே சென்றார்.

ஈஸ்டர் தீவிரவாத தாக்குதலை பயன்படுத்தி அமைதியாக திருகோணமலை துறைமுகப்பகுதியில் தனது மிகப்பெரிய முகாமை நிறுவ அமெரிக்கா திட்டமிட்டது. ஈஸ்டர் தாக்குதலின் மூலம் கோத்தாபாயவின் தேவையை பெரும்பான்மை மக்களிடையே உணரச்செய்யப்பட்டது. சிறுபான்மை மக்களின் வாக்கு இன்றியே கோத்தாபாய தெரிவு செய்யப்பட வாய்ப்பிருந்தது .
ஆனால் தற்போதே சீனாவின் ஆட்டம் ஆரம்பமானது. இதுவரை காலமும் சிங்கள மக்கள் மத்தியில்   காமடியனாக இருந்த ஜனாதிபதி மீண்டும் இரண்டாவது தடவை ஜனாதிபதியாக வர வாய்ப்பே இல்லாத நிலையில் மீண்டும் வாய்ப்பை உருவாக்கியது சீனா. அதில் ஒன்றுதான் குருநாகல் கலவரம் மற்றையது ஞான சார தேரர் விடுதலை . இன்னும் ஓரிரு தினங்களில் துமிந்த சில்வாவும் விடுதலை செய்யப்படக்கூடும்.

அடுத்து வரும் நாட்களில் இனவாதம் இலங்கையில் தலை விரித்தாடப்ப போகின்றது. இவை அனைத்தின் மூலமும் ஜனாதிபதி பெரும்பான்மை மக்களிடையே தான் இழந்த கெளரவத்தை ஓரளவேனும் பெற்றுக் கொள்வார். அதற்கு மேலதிகமாக அடுத்த ஜனாதிபதியாக மைத்தரிபால சிரிசேனவும் பிரதமாரக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஹபக்சவும் இருப்பார்கள் எனும் ஒப்பந்தத்தில் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவும் சீனா மூலம் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைக்கும். இதன் மூலம் பெரும்பான்மை வாக்குகள் முற்று முழுதாக தற்போதைய ஜனாதிபதிக்கே செல்லும். ஆனால் மறுபுறம் ஜனாதிபதியாக கனவு கண்டு கொண்டிருக்கும் கோத்தாபாய தன் அண்ணனை எதிர்த்து போட்டியிடும் பட்சத்தில் பெரும்பான்மை வாக்குகள் இரண்டாக உடையும் காரணம் பெரும்பான்மை மக்களின் பாதுகாவலராக கொத்தாபாயவை அம்மக்கள் என்னுவது.

இச்சமரின் மூன்றாவது அணியாக ஐக்கிய தேசிய கட்சியும் தனது வேட்பாளரை களம் நிறுத்த 3 வேட்பாளர்களுக்கும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றியமையாததாக மாறும்.
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் உள்ள நிலையில் சிறபான்மை மக்கள் பிரதிநிதிகள் ஒன்றாக செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தமிழ் மக்களிடமருந்து வேறாகி முஸ்லிம்கள் செய்த வரலாற்றுத்தவறை மீண்டும் செய்யாமல் வெற்றி பெற வாய்ப்புள்ள வேட்பாளருடன் உரிய ஒப்பந்தங்கள் மூலம் ஜனநாயக ரீதியாக சிறுபான்மை மக்கள் உரிமைகளைப் பெற்று வாழ முடியும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

மேற்படி நான் குறிப்பிட்ட தகவல்கள் ஒரு சில நடுநிலை சிங்கள நாளிதழ்களலருந்து பெற்றுக்கொண்டேன் என்பது குறிப்பிடத்தக்கது.

📝Azaff Mohamed 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.