வைத்தியசாலைகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் முஸ்லிம்கள் பற்றி, கொடிய விஷத்தை கக்குகிறார் காமினி லொக்குகே!

கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில, புற்றுநோய் வைத்தியசாலை போன்ற வைத்தியசாலைகளுக்கு வரும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் முஸ்லிம் அமைப்பு தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் கோருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

எந்த அடிப்படையில் இந்த அமைப்பு நான்கு வருடங்களுக்கு மேலாக மக்களுக்கு இலவசமாக உணவை வழங்கி வருகிறது என்பது பிரச்சினைக்குரியது எனவும் அவர் இதனை கூறியுள்ளார்.

எந்த நோக்கத்தில் இந்த அமைப் இலவசமாக உணவை வழங்கி வருகிறது என்பது சந்தேகத்திற்குரியது. உணவு மூலம் பெண்கள் கர்ப்பம் தரிப்பது தடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகமும் உள்ளது. இவர்களுக்கு இந்தளவுக்கு இருக்கும் அக்கறை என்ன?. இதனை சுகாதார அதிகரிகள் உடனடியாக தேடிப்பார்க்க வேண்டும்.

இந்த அமைப்பினர் அரசாங்க வைத்தியசாலைக்கு வரும் பௌத்த மக்களிடம் சென்று துண்டு சீட்டு ஒன்றை வழங்குகின்றனர். விசேடமாக பெண்களுக்கே இந்த துண்டு சீட்டு வழங்கப்படுகிறது. சிகிச்சை பெற்ற பின்னர் வந்து உணவு சாப்பிடுமாறு கூறுகின்றனர். கோழி இறைச்சி, காய்கறி, பருப்பு உட்பட உணவுகளை வழங்குகின்றனர்.

இது குறித்து தேடிப்பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

  1. அவர் அப்படிச் சொல்லவில்லை என ஒரு ஓடியோ க்ளிப் உலாவுகிறதே...

    SIYANENEWS உம், திவயின பத்திரிகை போல தேடிப் பார்க்காமல் வரும் எல்லா குப்பைகளையும் கொட்டித் தீர்க்கும் குப்பையாக இருக்காது என நம்புகிறோம்.

    பதிலளிநீக்கு

Blogger இயக்குவது.