தாக்குதல்கள் சம்பவங்களால் பல்வேறு இழப்புகளை சந்தித்திருக்கும் இலங்கையர்களுக்கு தாராளமனதுடன்
நமது செல்வங்களை வாரிவழங்கும் ஈகைத் திருநாளாக இந்த ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவோம் என பாராளுமன்ற உறுப்பினர்
எம்.எச். அப்துல் ஹலீம் தெரிவித்தார்.

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான தவறுகள் ஆகியவற்றிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டும் நபி அவர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கினார்கள்.

இந்த அடிப்படையில் நோன்பு கடமையாக்கப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமும் இவ்வாரு பெருநாள் தர்மத்தை கொடுக்கவேண்டியது கட்டாயமாகும்.
நம்நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பல்வேறு அசம்பாவிதங்களால் பாதிப்படைந்த மக்களுக்கு எம்மால் முடிந்த தான தர்மத்தையும் இந்த சந்தர்ப்பத்தில் வழங்குவதால் அவர்களின் துன்பங்களில் பங்கெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு நமக்கு கிட்டும்.

மனிதனை மனிதனாக வாழ்வாங்கு வாழ வைப்பதற்கும் மனித வாழ்வை செம்மைப்படுத்துவதற்கும் நோன்பு மிக முக்கித்துவம் வாய்ந்தவையாகும்.
அதேபோன்று நோன்பானது ஏழையின் பிணி தீர்க்கக் கூடியவை. பாவக் கறைகளை அகற்றக் கூடியவை பிறர் துன்பம் விளை வித்தாலும் சகிப்புத் தன்மையாடு வாழ்வதற்கான நித்திய பூரணத்துவம் கொண்டவை என பல சிறப்புக்கள் பொதிந்தவையே.

இந்த இனிய நன்நாளில் எம்மிடையே காணப்படும் கருத்து வேறுபாடுகளை மறந்து இதய சுத்தியுடன் எமது மார்க்கத்தின் நெறிமுறைக்கு இசைந்தவாறு இந்நாட்டில் வாழும் ஏனைய மக்களையும் மதித்து எமது கலாசாரத்தின் உயர் விழுமிங்யகளையும் நபிகள் நாயகத்தின் அருட்குண்ங்களையும் இஸ்லாமிய புனிதர்களின் உத்தம செயல்களையும் தியாகங்களை உலகறியச் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

 எனவே இதற்காக இலங்கை மக்களாகிய நாம் சகோதராகிய வாஞ்சையுடன் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்பதோடு சகலருக்கும் என்னுடைய ஈத்துல் பித்ர் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.