யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்திகளாக இரு சிறுபான்மை சமூகங்களும் இருந்து வருகிறது

அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும், மஹிந்த பிரதமராகவும் வரக்கூடாது என்ற கோசத்தில் ம.வி.மு. இனரால் அரசாங்கத்திற்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனை 11ஆம் திகதி தோல்வியில் முடிந்தது.

நாட்டில் ஆட்சியில் இருக்கும் ஐ.தே.க. முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் இனவாதிகளால் மேற்கொள்ளப்படும்போது தடுத்து நிறுத்த தவறியது. மஹிந்தவின் அழத்கமயும் ரனிலின் திகனயும் கடந்தகாலங்களில் எமக்கு கற்றுத்தந்த பாடங்கள்.

உரிமை அரசியல் அஷ்ரபுடன் மரணித்துவிட்டது இன்று நமது சமூகம் எதிர்பார்ப்பது அபிவிருத்தி அரசியலை மாத்திரமே. முஸ்லிம்களுக்கான தனியார் சட்டத்தை இல்லாமல் செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. விவாக, விவாகரத்து சட்டத்தை மாற்றுவதற்குரிய முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டவேளையில் பல உலமாசபை, அரசியல் கட்சிகள் இன்னும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முன்மொழிவுகளை சமர்ப்பித்து தங்களால் முடிந்த பங்களிப்புகளை செய்திருந்தது. ஐரோப்பிய சங்கத்தினைடைய வரிச் சலுகைகளுக்குகூட இது மிகப்பெரும் பேசு பொருளாக மாறியிருந்தது . இறுதியில் அரசியல் இழுபறிகளால் இன்றுவரை கிடப்பில் உள்ள சட்டதிருத்தம் ஒட்டுமொத்தத்தில் “ஓர் இலங்கை ஓர் சட்டம்” என்ற தொணிப்மொருளில் முஸ்லிம்களுக்கான தனியார் சட்டங்கோவையே இல்லாமல் செய்யப்படுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் ஏற்பட்ட 21/4 சம்பவம் என்பது இத்தனைகாலமும் முஸ்லிம்களுக்கெதிராக புரையோடிப்போய்கிடந்த அத்தனை காழ்ப்புணர்வுகளையும் கட்சிதமாக அரங்கேற்றுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

தலைவர் அஷ்ரப் வரையிலான அரசியல் தலைமைகள் உரிமைக்காக போராடி வெற்றிகண்டபோதிலும் அவருக்கு பிந்திய காலத்தில் முஸ்லிம் மக்களின் பிரதான அரசியல் எதிர்பார்ப்பாக அபிவிருத்தியே முன்னிலைப்படுத்தப்பட்டது. றோட்டுப் போட்டால் வோட்டுப் போடுவொம் என்கின்ற கோசம் அதிகமான பிரதேசங்களில் உருப்பெற்றதால் அந்தந்த பிரதேச குறுநில மன்னர்கள் தமது ஆதிக்கத்தை பலப்படுத்திக்கொள்ள அபிவிருத்தி என்கின்ற மாயையை தமது அரசியல் மூலதனமாக பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

அபிவிருத்திக்காகவும் தனிப்பட்ட சலுகைகளுக்காகவும் உரிமைகளை விட்டுக்கொடுக்கும் அரசியல் பெரும்பாண்மை சக்திகளின் நிகழ்ச்சிநிரல்களை நாடளாவியரீதியில் முஸ்லிம்களிற்கெதிராக கட்டவிழ்த்துவிடுவதற்கு வழிவகுத்தது.

இதனுடைய ஒட்டுமொத்த விழைவு இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கென்றிருந்த தனியார் சட்டம் முஸ்லிம்களுக்கான விசேட சலுகைகள் எல்லாம் இல்லாதொழிக்கப்படுகின்ற ஓர் நிலைக்கு முஷ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.

கட்சி சார்ந்த அரசியலுக்கு முன்னுரிமை கொடுத்து  அல்லது அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்து முன்னிலைப்படுத்தப்பட்ட தலைமகள் 21/4 சம்பவத்திற்குபிறகு சமூகம் சார்ந்து பேசவேண்டிய எத்தனையோ சந்தர்ப்பங்களில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கின்ற ஆதாரப்பூர்வமான அல்லது ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்வதிலேயே தமது காலத்தை கழிந்துகொண்டிருக்கின்றார்கள்.

தகுதியான தலைமைத்துவத்தின் வறுமைநிலையை எமது சமூகம் 21/4 இற்குபிறகு மிகவும் நன்றாகவே உணர்ந்துள்ளது அந்தவகையில் இலங்கையில் வாழ்கின்ற ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தன்னந்தனியாக நின்று நாட்டிற்குள்ளும் சர்வதேசத்திற்கும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காக குரல்கொடுக்கின்ற ஓரே ஓர் தலைவராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத்தலைவர் கௌரவ அல் ஹாஜ் றஊப் ஹக்கீம் திகழ்கின்றார் என்றார் அதை இலங்கை முஸ்லிம்கள் நிராகரிப்பதற்கு தனிப்பட்ட காரணத்தைதவிர வேறு எந்த நியாயமான காரணத்தையும் முன்வைக்க முடியாது.

புலிகளால் முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்பட்ட அநீதிகளை எமது சமூகம் ஆவணப்படுத்த தவறிவிட்டது என்கின்ற மிகப்பெரிய ஓர் குறை இன்றுவரை நீண்டுகொண்டுதான் இருக்கின்றது. அன்று குருக்கல்மட புதைகுழி தோண்டுகின்ற விடயத்திலும் பெரும்பாண்மை கட்சியின் உபதலைவராக இருந்த கருனாவைக்காப்பாற்றுவதற்காக தாம் கட்சி ரீதியாக பெற்றிருந்த பதவிகளுக்கு விஷ்வாவாசத்தை வெளிப்படுத்தி அப்புதைகுழியை தோண்டாமல் திட்டமிட்டு தடுத்து கருனாவை காப்பாற்றுவதாக நினைத்து முஸ்லிம் சமூகத்திற்கு புலிகளால் இழைக்கப்பட்ட இனப்படுகொலைகளை நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் வெளிக்கொண்டுவராமல் செய்யப்பட்டது. இதுகூட நமது அரசியல் தோல்வியே நமது இருப்பைப்பற்றி பேசுக்கின்ற வரலாற்றுப்பக்கங்களில் இவைகள் இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நாட்டில் பெரும்பான்மை ஆட்சி அமைக்கின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் அதனை எந்தக்கட்சியினர் அமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கின்ற சமூகமாக யுத்தகாலங்களில் பெரும்பாலும் அது முஸ்லிம் சமூகமாகவே இருந்துவந்துள்ளது. யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இதனை தீர்மானிக்கும் விடயத்தில் பிரதான இரண்டு சிறுபான்மை சமூகங்களும் இருந்துவருகின்றது. இதனை எப்படி சிறுபான்மை சமூகங்கள் கையாழவேண்டும் என்பதுபற்றி ஆழமாக சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் பெரும்பான்மையிடம் நாட்டை துண்டாடி தனிநாட்டிற்காக போராடிய சமூகம் இன்று சக சிறுபான்மை சமூகத்தோடு பிரதேச செயலக பிரிவிற்காக இனவாதம் பேசுவது ஆச்சரியமாகவுள்ளது.

பொறியியலாளர் ஷிப்லி பாரூக்
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் 
Share:

இரவு 10 மணிக்குப் பின்னர் மாணவர்கள் வீதியில் இருந்தால் அழைத்துச் செல்வோம் - கஹட்டோவிட்டவில், நிட்டம்புவ புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

இரவு 10 மணிக்குப் பின்னர் மாணவர்கள் வீதியில் இருந்தால் அழைத்துச் செல்வோம்
_-பொலிஸ்_

💦மாணவர்கள் மற்றும் இளைஞர்களை போதைப் பொருள் பாவனையை விட்டும் காப்பாற்ற வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் இரவு 10 மணிக்குப் பின்னர் வீதிகளில் கூடிக் கதைத்துக் கொண்டு இருக்கும் சிறுவர்களும், இளைஞர்களும் பொலிஸுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் புதிதாக பதவியேற்றுள்ள நிலையப் பொறுப்பதிகாரி அனுர குணவர்தன தெரிவித்தார்.

💦நிட்டம்புவ சமூக பொலிஸ் பிரிவினால் நேற்று (12) இரவு கஹட்டோவிட்ட மகளிர் கல்வி வட்ட கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊர் பிரமுகர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

💦பள்ளிவாயல்கள் மூலம் மாணவர்களுக்கு இந்த செய்தியை அறிவியுங்கள். மாணவர்கள் இரவில் வீதிகளில் கதைத்துக் கொண்டிருக்க வேண்டாம் என பாடசாலைகளில் மாணவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். பெற்றோர்கள் இந்த விடயத்தில் கருத்தில் கொள்ளுங்கள். நாம் அழைத்துச் சென்றதன் பின்னர் எமக்கு சட்டத்தை நிறைவேற்ற இடமளியுங்கள்.

💦முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள இளைஞர்களை போதையிலிருந்து விடுவிப்பதற்கான உதவிகளை பொலிஸாருக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். சட்ட முரணான செயற்பாடுகள் குறித்த தகவல்களை யாராவது அறிந்திருந்தால், அது தொடர்பில் பொலிஸாருக்கு உடன் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

💦வெளிப் பிரதேசங்களிலிருந்து வந்து உங்களது ஊர்களில் குடியேறியுள்ளவர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருங்கள். அவர்கள் சிலபோது பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடலாம். அதனால், முழு கிராம மக்களும் துன்பத்தை அனுபவிக்க நேரிடும் எனவும் நிட்டம்புவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

💦புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் அத்தியட்சகர் அனுர குணவர்த, இடமாற்றம் பெற்று நிட்டம்புவ பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்துள்ளார். இவருடைய வருகையின் பின்னர் கஹட்டோவிட்ட முஸ்லிம் மக்களுடன் நடாத்திய முதலாவது சந்திப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

(Rcd)
Share:

வினாப்பத்திரத்தில் குளறுபடி : சகல தமிழ் மொழிமூல விண்ணப்பதாரிகளையும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்குமாறு பணிப்புரைமேல்மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான தமிழ் மொழிமூல போட்டிப்பரீட்சைக்கு தோற்றிய சகல விண்ணப்பதாரிகளையும் நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பு விடுக்குமாறு மேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மேல்மாகாண அரச சேவை ஆணைக்குழுவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 

மேல் மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் போட்டிப் பரீட்சை கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களிள் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்றது. 

இப்பரீட்சையில் தமிழ் மொழிமூல பரீட்சை வினாப்பத்திரத்தில் குளறுபடிகள் காணப்பட்டதாக வந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, குறித்த நேர்முகப்பரீட்சைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்டமாக சுமார் 250 பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார். 

(நுஸ்கி முக்தார்)  
Share:

அப்டேட் : டாக்டர் ஷாபிக்கு 25 வரை விளக்கமறியல் உத்தரவுகுருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சி ஐ டி அவரை இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது.
அவரின் மூன்று மாத கால தடுப்புக் காவல் உத்தரவை சட்ட மா அதிபர் திணைக்களம் வாபஸ் பெற்றதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

டாக்டரை தடுத்துவைக்க போதியளவு காரணங்கள் இல்லையென பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

இன்றைய தினம் சிங்கள அமைப்புக்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடி டாக்டரின் விடுதலையை எதிர்த்தபடி கருத்துக்களை ஆங்காங்கே வெளியிட்டு வந்ததால் அங்கு ஒருவித பதற்ற நிலை இருந்தது.

(Tamilan)
Share:

டாக்டர் ஷாபியை தடுத்து வைப்பதற்கான அனுமதி இரத்து


குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபிக்கு வழங்கப்பட்டிருந்த, 3 மாத கால தடுப்புக் காவல் உத்தரவு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (11) வைத்தியர் ஷாபி, குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான  வழக்கு விசாரணைக்கு எடுத்து ​கொள்ளப்பட்ட போது, இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தக் கூடிய சாட்சிகள் போதுமானதாக இல்லை எனத்  தெரிவித்து, நேற்றைய தினம் வழங்கப்பட்ட தடுப்பு காவல் உத்தரவையும் இரத்துச் செய்வதாக பிரதி சொலிஸிட்டர் நாயகம் துசின் முதலிகே அறிவித்துள்ளார்.
TM
Share:

மாவட்ட மட்டத்தில் அலங்கார மீன் வளர்ப்பு மையங்கள் மற்றும் மீன் ஏற்றுமதி வலயங்கள் அமைக்கப்படும்

நாட்டுக்கு பாரிய வெளிநாட்டு வருமானத்தை ஈட்டவும், கிராமிய மக்களின் பொருளாதாரத்தை தாமாக பலப்படுத்துவதற்கும் மாவட்ட மட்டத்தில் அலங்கார மீன் வளர்ப்பு மையங்கள், மீன் ஏற்றுமதி வலயங்களை அமைத்து உலகில் பரந்தளவில் கேள்வியுள்ள கடல் மீன்கள் மற்றும் கடல் தாவர (கடல் பாசி)  வளர்ப்பினை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி அவர்கள் தெரிவித்தார். 

இராஜாங்க அமைச்சர் தெரிவித்தது, அந்த வேலைத் திட்டத்திற்கு சமாந்தரமாக உலகில் அதிக கேள்வியும், பெறுமதியும் மிக்க மீன்களை இலங்கையில் வளர்க்க  கடல் கூண்டுகளில் (Sea Cages) மீன் வளர்ப்பின் முதல் கட்ட வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு 15, மட்டக்குளி, காக்கைதீவில் இருக்கும் தேசிய நீர்வள மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஸ்தாபிக்கப்பட்ட மீன் வளர்ப்பு நிலையம் மற்றும் கடல் தாவர வளர்ப்பு நிலையம் ஆகியவற்றை திறந்து வைக்கும் நிகழ்விலேயே இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி மேற்கண்டவாறு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன், அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவன்சந்த்ர NARA நிறுவனத்தின் தலைவர் ஏ.டீ.எதிரிசிங்க உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ரிஹ்மி ஹக்கீம்,
விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சுShare:

பராக்கிரம சமுத்திரத்தைத் திருத்தியமைத்த முஸ்லிம் பொறியியலாளரின் தியாகத்தை மெச்சிய ஜனாதிபதி

மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசனத் திட்டங்களை நிர்மாணித்தவர்களை பாராட்டும் நிகழ்வில் திங்களன்று (08) உரையாற்றிய ஜனாதிபதி, பராக்கிரம சமுத்திரத்தைத் திருத்தியமைத்த முஸ்லிம் பொறியியலாளரின் தியாகத்தைக் குறிப்பிட்டு உரையாற்றினார்.

பராக்கிய சமுத்திரம் பராக்கிரமபாகு மன்னனால் மூன்று குளங்களை இணைத்துக் கட்டப்பட்டது. 1930 களில் டீ.எஸ். சேனாநாயக்க இந்தக் குளத்தைத் திருத்தியமைப்பதற்குத் தீர்மானித்து, அந்தப் பொறுப்பை நீர்ப்பாசனப் பொறியியலாளரான இஸ்மாயில் எனும் முஸ்லிம் பொறியியலாளரிடம் ஒப்படைத்தார். இந்தத் தகவல் பொலன்னறுவ நீர்ப்பாசன அலுவலகத்தின் பதிவுப் புத்தகத்தில் உள்ளது.

உடைந்திருந்த பராக்கிரம சமுத்திரத்தை மீளவும் திருத்தியமைக்க முடியும் என பொறியியலாளர் இஸ்மாயில் டீ.எஸ். சேனாநாயக்கவுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து அந்தப் பணியைத் தொடர்வதற்கு அவர் அனுமதியளித்தார். இந்தப் பணியின் இறுதிக் கட்ட வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது பொறியியலாளர் இஸ்மாயிலுடை குழந்தை கடுமையான சுகவீனமுற்றிருப்பதாக கொழும்பிலிருந்து தந்தி வந்திருந்தது. உடனடியாகப் புறப்பட்டு வருமாறு அவருடைய மனைவி அதில் குறிப்பிட்டிருந்தார்.

உடனடியாகச் செல்வதற்கு அவருடைய மனம் விரும்பியபோதும் அவர் வேலையின் முக்கியத்துவத்தைக் கருதி அவ்விடத்திலிருந்து செல்வதைத் தவிர்த்துக் கொண்டார். அவரது சக ஊழியர்கள் வேலையை தாங்கள் கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் சென்று வாருங்கள் என்று கூறியபோதும், இன்னும் இரண்டு வாரங்களில் பெய்யப் போகும் மழையினால் எங்களது பணி பாதிக்கப்பட முடியும். எனவே, வேலையை முடித்து விட்டே செல்கிறேன் என்று முடிவெடுத்து தனது பணியைத் தொடர்ந்தார்.

இரண்டு வாரங்களின் பின்னர் மீண்டும் வீட்டிலிருந்து தந்தி வருந்திருந்தது. குழந்தை இறந்து விட்டதாகவும், உடனே வீடு வரும் படியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் தனது பணியை முடித்து விட்டு குழந்தையின் இறுதிக் கிரியைக்காகத்தான் கொழும்புக்குப் போய்ச் சேர்ந்தார்.

1950களுக்குப் பின்னர் இருந்துதான் சிங்கள-தமிழ்-முஸ்லிம் பிரச்சினைகள் உருவாகி, அபிவிருத்திப் பணிகள் வீழ்ச்சியடையும் அளவுக்கு இன, மத அடிப்படையில் அரசியல் கட்சிகள் உருவாகி நாங்கள் வீழ்ச்சியடையும் நிலைக்கு வந்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

Meelparvai.net
Share:

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கொழும்பில் படகுச் சேவை ஆரம்பம்( ஐ. ஏ. காதிர் கான் )

   போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்,  புறக்கோட்டையிலிருந்து கொம்பனித்தெரு -  யூனியன் பிளேஸ் வரை படகுச் சேவையை ஆரம்பிக்க, காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் நடவடிக்கைகளை  எடுத்துள்ளது.
   இதற்கமைய, இலங்கைக்  கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பயணிகள் படகில் முதலாவது கண்காணிப்பு சுற்றுப்பயணத்தை, நகர்ப்புற மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கொண்டார்.
   இந்தப் படகுச்  சேவையை ஆரம்பிப்பதன் மூலம், புறக்கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸ் வரை 15 நிமிடங்களிலும் மிகக் குறைவான நேரத்தில் பயணிக்க முடியுமென்பதோடு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு  இது ஒரு சிறந்த தீர்வாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

( ஐ. ஏ. காதிர் கான் )

Share:

சிறைக்கைதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கத் தயாராகிறது NAITA ; நிறுவன தலைவர் நஸீர் நடவடிக்கை


கைதிகளுக்குப் புனர்வாழ்வளிப்பது தொடர்பில் அவர்களுக்கு கைத்தொழில் பயிற்சி திட்டங்களை வழங்குவது குறித்து தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (நைற்றா)மூலம் நடவடிக்கை எடுக்கத் திட்டமிடுகின்றது.
இதுகுறித்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நைற்றா நிறுவனத் தலைவர் நஸிர் அஹமட்டுக்கும் சிறைத் துறைசார் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்றது.
சிறையிலுள்ள கைதிகளின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கு உதவும்வகையில் அவர்க ளுக்குத் கைத்தொழில் பயிற்சிகளை வழங்குவதுடன் அதனைப் பூர்த்தி செய்தவர்க ளுக்கு அரச அங்கீகாரமுள்ள சான்றிதழ்களை வழங்கவும் எதிர்காலத்தில் இதன் மூலம் அவர்கள் சமூகத்தில் நற்பிரஜைகளாக வாழ்வதற்கான நடைமுறைகளை அறிமுகம் செய்யவும் இதன்போது ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
நைற்றா நிறுவனம் தற்போது 16 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இருபாலாருக்கும் பல்வேறு கைத்தொழில் பயிற்சிகளை வழங்கிவருவதுடன், தகவல் தொழில் நுட்பம் குறித்த புதிய பாட விதானங்களை அறிமுகம்செய்து அவற்றுக்கான பயிற்சி களையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த பயிற்சிகளைப் பூர்த்தி செய்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர்கள் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற் கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நடவடிக்கை காரணமாக நாட்டின் அணைத்து பகுதிகளிலுமுள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகள் தமது வாழ்கை வளமேம்பாட்டுக்கான பயிற்சி களை பெற்றுவருவதுடன் தொழில்துறை வாய்ப்புக்களையும் பெற்று வருகின்றனர்.
மேற்படி நிறுவனத்தின் தவைராக நஸிர் அஹமட் பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் பல்வேறு புதிய செயற்றிட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த நிறுவனத்தில் பயிற்சியை பெற்றுக்கொண்டவர்கள் தமது மேலதிக கல்விக ளை வெளிநாடுகளிலுள்ள அரச,தனியார் பல்கலைகழங்களில் பெற்றுக்கொள்ளவும்; முன்பள்ளி ஆசிரியைகள் தமது கல்விமேம்பாட்டை வளர்த்துக் கொள்ளுவதற்கான பயிற்சித்திட்;டங்களும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தனியார் தொழில் துறைகளில் இளையவர்கள் வாய்ப்புகளைப்பெற கூட்டுறவுப் பயிற்சித் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.
அந்தவகையில் சிறைக் கைதிகள் மற்றும் மனநிலை பாதிப்பிற்கு உள்ளானவர் களின் மேம்பாட்டுக்கான பயிற்சிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Share:

அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் பைஸர் கோரிக்கை


( ஐ. ஏ. காதிர் கான் )

    ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு,  தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சாதாரண அப்பாவி முஸ்லிம்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
   பைஸர் முஸ்தபா எம்.பி. க்கும் ஜனாதிபதிக்கும்  இடையிலான முக்கிய சந்திப்பொன்று, நேற்று (09) காலை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
   இதன்போதே, பைஸர் முஸ்தபா எம்.பி.,  மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார்.
   கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் மெளலவிமார்கள் அடங்கிய 36 பேரை விடுவிக்கக் கோரியும், இதன்போது பைஸர் முஸ்தபா எம்.பி. ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தார்.
   இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இவர்களின் விடுதலை குறித்து சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருடன் பேசி, உடன் நடவடிக்கை எடுக்குமாறு தான் கூறியதாகக் கூறுமாறும், இதன்போது  பைஸர் முஸ்தபா எம்.பி. யிடம் ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.
   அத்துடன், இது தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்றிலும் ஜனாதிபதி கைச்சாத்திட்டார்.
   இதேவேளை, ஜனாதிபதியின் இந்த வேண்டுகோளை அடுத்து, பைஸர் முஸ்தபா எம்.பி., உடனடியாகவே  பதில் பொலிஸ் மா அதிபரையும் நேற்று (09) சந்தித்து இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.  இப்பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக, பைஸர் முஸ்தபா எம்.பி. யின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )
Share:

ஒரே நாடு! ஒரே சட்டம்!

கலாநிதி றவூப் ஸெய்ன்
சட்டத்தின் ஆட்சி (Rule of Law) ஜனநாயக விழுமியங்களில் முக்கியமானது. அதன் அடிப்படையில்தான் சட்டத்திற்கு முன் அனைவரும் சமமானவர்கள் எனும் மற்றொரு விழுமியம் பெறப்படுகின்றது. ஆயினும் இந்த விழுமியம் பெரும்பான்மையான ஜனநாயக நாடுகளில் வெறும் கோட்பாடாகவே உள்ளது. அதற்கு ஏதுவான சில காரணிகள் அங்கு இருக்கவே செய்கின்றன.
சட்டத்தின் ஆட்சி (Rule of Law) ஜனநாயக விழுமியங்களில் முக்கியமானது. அதன் அடிப்படையில்தான் சட்டத்திற்கு முன் அனைவரும் சமமானவர்கள் எனும் மற்றொரு விழுமியம் பெறப்படுகின்றது. ஆயினும் இந்த விழுமியம் பெரும்பான்மையான ஜனநாயக நாடுகளில் வெறும் கோட்பாடாகவே உள்ளது. அதற்கு ஏதுவான சில காரணிகள் அங்கு இருக்கவே செய்கின்றன.
ஒரு நாட்டில் வாழும் அனைத்து மக்களும் அதன் குடிமக்கள் அல்லது பிரஜைகள் என்ற வகையில் நாட்டின் அனைத்து சட்டங்களையும் பின்பற்றுவது அவசியமானது. அதில் யாருக்கும் ஒரு துளியும் கருத்து மாறுபாடுகள் இருக்க முடியாது. அதேவேளை, ஒரு நாட்டின் சட்டங்கள் அங்கு வாழும் எந்தவொரு மக்கள் தொகுதியினதும் கலாசார, மத சுதந்திரங்களை மீறுகின்ற வகையில் உருவாக்கப்படுவதோ நடைமுறைப்படுத்தப்படுவதோ ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். மட்டுமன்றி, சர்வதேச ரீதியில் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை மீறுவதும் ஆகும்.
குறிப்பாக, பன்மைத்துவ நாடுகளில் பல்லின மக்களினதும் கலாசாரம் மற்றும் மதம் தொடர்பான சுதந்திரங்களும் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்பதை சர்வதேச சட்டங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. இலங்கை ஒரு பன்மைத்துவ சமூகக் கட்டமைப்பைக் கொண்ட நாடு என்ற வகையில், சிறுபான்மை மக்களின் அடையாளங்களையும் தனித்துவங்களையும் பாதுகாப்பது சட்டமியற்றுபவர்களின் பொறுப்பாகும்.
அனைவருக்கும் ஒரே சட்டம்
4/21 தாக்குதலுக்குப் பிந்திய விவாதங்களில் ‘அனைவருக்கும் ஒரே சட்டம்’ என்ற கோஷம் முன்பை விட மிகக் கராராக எழுப்பப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கோஷம் பலராலும் எழுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது பேரினவாதிகள் மட்டுமன்றி, சில அரசியல்வாதிகளும் அதனை தூக்கிப் பிடிக்கின்றனர். சிறி லங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள எதிர்கால அரசியல் வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இவ்விடயம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதேவேளை, அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற கோரிக்கையை சில மதகுருக்கள் அரசாங்கத்திடம் முன்வைக்கப் போவதாகத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஆதரவாக கையொப்ப வேட்டையொன்றில் சில அமைப்புகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
இவ்விவாதத்தை பல்வேறு கோணங்களில் நம் நோக்க வேண்டியுள்ளது. ஏனெனில், ‘அனைவருக்கும் ஒரே சட்டம்’ என்பதற்குள் பல உள் முரண்பாடுகளும் மங்கலான விடயங்களும் உள்ளன. இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் எல்லாவற்றுக்குமான தாய்ச் சட்டமாக இருந்து வருகின்றது. இந்தச் சட்டத்தினை அடியொற்றியே குற்றவியல், பயங்கரவாதம், சொத்துரிமை, காணி, போக்குவரத்து, வங்கி, வியாபாரம், பணக் கொடுக்கல் வாங்கல் என இன்ன பிற சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இச்சட்டங்கள் அனைத்தும் இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் பொதுவானவை. இன, மத, பிரதேச, கலாசார வேறுபாடுகள் இன்றி அனைவர் மீதும் அவை பிரயோகிக்கப்படுகின்றன. அவ்வாறாயின், விவாதத்திற்கு வந்துள்ள “அனைவருக்கும் ஒரே சட்டம்” என்ற கோஷத்தின் உட்பொருள் என்ன?
முஸ்லிம்கள் குறித்து ஒரு வகைப் பீதியும் சந்தேகமும் பெரும்பான்மை மக்களிடையே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் முஸ்லிம்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் மற்றொரு பீதியே ‘அனைவருக்கும் ஒரே   சட்டம்’ என்ற இந்தக் கோஷமாகும்.
இதன் மூலம் பெரும்பான்மை மக்களிடையே முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் வேறொரு சட்டம் இருப்பதாக வியாக்கியானப்படுத்தப்படுகிறது. இந்தத் தப்பான வியாக்கியானம் முஸ்லிம் சமூகம் குறித்த ஒரு பிழையான புரிதலின் விளைவா அல்லது இனத் துவேஷத்தை வளர்க்கும் நோக்கில் முன்வைக்கப்படும் ஒன்றா என்பதை பெரும்பான்மை மக்களே பரிசீலிக்க வேண்டும்.
முஸ்லிம்கள் செறிவாக வாழும் சில பிரதேசங்களில் ஒரு சில இளைஞர்கள் பொதுப் போக்கு வரத்து ஒழுங்குகளை மீறிச் செயற்பட்ட சில சம்பவங்கள் கடந்த காலங்களில் ஆங்காங்கே பதிவாகியிருந்தமை உண்மையே. கல்முனை, காத்தான்குடி, பேருவளை, திஹாரி போன்ற பிரதேசங்களில் மோட்டார் சைகிள் ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிவதில்லை என்ற குற்றச்       சாட்டை போக்குவரத்துப் பொலிஸார் பலமுறை முன்வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சில சமூக வலைத் தளங்களில் பரவி கடும் விமர்சனங்களையும் எழுப்பியது. முஸ்லிம்கள் நாட்டின் சட்டங்களை மீறுகின்றனர் எனப் பிரச்சாரம் செய்து கொண்டு கலவரங்களைத் தூண்ட முயற்சிப்போர் இதனை தமக்குச் சாதமாக எடுத்துக் கொண்டனர்.
சமீபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜித, பேருவளை பிரதேசத்தில் இவ்விடயம் குறித்து முஸ்லிம் மக்களோடு தான் கலந்துரையாடிய பின்னர் தற்போது தலைக்கவசம் அணியும் நிலை உருவாகி விட்டது என்று தெரிவித்திருந்தார். தற்போது அனைத்து முஸ்லிம் பிரதேசங்களிலும் இந்நிலைமை மாறி விட்டது.
ஆக, இந்தப் பின்னணியிலிருந்து அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற கோஷத்தைக் கிளப்புவதில் எந்த நியாயமும் இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்பு பட்டிருந்தால் அவர்களை பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டும் எனவும், சிலர் கூறி வருகின்றனர். அது ஏற்புடையதே.
எவ்வாறாயினும், முஸ்லிம் தனியார் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதே இந்தக் கோஷத்தின் உள்நோக்கம் எனில், அது மிகப் பாரதூரமான உரிமை மீறலாகும். முஸ்லிம்களின் சமய, கலாசார  தனித்துவத்தைத் துடைத்தழிக்கும் நீசத்தனமாகும்.
அளுத்கம கலவரத்திற்கு முன்பிருந்தே ஞானசார தேரர் முஸ்லிம் தனியார் சட்டத்தையும் காழி நீதி மன்றங்களையும் ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றார். தொடர்ந்தும் இக்கோரிக்கையை அரசாங்கத்திற்கு முன்வைக்கப் போவதாக அச்சுறுத்தி வருகின்றார். பெரும்பான்மை மக்களிடையே முஸ்லிம் தனியார் சட்டம் குறித்த விம்பம் எத்தகையது என்பதை நாம் நாடி பிடித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில், முஸ்லிம்களின் விவாக-விவாகரத்து மற்றும் வாரிசுரிமையோடு மட்டுப்படுத்தப்பட்ட தனியார் சட்டத்தை தேரர் மிகப் பிழையாக வியாக்கியானப்படுத்தி வருகிறார்.
ஏற்கனவே நாம் குறிப்பிட்ட அனைத்து விவகாரங்களிலும் (காணி, கல்வி, வங்கி, கொடுக்கல் வாங்கல், குற்றவியல்….) முஸ்லிம்களுக்கு தனி யானதொரு சட்டம் நடைமுறையில் இருப்பது போன்றே தேரரின் பிரச்சாரம் அமைந்துள்ளது. இதனால் சிங்கள மக்கள் முஸ்லிம்கள் தொடர்பில் மென் மேலும் வெறுப்புக் கொள்வதற்கும் பீதியடைவதற்குமான ஒரு கொதிப்பான சூழல் இங்கு திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது.
நாட்டிலுள்ள சில ஊடகங்களும் இந்தப் போலிப் பிரச்சாரத்திற்கு சோரம் போகின்றன. முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் தனிச்சட்டம் உள்ளது என்பது மிகப் போலியான பிரச்சாரமாகும். கண்டியச் சட்டம் இருப்பது போல், வட மாகாண தமிழர்களுக்கு தேச வழமைச் சட்டம் இருப்பது போல, முக்குவர் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு முக்குவர் சட்டம் இருப்பது போல முஸ்லிம்களுக்கு தனியார் சட்டம் இருக்கின்றதே ஒழிய, தனிச் சட்டங்கள் ஏதும் இல்லை. மேற்போந்த சமூகங்களுக்கு தனித்துவமான விவாக, விவாரத்துச் சட்டம் உள்ளது போல் முஸ்லிம்களுக்கும் விவாக விவாகரத்துச்       சட்டம் உள்ளது. ஏனைய அனைத்து விடயங்களிலும் அவர்கள் நாட்டிலுள்ள பொதுச் சட்டங்களையே பின்பற்றுகின்றனர்.
முஸ்லிம் தனியார் சட்டம் என்பதோ கடந்த 300 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் ஒன்றாகும். முஸ்லிம்கள் தமது சமய அடிப்படையில் விவாக, விவாகரத்து விவகாரங்களைக் கையாள்வதற்கு இச்சட்டம் ஒல்லாந்தாரால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆங்கிலேயரால் தொடர்ந்தும் அங்கீகரிக்கப்பட்டு, சில திருத்தங்களோடு சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையில் எதுவித தொடர்பும் இல்லை. அந்தச் சட்டம் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை. முஸ்லிம்கள் அவற்றைப் பின்பற்றுவதனால் நாட்டுக்கோ ஏனைய சமூகங்களுக்கோ எவ்வித நஷ்டமோ அச்சுறுத்தலோ பிரச்சினையோ இல்லை.
அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற பிரச்சாரம் முஸ்லிம் விரோத கோஷம் என்பதில் சந்தேகமில்லை. இக்கோஷத்தை எழுப்புகின்றவர்கள் 4/21 தாக்குதலுக்கு முன்பாகவும் இதே அழுத்தத்தோடும் துணிவோடும் இப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தமது வாதத்திற்கு வலிமை சேர்க்கும் நோக்கில் தனியார் சட்டத்தின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ளாது சம்பந்தமில்லாத விடயங்களை தமது போலிக் குற்றச்சாட்டுகளுடன் வெட்டி ஒட்டுகின்றனர்.
முஸ்லிம் பெண்களின் ஆடையை எடுத்துக் காட்டாகக் கொள்கின்றனர். ஒரு நாட்டின் அரசாங்கத்தினால் ஒரு சமூகத்தின் வாழ்வியல் முறை (Life Style) இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கவோ அவ்வாறு மாற வேண்டும் என்று சட்டமியற்றவோ முடியாது. கலாசார, சமய சுதந்திரங்களில் தலையிட எந்த அதிகாரமும் அரசுக்கு இல்லை என்பதை மேலே கண்டோம். எந்தவொரு அரசுக்கும் ஒரு சமூகத்தின் கலாசார மற்றும் வாழ்வியல் உரிமைகளைப் பாராதீனப்படுத்தும் அதிகாரம் இல்லை என்பதை அனைத்து சர்வதேச  சட்டங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.
சட்டத்தின் ஆட்சியும் மதகுருக்களின் உண்ணாவிரதமும்
சட்டத்தின் ஆட்சி ஜனநாயகம் உயிர் வாழ்கிறது என்பதற்கான பிரதான அடையாளமாகும். துரதிஷ்டமாக இலங்கையில் சட்டத்தின் ஆட்சி படிப்படையாக தோல்வியுற்று வருகின்றது என்பதற்கு மோசமான உதாரணங்கள் பெருகிச் செல்கின்றன. குறிப்பாக கண்டியில் ரத்ன தேரரும், காலியில் பிக்குகள் பலரும் கல்முனையில் சில தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் பிக்குகளும் மேற்கொண்ட உண்ணாவிரதங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலேபரங்கள் சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குள்ளாக்குகின்றன.
அமைச்சர் ரிஷாதும், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலியும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே ரத்ன தேரரின் உண்ணா விரதம் ஆரம்பிக்கப்பட்டது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை குறிப்பிட்ட தினத்தில் நண்பகல் 12.00 மணிக்குள் பதவி விலக வேண்டும் என்றும், அவ்வாறு விலகா விட்டால் நாட்டில் மிகப் பெரும் காணிவேல் ஒன்று நடாத்தப்படும் என்றும் அகிம்சை வழிவந்த ஒரு மதகுரு கர்ச்சிக்கின்றார்.
ஒரு மக்கள் பிரதிநிதி குறித்து யாரேனும் குற்றச் சாட்டுக்களை முன்வைத்தால் அவற்றை உரிய முறையில் விசாரித்துத் தீர்ப்பளிப்பதற்கு காவல் நிலையங்களும் நீதிமன்றங்களும் உள்ளன. நாட்டில் ஒரு தெளிவான சட்டமும் அதற்குப் பொறுப்பான அமைச்சும் உள்ளது. அதன்படியே தீர்மானிங்கள் பெறப்பட வேண்டும். அதற்குப் பெயர்தான் சட்டத்தின் ஆட்சி. ஒரு மதகுரு தான் விரும்பிய கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டால் அரசாங்கம் அதற்குப் பணிந்து கோரிக்கைக்கு செவிவாய்க்கும் எனின், சட்டத்தின் ஆட்சி என்பதன் அர்த்தம் என்ன?
இலங்கை ஒரு ஜனநாயக சோசலிச குடியரசு என்கிறோம். ஆனால் சட்டத்தின் ஆட்சியை உண்ணாவிரதங்கள் கேலித் கூத்தாக்குகின்றன. நாட்டில் ஓர் அரசாங்கமும் சட்டங்களை அமுல் படுத்தும் முகவர்களும் இருக்கின்ற நிலையில் தடியெடுத்தவர்களெல்லாம் தண்டல்காரர்கள் என்பது போல சில தனிநபர்கள் எப்படிச் செயல்பட முடியும்? முஸ்லிம்கள் இப்படித்தான் ஆடை அணிய வேண்டும், மத்ரஸா கல்வி முறை நீக்கப்பட வேண்டும், இவற்றையே உண்ண வேண்டும், ஹபாயாவைக் கழற்ற வேண்டும் என்றெல்லாம் கோடு கிழிக்கும் அதிகாரம் எந்தவொரு ஜனநாயக அரசுக்கும் இல்லை.
ஒரு அரசாங்கத்திற்கே இந்த அதிகாரம் இல்லாத நிலையில் தலை மழித்த ஒரு மதகுரு இந்தப் புத்தகத்தைத்தான் வாசிக்க வேண்டும், இந்த மொழியைக் கற்கக் கூடாது. இஸ்லாத்தின் இந்தப் பிரிவைத்தான் பின்பற்ற வேண்டும் என்றெல்லாம் கர்ச்சிப்பதற்கும் சட்டாம் பிள்ளை வேலை செய்வதற்கும் அதிகாரம் எங்கிருந்து வருகின்றது?
பன்மைப் பாங்கான ஒரு நாட்டில் ஒவ்வொரு சமூகத்தினதும் கலாசார, சமய வாழ்வியல் விவாகரங்களில் பயங்கரவாதம் அல்லது தீவிர வாதம் என்ற தோரணையில் அரசு கைவைக்க முடியாது. அவ்வாறு உரிமை மீறலில் ஈடுபடும் மதகுருக்களுக்கு இடமளிக்கவும் முடியாது. அதேவேளை, முஸ்லிம்கள் தமது மத கலாசார சுதந்திரங்களை பொறுப்புடன் கையாள வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று அப்பிப்பிராயமில்லை. தாம் முஸ்லிம்கள் என்ற உணர்வு நிலை அவர்களுக்கு இருப்பது போன்று இலங்கையர்கள் என்ற உணர்வு நிலையும் இருக்க வேண்டும். ­
சட்டத்தின் முன் அவைனவரும் சமம்
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது தான் சட்ட ஆட்சியின் அடித்தளமாகும். தற்போது நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டம் என்று கோஷமெழுப்புபவர்கள் இந்த அர்த்தத்தில் அக்கோஷத்தை எழுப்புவார்களாயின் அதனை முஸ்லிம்கள் மிகுந்த மரியாதையுடன் வரவேற்பர். இன்று இலங்கையில் தவறிப் போயுள்ள விடயம் இதுதான். சட்டம் பிரயோகத்தில் வேறுபடுகின்றது. முஸ்லிம்கள் பாகுபாடாக நடத்தப் படுகின்றனர். ஓர வஞ்சனையுடன் நோக்கப்படுகின்றனர். எடுத்துக் காட்டாக சட்ட விரோத வழிகளில் பணம் சம்பாதித்தல் குறித்து இன்று வைத்தியர் ஷாபிக்கு எதிராக விசாரணை நடைபெறுகின்றது. ஆனால், ஷாபியை விட இத்தகைய விசாரணை நடத்தப்பட வேண்டிய பல மோசடிக்காரர்களும் அரசியல்வாதிகளும் இங்கு தாராளமாக உள்ளனர்.
திகன கலவரத்திலும் மினுவாங்கொடை கலவரத்திலும் நேரடியாகப் பங்கு கொண்ட அமித் சிங் உடனடியாக பிணையில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அற்ப சொற்ப காரணங்களுக்காக இராணுவத் தேடுதலின் போது கைதாகிய அப்பாவி முஸ்லிம்கள் பலர் இன்னும் சிறைச்சாலைகளில் உள்ளனர்.
மே மாதம் தலதா மாளிகை பக்கம் சென்ற இரு முஸ்லிம் இளைஞர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு இரத்தம் ஓட்டப்பட்டனர். ஆனால், குருனாகல் மாவட்டத்தில் சில பள்ளி வாயலின் நடுபகுதிக்குள் ஊடுருவி அல்குர்ஆன் பிரதிகளை எரித்துச் சாம்பலாக்கியவர்களுக்கு எந்தத் தண்டனையும் இல்லை.
தர்மச் சக்கரம் ஆடையில் பொறிக்கப்பட்டிருந்ததாக ஒரு அப்பாவி முஸ்லிம் பெண் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். ஆனால் 1915 ஆண்டிலிருந்து முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனக் கலவரங்களில் பல நூற்றுக்கணக்கான பள்ளிவாயல்கள் நொறுக்கப்பட்டன. அதன் சூத்திரதாரிகளுக்கு எந்தத் தண்டனையும் இல்லை.
இந்தக் கோணத்திலிருந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷத்தை முன்வைப்பார்களாயின் முஸ்லிம்கள் அதற்கு முழு ஆதரவு வழங்குவார்கள். அதை விடுத்து முஸ்லிம் விரோத பகையுணர்வையும் முஸ்லிம்கள் குறித்து பயத்தையும் பெரும்பான்மை மக்களிடையே பிரச்சாரம் செய்து கலவரங்களைத் தூண்டும் நோக்கிலான இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களை முஸ்லிம் சமூகம் வன்மையாக எதிர்க்க வேண்டும். சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களின் சமய, கலாசார சுதந்திரம் மூச்சுக் காற்றுக்கு ஒப்பானது. அதனை விட்டுக் கொடுத்தால் முஸ்லிம் சமூகம் உயிர் பிழைப்பது சாத்தியமற்றுப் போய்விடும்.

நன்றி - மீள்பார்வை இணையம்
Share:

சுமந்திரன் ஐயாவை போன்ற தலைவர்களையே சிறுபான்மை வேண்டி நிற்கிறது


"தெரண" ஊடக தில்காவின் "முஸ்லிம் தனியார் சட்டம்" தொடர்பிலான கேள்விக்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமேந்திரன் அவர்களின் பதில்:-

"பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி குறித்த ஒரு சமூகத்தின் விஷேட தனியார் சட்டங்களை நீக்க முடியாது"

"முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருமணத்திற்கான ஆகக்குறைந்த வயது விடயத்தைத் தவிர வேறு விடயங்களில் நான் குறை காணவில்லை."

"திருமண வயது குறித்த திருத்தமும்கூட முஸ்லிம்களின் முழுமையான இணக்கப்பாட்டின் அடிப்படையில் மட்டுமே செய்யப்பட வேண்டும்."

"இந்த நாட்டிலே கண்டியச் சட்டம் - தேசவழமைச் சட்டம் - முக்குவர் சட்டம் என்றெல்லாம் -  தனியார் சட்டங்கள் உள்ளன. ஆனால் எல்லோரும் முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி மட்டுமே விமர்சிக்கின்றனர். அதை ஏற்றுக்கொள்ள முடியாது..."

(A.L.Thavam)
Share:

A/L சித்தியடையாத ஒருவரை பாராளுமன்றம் அனுப்புவது மக்களின் பாரிய தவறு

உயர்தரம் சித்தியடையாத ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது மற்றும் ஜனாதிபதியாக தெரிவு செய்வது மக்களினால் மேற்கொள்ளப்படும் பாரிய தவறு என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

இன்று (09) கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அத்துடன் பாராளுமன்றத்தில் 70 அல்லது 80 பேர் அளவில் உயர்தரம் சித்தியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் ஒருவர் போட்டியிட தேவையில்லை எனவும் நாட்டை முன்னேற்றக்கூடிய ஒருவரே போட்டியிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

நாட்டை முன்னேற்றக்கூடிய தலைவர் ஒருவரை ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக முன்வைத்தால் தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

(AdaDerana)
Share:

கோத்தாபய தான் எமது ஜனாதிபதி வேட்பாளர் என்று மஹிந்தவுக்கோ, நாமலுக்கோ பகிரங்கமாக சொல்லச் சொல்லுங்கள்

கோத்தாபய சித்தப்பா தான் எமது ஜனாதிபதி வேட்பாளர் என்று நாமலுக்கு வந்து சொல்லச் சொல்லுங்கள் என்று விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில், நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் அவர்கள் கருத்துத் தெரிவித்தார். அநுராதபுரம், மஹவிலாச்சியவில் நடைபெற்ற "தியவர நேயோ" நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நேரம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, "மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளியில் வந்து கூறச் சொல்லுங்கள், அடுத்த ஜனாதிபதி அபேட்சகர் கோத்தாபய என்று. அதே போன்று நாமல் ராஜபக்ஷவிடம் கூறுங்கள் ஊடகங்கள் முன் வந்து, எமது ஜனாதிபதி அபேட்சகர் கோத்தாபய சித்தப்பா என்று. அவ்வாறு கூறுவதில்லையே. காரணம் கோத்தாபய வருவதற்கு அதிகம் வெறுப்பு காட்டுவது ராஜபக்ஷ குடும்பம் ஆகும்.

ஜனாதிபதித் தேர்தல் கெசட் செய்ததன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம். நாம் 19வது திருத்தத்தை கொண்டு வந்தது 18 சரியில்லை என்பதனால்தான். அதன் மூலம் தான் ஊடகவியலாளர்களான உங்களுக்கும் பயமின்றி பேச முடிந்துள்ளது.

முஸ்லிம் அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து வெளியேறிய பின்னர் அவர்கள் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து ஆராய்ந்து பார்ப்பார்கள்" என்று மேலும் தெரிவித்தார்.

ரிஹ்மி ஹக்கீம்,
விவசாய, கால்நடை அபிவிருத்தி,  நீர்ப்பாசன மற்றும் கடற்றொழில், நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சு
Share:

தனியான சிங்கள அரசை உருவாக்க பொதுபலசேனா கோருவது ஏன் ? மியன்மாருடனான ஒப்பந்தத்தினை அமுல்படுத்த தடை எது ?

தனியான சிங்கள அரசை உருவாக்க பொதுபலசேனா கோருவது ஏன் ? மியன்மாருடனான ஒப்பந்தத்தினை அமுல்படுத்த தடை எது ?

நேற்று (07.07.2019) கண்டியில் நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் மாநாட்டில் அதன் செயலாளர் ஜானசார தேரரின் உரை நாங்கள் எதிர்பார்த்ததுபோல முஸ்லிம்களுக்கெதிரான விசம கருத்தினை வெளிப்படுத்தி இருந்தது.

அதில் “நாங்கள் தனியான சிங்கள அரசை உருவாக்க வேண்டும்” என்று சிங்கள தேசத்துக்கு அறைகூவல் விடுத்திருந்தார்.

அதாவது சிறுபான்மையான முஸ்லிம், தமிழ் மக்களின் ஆதரவின்றியும், அவர்களில் தங்கி நிற்காமலும் நாங்கள் தனித்து சிங்கள அரசை அமைக்க வேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கையாகும்.

இது புதிதாக விடுக்கப்பட்ட கோரிக்கையல்ல. கடந்த காலங்களிலும் இதனைத்தான் தொடர்ந்து கூறிவருகின்றார்.

மியன்மாரின் அசின் விராது தலைமையிலான 969 இயக்கத்துடன் பொதுபல சேனா அமைப்பினர் 2014 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்டது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

“ஆசியாவில் தீவிரவாதத்தினை அழித்தல்” என்ற தலைப்பிலான அந்த ஒப்பந்தத்தினை இலங்கையில் அமுல்படுத்துவதற்கு தடையாக இருப்பது இலங்கையில் உள்ள அரசியல் சூழ்நிலையாகும்.

அதாவது தனியான சிங்கள அரசாங்கம் அமையாததுதான் அதற்கு தடையாக உள்ளது என்பது பொது பல சேனாவின் கவலையாகும்.

பொதுபலசேனா இயக்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தினை இலங்கையில் நடைமுறைப் படுத்துவதற்கு முன்பே மியன்மாரில் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்ததில் அசின் விராது தேரோ தலைமையிலான 969 இயக்கம் வெற்றிகண்டது.

மியன்மாரில் உள்ள ரோஹிங்கிய முஸ்லிம்கள் வாக்குரிமை அற்றவர்களாக இருப்பதனால், எந்தவிதத்திலும் அவர்களது தேவைப்பாடுகள் அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு இருக்கவில்லை.

மேலும், அரசியல் மட்டத்தில் அவர்களுக்கு எந்தவித செல்வாக்குகளும் இல்லை. அவர்களுக்காக பேசுவதற்கு அமைச்சரவையிலோ அல்லது பாராளுமன்றத்திலோ எவரும் இல்லாத நிலையில் அநாதரவான சமூகமாக மியன்மார் முஸ்லிம்கள் உள்ளார்கள்.

அத்துடன் ஆட்சி அதிகாரத்தில் இராணுவத்தினதும், பௌத்த பிக்குகளினதும் செல்வாக்குகள் அதிகமாக காணப்படுவதனால், இவர்களை பகைத்துக்கொண்டு அரசியல் செய்யமுடியாத நிலைமை மியன்மார் அரசியல் தலைவர்களுக்கு உள்ளது.

அதனால்தான் அங்கு ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டும் அதற்கு எதிராக அங்குள்ள அரசியல்வாதிகள் வாய் திறக்கவில்லை.

ஆனால் அவ்வாறான அரசியல் சூழ்நிலை எமது நாட்டில் இல்லை. அதாவது முஸ்லிம்கள் தங்களது பேரம்பேசும் சக்திகள் மூலம் ஆட்சியில் பங்காளியாகவும், ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் விளங்குவதனால்தான் சிறுபான்மை சமூகமான முஸ்லிம், தமிழ் சமூகத்தில் நங்கள் தங்கியிருக்க கூடாது தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று பொதுபல சேனா இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எனவே மியன்மாரின் அசின் விராது தேரோவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தினை இலங்கையில் அமுல்படுத்துவதற்கு தடையாக உள்ளது தனியான சிங்கள அரசு அமைக்கப்படாததுதான்.

ஆகவே தனியான சிங்கள அரசாங்கத்தினை அமைப்பதன் மூலம் மியன்மாரில் நடாத்தியது போன்று முஸ்லிம்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பை மேற்கொள்வதற்காகவே தனியான சிங்கள அரசாங்கத்தினை அமைக்க வேண்டும் என்று போதுபல சேனா இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
Share:

மீரிகம - குருநாகல் ஹைவே நிர்மாணப் பணிகள் டிசம்பரில் பூர்த்தி

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீறிகம தொடக்கம் குருநாகல் வரையிலான வீதியின் நிர்மாணப் பணிகள் டிசம்பர் மாத்தில் நிறைவடைய உள்ளது. 

இதற்கான திட்டத்தில் இது வரையில் 75 சதவீதமான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக வீ.மோஹான் தெரிவித்துள்ளார். 

இந்த வீதியின் நீளம் 40 கிலோ மீற்றர்களாகும். இதில் 5 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனூடாக மேலும் பல நகரங்களுக்கு பிரவேசிக்க முடியம். 

இந்த திட்டத்திற்காக அரசாங்கம் 80 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய உள்ளது. இதற்கமைவாக குருநாகலில் இருந்து தம்புள்ளை வரையிலான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளது. 

இந்த வீதியின் நிர்மாணப் பணிகளின் பின்னர் கொழும்பு கண்டி வீதியில் பஸ்யால ஊடாக மீறிகமவிற்கு வரும் வாகனங்களுக்கு குருநாகல் நகரத்திற்கு செல்லாது தம்புள்ளை நகரத்திற்கு செல்வதற்கான சந்தர்ப்பம் கிட்டுகின்றது. 

இதேவேளை, கொழும்பு - கண்டி வீதியை விரிவுப்படுத்தும் பணிகள் தற்பொழுது யக்கல வரையில் இடம்பெற்றுள்ளது. 

குறுகிய காலத்திகுள் பஸ்யால வரையில் இந்த வீதி 4 நிரல்களாக விரிவுப்படுத்தப்படவுள்ளது. பஸ்யாலவில் இருந்து மீறிகம வரையிலான வீதி தற்பொழுது விரிவுப்படுத்தப்படவுள்ளதாகவும் திட்டப்ப பணிப்பாளர் வீ.மோஹான் தெரிவித்துள்ளார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)
Share:

வில்பத்து நெருக்கடியும் மறிச்சுக்கட்டி முஹியத்தீன் பள்ளிவாசலும்


மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு முப்பது வருடங்களின் பின்னர்  மறிச்சுக்கட்டி மக்கள்  தமது சொந்த இடத்திற்கு சென்று மீள்குடியேறிய போது வில்பத்து காட்டை அழித்து அங்கு சட்டவிரோதமாக  அவர்கள் குடியேறுகிறார்கள் என பெரும்பாலானவர்கள் குற்றம் சாட்டியிருந்தார்கள். ஆனால் இந்த வாதங்களை வரலாற்று ரீதியில் உடைத்தெறிந்த அடையாளத்தை தேடும் நிலைக்கு பிரதேச அரசியல் தலைமைகள் தள்ளப்பட்டார்கள். ஆனால் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை பொய் என உறுதியாக நிரூபிக்க உதவியது "மறிச்சுக்கட்டி முஹியத்தீன் பள்ளிவாசலாகும்". இந்த பள்ளிவாசல் கி.பி 1830 ஆண்டு காலத்தில் இமாமுல் அரூஸ் செய்யித் முஹம்மத் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களால் நிர்மாணிக்கப்பட்டது.

இலங்கையின் வரலாற்றில் 365 பள்ளிவாசல்களையும் தைக்காக்களையும் அவர்கள் நிர்மாணித்தார்கள். இலங்கையின் நிலப்பரப்பில் மிக உயரமான இடமான நுவரெலிய மாவட்டத்தின் ஹபுகஸ்தலாவ பகுதியிலும் இலங்கையின் மிகவும் தாழ்வான இடமான மறிச்சுக்கடடியிலும் அவர்களே பள்ளிவாசல்களை நிர்மாணித்தார்கள்.

இந்த விடயத்தை அமெரிக்காவின் பசுபிக் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம் அவர்கள் இவ்வாறு பதிவு செய்துள்ளார்கள்

The people of Sri Lanka are well aware that traveling to the remote places such as Marichikkaddi and Karadikkuli even in these days with modern transportation is very tiresome and dangerous, as the area is infested with wild animals and the roads are very difficult to track through. But, Imamul Arus managed to visit even such remote and dangerous areas 150 years ago and constructed mosques and schools in those desolate villages. This speaks of the selfless nature of all of his efforts in public causes.

Shuayb Alim, Dr.Tayka (1996). Arabic,Arwi and Persian in Serandib and Tamil Nadu. Madras: Imamul Arus Trust. p. 585,586.

(பஸ்ஹான் நவாஸ்)
Share:

தபால் மூலம் வாக்களிப்போர் 2018 வாக்காளர் இடாப்பை பயன்படுத்தவும்( மினுவாங்கொடை நிருபர் )

   எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்த்துள்ள அரச சேவையிலுள்ளவர்கள், 2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமைவான பற்றுச் சீட்டுகளை தத்தமது கிராம சேவை உத்தியோகத்தர்களிடம் பெற்றுக் கொள்ள முடியும் என, தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
   அரச சேவை உத்தியோகத்தர்களுக்கு சுற்று நிருபம் மூலம் இது தொடர்பிலான  அறிவுறுத்தல்கள்  வழங்கப்பட்டுள்ளதாகவும், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பப் படிவங்களைப்  பூர்த்தி செய்வதற்கு,  அந்தப் பற்றுச்சீட்டு முக்கயமானது என்றும்,  தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )
Share:

இன்னும் 6 வருடங்கள் UNP இன் ஆட்சிதான் நடக்கும்

மேலும் ஆறு வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருக்கும் என அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய 6 ராஜபக்ஷர்கள் இணைந்துள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியில் அவ்வாறான நடவடிக்கைகள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

கட்சியின் செயற்குழு ஊடாக முழு இலங்கையும் பிரதித நிதித்துவ படுத்தப்படுவதாகவும் அதனூடாக வெற்றி பெறக்கூடய தலைவர் ஒருவரை தெரிவு நியமிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தை இலகுவில் ஒப்படைக்க மாட்டோம் எனவும் மேலும் 6 ஆண்டுகளுக்கு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(AdaDerana)
Share:

மாநாடு என்ற போர்வையில் வெற்றிவிழா கொண்டாடும் பொதுபல சேனாவும், மியன்மாருடன் செய்துகொண்ட ஒப்பந்தமும்

மாநாடு என்ற போர்வையில் வெற்றிவிழா கொண்டாடும் பொதுபல சேனாவும், மியன்மாருடன் செய்துகொண்ட ஒப்பந்தமும். 

முஸ்லிம்கள்மீது தாக்குதல் நடாத்தியபின்பு மாநாடு என்ற போர்வையில் வெற்றிக் கொண்டாட்டம் நடாத்துவது பொதுபலசேனா இயக்கத்தின் நடைமுறையாகும்.

2014 இல் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் களுத்துறை மாவட்டத்தில் முஸ்லிம்களை தாக்கி பொருளாதாரத்தை அழித்தபின்பு சர்வதேச பயங்கரவாதியை கொழும்புக்கு அழைத்துவந்து வெற்றிவிழா கொண்டாடினார்கள்.

இன்று வடமேல் மாகாணத்தில் முஸ்லிம்களை தாக்கி பொருளாதாரத்தை சூறையாடிவிட்டு கண்டியில் வெற்றிவிழா கொண்டாடுகின்றார்கள். 

2018 இல் திகன, கண்டி தாக்குதலுக்கு பின்பு அரசாங்கத்தின் கெடுபிடிகளும், நீதிமன்ற வழக்குகளும் அதிகமாக இருந்ததனால் அவர்களால் கடந்த வருடம் வெற்றிவிழா கொண்டாட முடியவில்லை. 

முஸ்லிம்களுக்கு எதிராக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான பேரினவாத இயக்கங்கள் தோன்றினாலும், முள்ளியவைக்கால் வரைக்கும் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதன் பின்பு பொதுபலசேனா இயக்கத்தின் எழுட்சியே மிகவும் ஆபத்தானதாகவும், இந்நாட்டு முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குட் படுத்துவதாகவும் அமைந்துள்ளது. 

மியன்மார் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இனச்சுத்திகரிப்பினை மேற்கொண்ட 969 என்கின்ற பௌத்த தீவிரவாத இயக்கத்துடன் மிகவும் நெருக்கமான உறவுகளை பொதுபலசேனா இயக்கத்தினர் ஏற்படுத்திக்கொண்டனர்.

உலகில் எத்தனையோ மிதவாத பௌத்த இயக்கங்கள் இருக்கும்போது ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களை கொன்று குவித்த கொலைகார இயக்கத்துடன் பொதுபலசேனா இயக்கம் நெருங்கிய உறவினை ஏற்படுத்தியதுக்கும், ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்குமான தேவை என்ன என்பதுதான் அனைவரது கேள்விகளாகும்.   

2014 இல் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் மியன்மாரின் 969 இயக்கத்தின் தலைவர் அசின் விராது தேரோ கொழும்புக்கு அழைக்கப்பட்டு அவருக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டதுடன், அரச விசேட பிரமுகர்களுக்கு வழங்கப்படுகின்ற “பி.எஸ்.டீ” பாதுகாப்பும் வழங்கப்பட்டது. 

969 இயக்கமானது மியன்மாரில் முஸ்லிம்களை அழித்தொழிக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான பிக்குகளையும், லட்சக்கணக்கான தொண்டர்களையும் கொண்ட பாரிய இயக்கமாகும்.

இதன் தலைவரை ஒரு பயங்கரவாதியாகவே நியூயோக்கிலிருந்து வெளிவருகின்ற ”டைம்ஸ்” சஞ்சிகை முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. 

அத்துடன் அவர் கலந்துகொண்ட நிகழ்வுகள் அரச நிகழ்வுகள் போன்றே காட்சியளித்தது. இறுதியில் நாட்டைவிட்டு செல்லும்போது தனக்கு பாதுகாப்பு வழங்கி உபசரித்ததற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு விசேட நன்றி தெரிவித்திருந்தார். 

மியன்மாரில் பல்லாயிரம் முஸ்லிம்களின் கொலைகளுக்கு உடந்தையான ”அசின் விராது” தேரோவின் வருகைக்கு இலங்கை முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தும் இந்நாட்டு முஸ்லிம்களின் உணர்வுகளை அன்றைய அரசு மதிக்கவில்லை.

களுத்துறை வன்முறைக்கு பின்பு 28.09.2014 இல் 5௦௦௦ பௌத்த பிக்குகள் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஒன்று கூட்டப்பட்ட வெற்றிவிழா கொண்டாடப்பட்டத்தில் சில அல்குரான் வசனங்களை வாசித்து அதனை ஏளனம் செய்தார்கள்.

அத்துடன் பொதுபலசேனா அமைப்புக்கும் 969 இயக்கத்துக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டது.

அதில் ஆசிய பிராந்தியத்தில் ‘தீவிரவாதத்தை அழித்து அமைதியை நிலைநாட்டுவது’ என்பது அந்த உடன்படிக்கையின் சாராம்சமாகும். இது முஸ்லிம்களுக்கு அச்சத்தினையும், சந்தேகத்தினையும் ஏற்படுத்தி இருந்தது.

இங்கே தீவிரவாதத்தினை அழித்தல் என்பது முஸ்லிம்களை அழிப்பது என்பதாக பொருள்படும். ஏனெனில் முஸ்லிம்களை இவர்கள் தீவிரவாதிகள் என்ரே அழைக்கின்றார்கள்.

இது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோஜ் வில்லியம் புஸ்சின் கொள்கையை தழுவியதாகும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
Share:

வர்த்தக நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க அரசு உதவி ; தொ.பே. இலக்கம் இணைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் மினுவாங்கொட, ஹெட்டிப்பொல உள்ளிட்ட சில பிரதேசங்களில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையினால் சேதமடைந்த சொத்துக்களின் எண்ணிக்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. 


சேதமடைந்த சொத்துக்களுக்கு நஷ்டஈடுகளை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முழுமையாக பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடுகள் வழங்கும் அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆனந்த விஜயபால தெரிவித்தார். 

இச் சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பத்துப் பேர் காயமடைந்துள்ளார்கள் என்றும் அந்த அலுவலகத்தின் பணிப்பாளர் தெரிவித்தார். 

முழுமையாக இழப்பீட்டை வழங்குவதற்கு முன்னர் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக முற்பணக் கொடுப்பனவைச் செலுத்துமாறு அரசாங்கம் இந்த அலுவலகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது. 

இது தொடர்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் 0112 57 58 03 அல்லது 0112 57 58 13 அல்லது 0112 57 58 26 என்ற தொலைபேசியின் ஊடாக இந்த அலுவலகத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்று பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். 

(அரசாங்கம் தகவல் திணைக்களம்)
Share:

கஹட்டோவிட்ட நபவிய்யா இளைஞர் அமைப்பின் அனுசரணையில் நடைபெற்ற புலமைப் பரிசில் கருத்தரங்கு


கஹட்டோவிட்ட நபவிய்யா இளைஞர் இயக்கத்தின் அனுசரணையுடன் தரம் 5 புலமை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்கு நேற்றைய தினம் (06) Kahatowita Muslim Ladies Study Circle இல் நடைபெற்றது. இதில் I.L.M.Zhaffan ஆசிரியர் அவர்கள் விரிவுரை நிகழ்த்தினார்.
Share:

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here