இறுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளி மறுசிர (Marusira) என அழைக்கப்பட்ட மிகப் பிரயல்யமான ஒரு குற்றவாளியாவார். இவர் அதிகமாக சிறையிலிருந்து தப்பிச் செல்லல் மூலம் பிரபல்யமானவராவார். 1976ம் ஆண்டில் இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் இதுவரை காலமும் 43 வருடங்களாக அதாவது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

இலங்கையின் அரசியல் அமைப்பினது 13ம் உறுப்புரையின் 4ம் உபபிரிவூ மரண தண்டனை வழங்கப்படக்கூடிய தத்துவத்தினை நீதிமன்றங்களுக்கு வழங்குகின்றது. இலங்கைச் சட்டங்களின் பிரகாரம் மிகத் தீவிரமான பாரிய குற்றங்களுக்கே மரண தண்டனை வழங்கப்பட்டது. அதாவது அரசுக்கெதிராக யூத்தம் புரிதல், அவற்றுக்கு உடந்தையாக இருத்தல், இராணுவ புரட்சியில் ஈடுபடுதல், மரண தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றம் ஒன்று தொடர்பில் பொய்ச்சாட்சியமளித்தல், கொலைசெய்தல், தற்கொலைக்கு உடந்தையாக இருத்தல், opium மற்றும் அபாயகரமான ஒளடத சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட போதைப் பொருளை உடமையில் வைத்திருத்தல், தயாரித்தல், விற்பனை செய்தல், கடத்துதல் போன்ற செயற்பாடுகள் மரண தண்டனைக்குரிய குற்றங்களாக காணப்படுகின்றன. எனினும் மரண தண்டனையானது ஒருபோதும் 18 வயதிற்குட்பட்ட நபர்களின் மீதோ அல்லது கர்ப்பினியாகவூள்ள பெண்களின் மீதோ நிறைவேற்றப்படக்கூடாது.

மரண தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றங்களானது இலங்கையின் மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட வேண்டும் எனவூம் மேல்நீதிமன்ற நீதிபதி மரணதண்டனை விதிக்கின்ற சந்தர்ப்பத்தில் (மேன்முறையீடுகள் முடிவடைந்ததன் பின்னர்) ஒரு ஆணையில் கையொப்பமிட்டு மறியல்ச்சாலைக்கு குற்றவாளியை பாரப்படுத்துகின்ற அதே சந்தர்ப்பத்தில் இலங்கையின் ஜனாபதி அவர்களுக்கு நீதிமன்றில் பெறப்பட்ட சாட்சியங்கள் பற்றிய குறிப்பினையூம் அவரது அவதானத்தினையூம் குறித்த மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமா இல்லையா என்பது பற்றி ஒரு அறிக்கை வடிவில் அனுப்பிவைக்க வேண்டும் அந்த மரண தண்டனை தொடர்பில் இறுதி முடிவூ ஜனாபதி அவர்களின் கரங்களில் தங்கியிருக்கின்றது.

அதாவது ஜனாதிபதி அவர்கள் மேல்நீதிமன்ற நீதிபதியினால் அனுப்பிவைக்கப்பட்ட ஆணையினை ஆயூள் தண்டனையாக மாற்றுவதற்கு அதிகாரமுடையவராவதுடன் அல்லாவிடின் அவர் குறித்த தினத்தில் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் அந்த ஆணையில் குறிக்கப்பட்ட நபருக்கு மரண தண்டனையினை நிறைவேற்றும்படியூம் கட்டளையிடலாம்.

மரண தண்டனையினை குறைக்கின்ற சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதியிடமிருந்து ஆலோசனைகள் அல்லது அனுமானங்களை (opinion) பெற்றுக்கொள்ளலாம் எனவம் குறித்த சட்டம் கூறுகின்றது. அவ்வாறு 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02ம் திகதியன்று நாட்டின் 69வது சுதந்திர தினத்தினை முன்னீட்டு ஜனாபதி அவர்களினால் மரண தண்டனை தொடர்பில் மீளாய்வ செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதியமைச்சில் செயற்பட்டுவந்த குழுவின் சிபார்சுக்கமைய 60 நபர்களது மரண தண்டனை ஆயள் தண்டனையாக ஜனாதிபதி அவர்களினால் குறைக்கப்பட்டமை ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

மரண தண்டனை தொடர்பில் இஸ்லாம் கூறுபவை பற்றி அவதானித்தால் புனித அல்-குர்ஆனில் அத்தியாயம் 2 இல் 178வது வசனம் பின்வருமாறு கூறுகின்றது
“முஃமீன்களே கொலைசெய்யப்பட்டவர்கள் விடயத்தில் பழிவாங்கல் உங்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அதே அத்தியாயத்தின் 179வது வசனத்தில் “அறிவூடையவர்களே! (கொலையூண்டவர்கள் விடயத்தில்) பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்வூண்டு.இதன்மூலம் பழிவாங்கிவிடுவார்கள் என்ற அச்சத்தினால் கொலைசெய்ய கருதுபவரும் அவரால் கொலைசெய்ய கருதப்பட்ட நீங்களும் தப்பித்துக்கொள்ளலாம்” என்று கூறுகின்றது.

மேலும் குறித்த வசனங்களின் கடினத்தன்மையினை குறைக்கின்ற ரீதியில் புனித அல்-குர்ஆனின் அத்தியாயம் சூரா அந்நிஸா 4 இல் 92வது வசனத்தில் கூறுவதாவது:

“மேலும் தவறுதலாக அன்றி ஒரு விசுவாசிக்கு மற்றொரு விசுவாசியை கொலை செய்வது ஆகுமானதல்ல. இன்னும் உங்களில் எவர் யாதொரும் விசுவாசியை தவறுதலாகக் கொலைசெய்துவிட்டால் அதற்கு நஷ்டஈடாக விசுவாசியாகிய ஒரு அடிமையை விடுதலை செய்தலாகும். இன்னும் அவர் குடும்பத்தார்களுக்கு ஒப்படைக்கப்படும் நஷஈடுமாகும். அக்குடும்பத்தவர்கள் மன்னித்து தருமமாக விட்டுவிட்டாலன்றி ஆகவே இறந்த அவர் உங்களுக்கு விரோதமுள்ள சமூகத்தாரில் உள்ளவராக இருந்து விசுவாசியாகவூம் அவர் இருந்தால் அப்போது விசுவாசியாகிய ஒரு அடிமையை விடுதலை செய்வதாகும். இன்னும் உங்களுக்கும் எவர்களுக்கும் மத்தியில் உடன்படிக்கை இருக்கின்றதோ அந்த சமூகத்தாரில் உள்ளவராக அவர் இருந்தால் அவருடைய குடும்பத்தாருக்கு ஒப்படைக்கப்படும் நஷ்டஈடுமு; விசுவாசியான ஓர் அடிமையை விடுதலை செய்தலுமாகும். இவ்வாறு செய்யூம் வசதியை யார் பெறவில்லையோ அவர் அல்லாஹ்விடம் பாவ மீட்சி பெற மன்னிக்கக் கோரி இரண்டு மாதங்கள் தொடராக நோன்பு நோற்க வேண்டும். மேலும் அல்லாஹ் நன்கறிந்தவனாக தீரக்கமான அறிவூடையவனாக இருக்கின்றான்”

இந்துசமய வேதாந்த தத்துவங்களை அவதானிக்கின்றபொழுது மனுநிதி அத்தியாயம் 7 விதி 22 இல் “குற்றம் செய்யாதவர்கள் உலகில் இருப்பது அருமை. எல்லா உயிர்களும் இதற்கு அஞ்சியே ஒழுகுகின்றன. தண்ட முறையின் பயனாகவே வாழ்வதற்கு உகந்த இடமாக உலகம் அமைகிறது. தண்டனையினாலேயே உலகம் திருத்தப்பட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

திருக்குரளில் குரல் 320 இல் “நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம். நோய் செய்யார் நோயின்மை வேண்டுபவர்” அதாவது தண்டனை மீறி பிறருக்கு துன்பம் இளைத்தவர்கள் அந்தத் துன்பத்தின் பயனை தானும் பெறுகின்றனர். நோயின் பயன் நோய் செய்தவரையே சேரும்படி செய்வது தண்டனை முறையாகும் என கூறப்பட்டுள்ளது.

மனுநிதியில் “அரசன் கடமையை செய்யூம் பொருட்டு அனைத்துயிர்களையூம் காப்பாற்றும் பொருட்டும் தர்மமே உருவான தெய்வீக ஒளியூடன்கூடிய ஒரு தண்டனையை கடவூள் படைத்தார்” என கூறப்பட்டுள்ளது.

சுக்கிரநீதியில் “அரசர்களுக்கு தண்டத்தோடு கூடிய நீதியினாலேயே எல்லாக் காரியங்களும் நிறைவேறுகின்றன. ஆதலின் அறங்கள் எல்லாவற்றிற்கும் தண்டனை சிறந்த புகலிடமாகும்” என கூறப்பட்டுள்ளது.

கொலையிற் குடியாரை வேந்தொருத்தல் பயிங்குன் கலை கட்டதோ நொடுநீர். நல்ல பயிருக்கு ஊரு விளையாமல் தடுக்கும் பொருட்டும் உழவன் களைகளை எடுத்து எறிகின்றான். அதுபோல் சமுதாயம் என்ற பயிர் கேடு அடையாமல் தடுப்பதற்கு குற்றவாளிகள் என்ற களைகள் அகற்றப்பட வேண்டியிருக்கின்றன. பயிருக்கு கேடு விளையாமல் தடுப்பதற்காக களையெடுப்பது போன்றவை குற்றவாளிகளை தண்டிப்பதாகும் என்ற உண்மையை வள்ளுவர் கூறுகின்றார்.

தண்டனைக்குரிய அடிப்படைத் தத்துவங்களினை அவதானிக்கின்றபொழுது சட்டமானது தண்டனைகளை விதிப்பதில் ஒரு நபர் திருந்தி வாழ்வதற்கான சந்தர்ப்பத்தினை அளிப்பதற்கும் சமூகத்தில் அவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெறுவதிலிருந்து தவிர்;ப்பதற்குமான இரண்டு கொள்கைகளை எடுத்துக்கூறலாம். இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடாகக் காணப்படுகின்றபோதிலும் சிறந்த தண்டனைக் கோட்பாடானது இரண்டு அடிப்படைத் தத்தவங்களுக்கு இடையிலும் ஒரு சமநிலையை ஏற்படுத்துகின்ற தண்டனையே ஒரு சிறந்த தண்டனையாகக் கருதப்படும் என்பது சட்டவியலாளர்களின் கருத்தாக இருந்துகொண்டிருக்கின்றது.

இவ்வாறான சூழலில் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள தண்டனைகளை அவதானிக்கின்றபொழுது அந்த இரண்டு தத்துவங்களையூம் தண்டனைகள் கருத்தில் எடுக்கின்ற என்பது புலப்படுகின்றது. அதாவது ஒரு தத்துவமானது சமூகத்திலிருந்து குற்றம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் இன்னுமொரு தத்துவம் அந்தக் குற்றத்தினைப் புரிந்த நபர் திருந்தி வாழ இடமளிக்க வேண்டும் என்பதுவூமாகும். அதாவது சில குற்றங்களுக்கு இலகுவான தண்டனைகளை அளிப்பதன்மூலமும் (கசையடி போன்ற) கடுமையான குற்றங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மரண தண்டனை போன்றன காணப்படுவதாக கூறலாம்.

சமூக நோக்கில் பார்க்கின்றபொழுது தண்டனைகள் கடுமையாக இருக்கின்றபொழுது எதிர்காலத்தில் அவ்வாறான குற்றங்கள் இடம்பெறுவதனை தவிர்க்க முடியூம் என்பது வெளிப்படையாகின்றது. எனினும் குற்றம் புரிந்தவருக்கு தான் திருந்திவாழ்வதற்கான அவகாசமளிக்கப்பட வேண்டும் என்கின்ற விடயத்தினைப் பார்க்கின்றபொழுது தீவிரம் குறைந்த தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பது புலப்படுகின்றது.

போதைப்பொருள் கடத்தல் அல்லது கொக்கோயின் ஹெரோயின் போன்ற கடுமையான போதைப் பொருட்களை கடத்துதல் அல்லது அதனை உடமையில் வைத்திருத்தல் அவற்றினை வியாபாரம் செய்தல் போன்ற செயற்பாடுகளை குற்றமாக ஷரீஆ விபரிக்கின்றதா இல்லையா என்பதனைப் பார்க்கின்றபொழுது மதுவினை தடைசெய்துள்ள புனித குர்ஆனின் வசனங்களை கருதுகோள்களாக அல்லது எடுகோள்களாகக் கொள்வது உசிதமாக இருக்கும். இதன் பிரகாரம் சூரா அல்-மாயிதா 5ம் அத்தியாயத்தின் 90 வது வசனத்தினையூம் 91வது வசனத்தினையூம் நாங்கள் அவதானிக்கலாம்.

“விசுவாசங்கொண்டோரே நிச்சயமாக மதுவூம் சூதாட்டமும் வணக்கத்திற்காக நடப்பட்டுள்ளவைகளான சிலைகளும் குறிபார்க்கும் சூதாட்ட அம்புகளான இவையாவூம் செய்தானுடைய செயலிலுள்ள அருவருக்கத்தக்கவையாகும். ஆகவே இவைகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றிபெறுவீர்கள். நிச்சயமாக செய்த்தான் நாடுவதெல்லாம் மதுவிலும் சூதாட்டத்திலும் அதன் மூலம் உங்களுக்கிடையில் விரோத்தினையூம் வெறுப்பையூம் உண்டுபண்ணவூம் அல்லாஹ்வை நினைவூகூர்வதை விட்டும் தொழுகையை நிறைவேற்றுவதைவிட்டும் உங்களை அவன் தடுப்பதுமேயாகும். ஆகவே அவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்” என்ற வசனத்தினை நாங்கள் அவதானிக்கலாம்.

அல்_குர்அன் போதை ஊட்டக்கூடிய அனைத்துப் பொருட்களையூம் மேற்கூறியவாறு தடைசெய்திருக்கின்றபொழுதும் எதுவித தண்டனைகளையூம் எடுத்துரைக்கவில்லை. எனினும் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சுன்னத்துக்களின் அடிப்படையிலும் இமாம் ஷாபிஈ அவர்கள் 40 தொடக்கம் 50 கசையடிகள் என தண்டனையின் அளவினை எடுத்துரைக்கின்றார். எனினும் மற்றய இமாம்களும் ஹஸரத் உமர் (ரழி) அன்ஹு அவர்களினுடைய காலகட்டத்தில் ஹஸரத் அலி (ரழி) அன்ஹு அவர்கள் அவமதிப்புக்கு 80 கசையடி என்று இருக்கின்றபொழுது அதாவது ஒரு பெண்ணை வேண்டுமென்று விபச்சார குற்றம் சுமத்துகின்றபொழுது அந்தப் பொய்க் குற்றச்சாட்டினை சுமத்திய நபருக்கு 80 கசையடிகள் வழங்கப்படும் என்று இருக்கின்றபொழுது அதே போன்று ஒரு தீவிரமான ஒரு கடுமையான குற்றம்தான் போதை ஊட்டக்கூடிய மருந்துளை உட்கொள்ளலும் அதை வியாபாரம் செய்வதும் என்பதனால் அதற்கும் 80 கசையடிகள் கொடுக்கப்பட வேண்டும் என கூறியதாகவூம் அதன் அடிப்படையில் 80 கசையடிகள் என வகுக்கப்பட்டதாகவூம் கூறப்படுகின்றது.

இஸ்லாமிய சட்டம் அல்லது ஷரீஆ வில் அல்-குர்ஆன் ஹதீஸ்களில் கூறப்பட்டாத சில குற்றங்களுக்கு தஹ்ஸீர் அடிப்படையில் தண்டனைகள் அந்தக் குற்றங்களை விசாரிக்கின்ற நீதிபதிகளினது தற்துணிவின் பிரகாரம் வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது. எனினும் 1987ம் ஆண்டில் சவூதி அரசாங்கமும் பின்னர் பாகிஸ்தானிய விசாரணை அரசுகள் கொக்கோயின்இ ஹெரோயின் போன்ற மிக அபாயகரமான போதைப் பொருட்களைக் கடத்துதல் மரண தண்டனைக்குரிய ஒரு குற்றம் என அறிவித்திருந்தது. இதற்கு 1987ம் ஆண்டுகளில் சவூதி அரசினது பத்வா குழுவினர் தஹ்ஸீர் அடிப்படையில் அவ்வாறான ஒரு தண்டனையை விதிக்கலாம் என்கின்ற முடிவூக்கு வந்துள்ளது.

எமது உலமா சபையினர் மரண தண்டனை விதிக்கப்பட்டோரது தண்டனையினை நிறைவேற்றுகின்ற ஜனாதிபதியின் ஏற்பாடுகளுக்கு இன்னும் எதுவித கருத்துக்களையூம் தெரிவிக்கவில்லை. ஷாபிஈ மத்ஹபில் தஹ்ஸீர் அடிப்படையில் மரணதண்டனை விதிக்கமுடியாது என்கின்ற கோட்பாடு இருக்கின்றமையினை நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் கருத்தில்கொள்ள வேண்டியிருக்கின்றது.

எனினும் ஹெரோயின்இ கொக்கோயின் போன்ற போதைப் பொருட்கள் சமூகத்தில் ஏற்படுத்துகின்ற விளைவூகளைப் பார்க்கின்றபொழுது அவற்றினால் அடிமைப்படுத்தப்படுகின்ற இளைஞர்கள் சமூகம் சீரழிந்து குடும்பவிழுமியங்கள் சிதைக்கப்பட்டு இளைஞர்களினுடைய எதிர்காலம் முழுமையாக சீரழிக்கப்படுவதனையூம் பாரக்கின்றபொழுது இது ஒரு மரண தண்டனைக்குரிய குற்றம் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும்.

எனவே கௌரவ ஜனாதிபதி அவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் மரண தண்டனiயினை மேற்கொள்வதற்கான முனைப்புகளை மேற்கொள்வது மக்களின் கவனத்தினை திசை திருப்புகின்ற அதாவது வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தினத்தில்; இடம்பெற்ற சம்பவத்திற்கு யார் உண்மையான காரணகர்த்தாக்கள் என்பது தொடர்பில் மக்களின் தேடுதலிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக அல்லது மக்கள் அதற்குரிய உண்மையான காரணகர்த்தாக்கள் யார் என்பதனை விளங்கி வருவதனை திசைதிருப்புவதற்காக இவ்வாறான செயற்பாடுகளில் இறங்கியுள்ளார் என சொல்லுகின்றபோதும் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் அதாவது ஆயூள் தண்டனை மூலம் இதுவரை காலமும் 10 வருடங்கள் அல்லது 15 வருடங்கள் அல்லது ஒரு சில காலங்களாக கைதிகளாக இருந்து வருகின்ற போதைப் பொருள் கடத்தலில் முதலாளிமார்களாக செயற்பட்டுவந்த சிறைச்சாலைகளிலிருந்துகொண்டு போதைப் பொருள் கடத்தலை வெற்றிகரமாக நடாத்திவந்த ஒரு சில நபர்களையூம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக கடுமையான தண்டனைகள் வழங்கிய நீதிபதியினைக் கொலைசெய்த போதைப்பொருள் கடத்தல் ஜாம்பவான்கள் மீதும் வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில் எதுவித தயக்கமும் இருக்கமுடியாது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும்.

ஆரிப் சம்சுதீன் 
சிரேஷ்ட சட்டத்தரணி
தேசிய அமைப்பாளர் - இளைஞர் காங்கிரஸ்  

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.