( மினுவாங்கொடை நிருபர் )

   ரஸா மல்ஹருத்தீன் 
 ஆசிரியரின் முயற்சியில், தம்பதெனிய பிரதேசத்தின் வரலாற்றினை சுமந்த "வைரம்"  என்ற சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது.

   இந்நிகழ்வு,  தம்பதெனிய அல் - ஹிஜ்ரா கல்லூரியின் ஆசிரியரும் நூல் ஆசிரியருமான ரஸா மல்ஹருத்தீன் 
 தலைமையில், கல்லூரியின்  கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்றது.

   இந்நிகழ்வில்,  பாடசாலை அதிபர் எம்.எஸ். ஷிபானா, முன்னாள் அதிபர் கே.எம். நிஷான் மற்றும்  ஆசிரியர்கள், ஹைரிய்யா பள்ளிவாசல் நிர்வாகத்தினர்,  பெற்றோர்கள், நலன் விரும்பிகள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.

   தம்பதெனிய பிரதேசத்தின் வரலாறு, பாடசாலையின் வரலாறு, மாணவர்களின் ஆக்கங்கள், ஆசிரியர்களின் ஆக்கங்கள் உள்ளடங்கியவாறு பல்சுவை சஞ்சிகையாக,  "வைரம்"  சஞ்சிகை திகழ்கின்றது.

   இச் சஞ்சிகை வெளியீட்டில் உதவிய மாணவிகளுக்கும், நூலசிரியருக்கும், நினைவுச் சின்னங்களும்  வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.