சிங்கள ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பெரும்பாண்மை சமூகத்தின் மத்தியில் முஸ்லிம்கள் சம்பந்தமான பல அதிர்வுகளை வித்தியாசமான கோணங்களில் ஏற்படுத்துகின்றது. இதற்கு அடிப்படைக்காரணம் முஸ்லிம் சமூகத்தைப்பற்றிய சரியன தகவல்கள் அவர்களின் ஏனைய சமூகங்களோடு இணைந்து வாழவேண்டும் என்ற மனப்பாங்குகளை உரிய முறையில் வெளிப்படுத்துவதற்கான ஓர் ஊடகம் இல்லை என்பது மிக நீண்ட காலங்களாக பேசப்பட்டுவந்தாலும் அதற்கான தீர்வு இன்னும் எட்டப்படவில்லை.

அண்மையில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் ஊடகவியலாளர்கள் பணிபுரியும் பத்திற்கும் மேற்பட்ட சிங்கள ஊடகவியலாளர்கள் என்னை எனது இல்லத்தில் சந்தித்திருந்தார்கள். அவர்களுடைய ஒவ்வொரு வினாக்களும் மிக ஆழமானதாகவும் முஸ்லிம்கள் பற்றிய தவறான பதிவுகளை எவ்வளவுதூரம் பெரும்பாண்மை சமூகத்திற்குள் பதிந்துள்ளது என்பதை என்றால் உணர முடிந்தது.

மார்க்கத்தின் பேரால் பிளவுபட்டு அதனை சமூகத்தின் தவறான கோணங்களாக பெரும்பாண்மை சமூகத்தின் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது என்பதை இஸ்லாம் மார்க்கம் பற்றிய கேள்விகள் எனக்கு உணரச்செய்தது.

21 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி பிறப்பாலும் காத்தான்குடியில் பல ஆண்டுகால வசிப்பாலும் காத்தான்குடி என்பதால் காத்தான்குடி என்றாலே அவர்கள் பயங்கரவாதிகள் என்ற ஓர் எண்ணப்பாட்டை எல்லோர்மத்தியிலும் உருவாக்கியுள்ளது என்ற உண்மையை அவர்களின் வினாக்கள் வெளிப்படுத்திநின்றது.

சில அரைகுறை மார்க்க அறிஞர்களின் பொதுத்தள உபனியாசங்கள், விளக்கங்கள், நேர்காணல்களில் முஸ்லிம் பெண்கள் இஸ்லாமியப்பார்வையில் ஆண்களின் அடிமைகள் போண்ற ஓர் கருத்தை பெரும்பாண்மை சமூகத்திற்குள் எத்திவைத்துள்ளதை பெண் ஊடகவியலாளர்கள் என்னைநோக்கி மிக அழுத்தமாக கேட்டார்கள்.

முஸ்லிம்களின் தனியார் சட்டம், விவாக விவாகரத்து சட்டங்கள் பற்றிய அவர்களின் பார்வை ஒரு நாட்டிற்குள் இரண்டு சட்டங்கள் போலவும் முஸ்லிம்களுக்கு தனியான சட்டம் ஒன்றிற்கான என்ன தேவைப்பாடுள்ளது போண்ற வினாக்கள் முஸ்லிம்கள் இந்த நாட்டிற்குள் வித்தியாசமான பார்வையை கொண்டவர்கள் போல் அவர்கள் கேள்விகள் அமைந்திருந்தது.

சீதனம் பற்றி முஸ்லிம்களிடம் இல்லாத அளவிலான புரிதல்கள் அவர்களிடம் இருந்தது. சுருக்கமாக ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் இலவசமாக அனுபவிக்க வேண்டுமென்றால் அவன் சீதனத்துடன் திருமணம் முடித்தால் போதும் என்றளவிற்கு அவர்கள் விளங்கிவைத்துள்ளார்கள்.

இப்படி எத்தனையோ கேள்விகள் அத்தனைக்கும் அவர்கள் அதேவிடயத்தில் மேலும் ஒரு கேள்வியை தொடுக்க முடியாமளவிற்கு விரிவாகவும் தெளிவாகவும் விடையளிக்க வழிகாட்டிய அல்லாஹ்வைக்கே எல்லாப்புகழும்

“அல்ஹம்துலில்லாஹ்”

பொறியியலாளர் ஷிப்லி பாரூக்
காத்தான்குடி நகர சபை 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.