2013ம் ஆண்டு..ஹலால் பிரச்சினையோடு.. பொது பல சேனா, நிகாப்.. புர்கா தடை கோரி சப்தமிட்டுக் கொண்டிருந்த தருணம்..
எனது .. முஸ்லிம் குரல் வானொலி நிகழ்ச்சியில் ஞானசாரரை நேரடியாக அழைத்து பேசிக்கொண்டிருந்த போது... 'தேரரே... மஜெஸ்டிக் சிட்டியில், லிபர்டி பிளாசாவில்.. கொழும்பு - கண்டி நகரில் கூட பெண்கள் குட்டைப் பாவாடை அணிகிறார்கள்.. அப்படியே பெந்தொட்டை - ஹிக்கடுவ பக்கம் போனால் பெண்கள் 'பிக்கினி' கூட அணிந்து உலவுகிறார்கள், சமய சித்தார்ந்தங்களுக்கு அப்பால்.. அது அவர்களது உரிமை.
இவ்வாறு தன் உடலின் பகுதிகளைக் காட்டுவது தமது அடிப்படை உரிமை என ஒரு சாரார் கருதும் போது... தம் உடலின் எந்தப் பாகத்தையும் வெளியாருக்குக் காட்டக் கூடாது என முஸ்லிம் பெண்கள் தாமாகவே நினைத்து அதற்கேற்ப ஆடை அணிவதும் அவர்களது அடிப்படை உரிமை தானே.. என நிதானமாக ஒரு கேள்வியை முன் வைத்திருந்தேன்...
கேள்வியை செவிமடுத்து.. சில செக்கன்கள் மௌனித்திருந்த ஞானசார.... 'ඔබ නිවෙරදි මහත්තයා...' நீங்கள் சொல்வதில் தவறில்லை ஏற்றுக்கொள்கிறேன் என்று பதில் சொல்லிவிட்டு... இன்னும் சில விநாடிகளில் நீங்கள் வாழும் ஜனநாயக சூழலில் இருந்து அவ்வாறு சிந்திக்க முடிகிறது. ஆனால் இங்குள்ள நிலைமை அவ்வாறில்லையென்று மிகவும் அமைதியாக பதில் சொல்லியிருந்தார்.
ஆறு வருடங்களின் பின்..அதே கேள்வியை எங்கள் சமூகத்திடம் கேட்க கூட முடியாத சூழ்நிலை!
முரண் - உலகம்!
(Irfan Iqbal)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.