(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)

2019 க.பொ.த. (சா/த) எழுதும் மாணவர்களுக்கான கணித பாட கருத்தரங்கும், அறிவுக்களஞ்சியப் போட்டியும் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் (14) நடைபெற்றது. அண்மையில் தீ விபத்தில் அகால மரணமடைந்த தமது வகுப்பை சேர்ந்த பாத்திமா முப்லா என்ற மாணவியின் நினைவாக, பாடசாலையின்   2017 O/L மாணவர்களால் மேற்படி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

தமது கன்னி முயற்சியாக மேற்படி நிகழ்வுகளை   2017 O/L  மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அறிவுக் களஞ்சியப் போட்டியில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா ம.வி., கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயம் மற்றும் உடுகொட அறபா ம.வி. ஆகிய பாடசாலைகள் போட்டியிட்டன. முதலாவது போட்டியில் பத்ரியா அணியை 10 மேலதிக புள்ளிகளால் வென்றது அறபா அணி. இறுதிப் போட்டியில் 10 மேலதிக புள்ளிகளால் முஸ்லிம் பாலிகா அணி அறபா அணியை வென்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. அறிவுக்களஞ்சியப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

கணித பாட கருத்தரங்கினை பூகொடை, குமாரிமுல்ல முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர் இக்பால் நாஸர் அவர்கள் நடாத்தினார். தங்களது வகுப்பு மாணவியான காலம் சென்ற முப்லா அவர்களின் நினைவாக நடாத்திய மேற்படி நிகழ்வுகள் வெற்றிகரமாக அமைந்ததாக கஹட்டோவிட்ட பத்ரியாவின் 2017 O/L மாணவர்கள் தெரிவித்ததுடன், அனைவரும் அவருக்காக பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொள்கின்றனர்.

தகவல் மற்றும் படம் - 2017 O/L Batch of Kahatowita Al Badriya MV

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.