ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது. மேலும் அம்மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. 

இதற்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் ராணுவம் எந்த எல்லைக்கும் செல்லும் என பகிரங்க எச்சரிக்கையும் விடுத்தது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது. 

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததையடுத்து இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தலைமையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. 

அந்த கூட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ரீதியிலான உறவை முறித்துக்கொள்ளுதல், இந்திய தூதரை திருப்பி அனுப்புதல் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. 

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரை திருப்ப பெற்றுவோம். அதே போல் இங்குள்ள இந்திய தூதரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடுவோம் என கூறினார். 

(மாலை மலர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.