அலுவலக வளாகத்தில் சிலருடன் கதைத்துக்கொண்டிருந்தோம். சிலர் ஆலிம்கள் பயான்களின போது உனர்ச்சிவசப்பட்டு அதிகம் சப்தம் வருகிறது என்றும் அதனால் பயான்களின் உயிரோட்டம் தடைப்பட்டுவிடுகிறது எனவும் ஆதங்கப்பட்டார்கள்.
இலங்கை வானொலியின் முன்னாள் பிரதிப்பணிப்பாளர் நாயகம் அமரர் வீ ஏ திருஞானசுந்தரம் அவர்கள் என்னிடம் ஒரு முறை இவ்வாறு கூறினார் " இஸ்லாமிய நற்சிந்தனையை ஆரம்பத்தில் நாங்கள் ஒலிப்பதிவு செய்தோம். ஆனால் இஸ்லாமிய நற்சிந்தனையை முஸ்லிம்களை விட தமிழ் நேயர்களே விரும்பிக் கேட்டார்கள். கலாநிதி எம் ஏ எம் சுக்ரி, மௌலவி எம் ஆர் எம் நிஸாம் போன்றவர்களின் நற்சிந்தனையை அவர்கள் அதிகம் விரும்பிக் கேட்டனர்" என்று கூறியதை மீட்டிப்பார்க்கிறேன்
மௌலவி எம் ஆர் எம் நிஸாம் அவர்கள் பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யாவின் பட்டதாரி. மக்கொன நகரை பூர்வீகமாகக் கொண்டவர். நீண்டகாலம் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவரது குரல் கணீரென்று இருக்கும். நிஸாம் பஹ்ஜியின் உரை ஒவ்வொரு தனிமனிதுடன் உரையாடுவதைப் போன்றது. பக்குவமான தமிழ். இலக்கணத்திலும், உச்சரிப்பிலும் தவறுவிடமாட்டார். ஒரு போதும் ஆக்ரோஷப்படவும்மாட்டார்.நீங்கள் அவரது வானொலி உரையை கேட்டால் அவர் உங்களுடன் பேசுவதைப் போல இருக்கும். Simple ஆன அணுகுமுறை பயன்படுத்துவார்.
அதனால் தான் மௌலவி எம் ஆர் எம் நிஸாம் அவர்களின் குரல் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு மத்தியில் இன்றும் வாழந்துகொண்டிருக்கிறது. இளம் ஆலிம்கள் இவர்களினன் உரைகளை கேட்பது காலத்தின் தேவை என்று கருதுகிறேன்.
மர்ஹும் மௌலவி எம் ஆர் எம் நிஸாம் அவர்களுக்கு வல்லநாயன் ஜன்னதுல் பிர்தௌஸை வழங்குவானாக.

(Fazhan Nawas)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.