நன்னீர் மீனவர்களை முன்னேற்றும் செயற்திட்டத்தின் கீழ் ரூபா 100,000 வீடமைப்பு உதவு தொகை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தலைமையில் (27) நடைபெற்றது. 

அதன் போது ரூபா 100,000 காசோலையை வீடமைப்பு உதவு தொகையாகப் பெற்ற நன்னீர் மீனவ குடும்பங்கள் 34 ஆகும். 
National Aquaculture Development Authority of Sri Lanka (NAQDA) இனால் அமுல்படுத்தப்படும் "ஏரி, கிராமத்துடன் தியவர அருண" வேலைத்திட்டத்தின் கீழ் நன்னீர் மீனவ மக்களின் முன்னேற்றத்திற்கு கௌரவ இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சியின் ஆலோசனைக்கு அமைய விசேட வீடு அபிவிருத்தி வேலைத்திட்டம் நடைபெற்று வருகிறது. 



அதன் கீழ் தங்காலை தொகுதி நன்னீர் மீனவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூபா 50,000 இற்குரிய காசோலை இதற்கு முன்னர் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

அங்கு இராஜாங்க அமைச்சர் உரையாற்றுகையில், "இந்த வீடமைப்பு உதவு தொகை திட்டத்தின் கீழ் சிறந்த மீனவருக்கு அந்த உதவியை வழங்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கு முந்திய ஆட்சியிலும் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றன. ஆனால் அந்த உதவிகளை அவர்களுக்குள்ளேயே பங்கிட்டுக் கொண்டனர். அப்போது எந்த வீடும் கட்டப்படவில்லை. உதவி பெற்றவர்களும் இல்லை. ஆனால் நாங்கள் அரசு என்ற வகையில் தற்போது சரியான நடவடிக்கைகளை செய்து வருகிறோம்." 

"மீனவர்களின் துக்கங்களை விளங்கியிருக்கும் அமைச்சர் என்ற வகையில், அன்புடன் உங்கள் அனைவரினதும் நாளைய தினம் வளமானதாக அமையவும் இந்தத் தொழிலினை பாதுகாக்கவும் நான் பாடுபடுகிறேன். அதே போன்று சகல மீனவர்களும் முன்னேற எதிர்காலத்திலும் பாடுபடுவேன்" என்றும் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி அவர்கள் மேலும் தெரிவித்தார்.





        

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.