அமைச்சா் மனோ கனேசனின் அமைச்சின் கீழ் உள்ள இந்துக் கலாச்சாரத் திணைக்களத்தினால் 220 கலைஞா்கள் 12 வாழ் நாள் சாதனையாளா்கள் மேலும் இளம் கலைஞா்களுக்கு அரச விருது கொடுத்து பண உதவி வழங்கமுடியும் என்றால் - முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சின் கீழ் உள்ள முஸ்லிம் சமய திணைக்களத்தினால் ஏன் வழங்க முடியாத இந்த அமைச்சுக்கு பொறுப்பாண அப்துல் ஹலீம் அமைச்சா் சற்று சிந்திக்க வேண்டும்.

காலம் சென்ற இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் அஸ்வா் அவா்கள் முஸ்லிம் சயம பண்பாட்டு அலுவல்கள் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் முஸ்லிம் கலைஞா்களை காத்திப்புல் ஹக், போன்ற அரபு பெயா்களை வைத்து கலைஞா்களை பாராட்டி கௌரவித்தாா். இருந்தும் அமைச்சா் மனோ கனேசன் - பி.எச். அப்துல் கமீத், காப்பியக்கோ ஜின்னா சரிபுத்தீன் ஆகியோாருக்கு வாழ்நாள் விருதும், இளம் கலைஞா்கள் வரிசையில் பேராதனை ஜூனைதீன், பொத்துவில் அஸ்மின், இர்பான் மொகமட், அபு உபைதா ஆகிய முஸ்லிம் கலைஞா்களையும் கௌரவித்துள்ளாா். 

ஆகவே முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளா், அமைச்சா் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் கலைஞா்கள் எழுத்தாளா்கள் ஊடகவியலாளா்களை வருடா வருடம் 200 பேரையாவது அவா்கள் வாழும்போதே வாழ்த்தி அரச மட்டத்தில் கௌரவிப்பது சிறந்ததாகும்.

- அஸ்ரப் ஏ சமத் - 




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.