சஜித் பிரேமதாச மக்கள் தோல் கொடுத்து வந்த தலைவர் ஒருவரே அன்றி ஒப்பந்த அரசியலில் அதிகாரத்தை பெற்றுக் கொண்ட நபர் அல்ல என பிரதி அமைச்சர் நளீன் பண்டார தெரிவித்தார்.

ஹோமாகம பகுதியில் நேற்று (07) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு அவர் கொண்ட இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சஜித் பிரேமதாசவை இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்காவிட்டால் அது கட்சியின் பின்னடைவுக்கான காரணமாக அமையும் எனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதற்கு இடமளிக்க மாட்டார் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், சஜித் பிரேமதாச ஜனாதிபதியான பின்னர், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ள போது வேறு கட்சியின் உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்க மாட்டார் எனவும், சஜித்திடம் அவ்வான ´டீல்´ இல்லை எனவும் நளீன் பண்டார தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.