மாவனல்லை இளைஞர்களை உள்ளடக்கிய ரீ-ட்ரீ ஸ்ரீ லங்கா (Re-Tree Sri Lanka) அமைப்பு
அரநாயக்க பிரதேசத்தி‌ல் அமைந்துள்ள ஜம்புகஸ்மட அருவியின் இரு புறங்களிலும் 500
மரக்கன்றுகளை நடும் செயற்திட்டமொன்றைத் திட்டமிட்டு கடந்த ஆகஸ்ட் மாதம்
வெற்றிகரமாக அமுல்படுத்தியது.

ஜம்புகஸ்மட அருவியானது மாவனல்லை அரநாயக்க பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட
பிரதேசமாகும். இயற்கை எழில் கொஞ்சும் இவ் அழகிய அருவியானது அப்பிரதேசத்தைச் சூழ
வாழும் கிராமத்தினரின் பிரதான வாழ்வாதாரமாகக் காணப்படுகிறது. குடிநீர் போன்ற
அத்தியாவசியத் தேவைகள் மற்றும் சிறிய அளவிலான மீன்பிடித் தொழில் அருவியைச் சார்ந்த
வருமான ஆதாரங்களிற்கும் மக்கள் பெரிதும் இவ் அருவியைச் சார்ந்திருக்கின்றனர். மேலும்
இவ் அருவிஇ அப்பிரதேசத்தில் இயங்கும் குருகொட (Gurugoda) மின் ஆலையின் பிரதான
சக்தி மூலமாகவும் திகழ்கிறது. எனினும் நிலச்சரிவு அபாயம் மிக்க பிரதேசங்களுள் அரநாயக்க
பிரதேசமும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் காரணமாக ஜம்புகஸ்மட அருவியின் இரு கரையோரங்களையும் இயற்கை அனர்த்தங்களிலிருந்து
பாதுகாத்து அதன் நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ரீ-ட்ரீ ஸ்ரீ லங்கா அணி
இச் செயற்திட்டத்தை மேற்கொண்டது.

இந் நிகழ்வின் போது அரநாயக்க பிரதேச செயலாளர் உட்பட 150 இற்கும் மேற்பட்ட பிரதேச
செயலக உத்தியோகத்தர்கள்இ அரநாயக்க பிரதேச கிராம சேவகர் குருகொட மின் ஆலையின்
ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.

இலங்கை இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்ட 'துருலிய வெனுவென் அபி' மர நடுகைத்
திட்டத்திற்கு 200010 மரக்கன்றுகளை அன்பளிப்புச் செய்து தமது முதலாவது செயற்திட்டத்தை
வெற்றிகரமாக நிறைவு செய்த ரீ-ட்ரீ ஸ்ரீ லங்கா அணி இச் செயற்திட்டத்தையும் மிகவும்
வெற்றிகரமாக நிறைவு செய்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றமை
குறிப்பிடத்தக்க அம்சமாகும்.















SAFRAS MUZAMMIL

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.