தேசிய மீலாத் தின போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடம்


2013 ம் ஆண்டு பாடசாலை தனியாக மாகாண பாடசாலையாக பிரிக்கப்பட்டு 7 ஆண்டுகளில் ஒன்றன் பின்  ஒன்றாக  தொடராக வெற்றி நடைபோடும் மே /மா /கள அல்முபாரக் கனிஷ்ட வித்தியாலயம் - மள்வானை  இவ்வருடமும் அதனது சிறந்த நிர்வாகம் மற்றும்  ஆசிரியர் குழாத்தின் அயராத அர்ப்பணம் பா.அ.ச. ஒத்துழைப்பு காரணமாக இன்னொரு காத்திரமான மைல்கல்லை எட்டி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

2019 ம் கல்வியாண்டில் நடைபெற்று முடிந்த தேசிய மட்ட மீலாத்   போட்டியில் ஆரம்ப பிரிவு பேச்சு போட்டி தமிழ் மொழிப்பிரிவில்
நாச்சியாதீவு பர்வீன்  -  பாத்திமா நஸ்மியா தம்பதியின் செல்வப் புதல்வி செல்வி பாத்திமா மர்யம்
  தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்றுக்கொடுத்து  பாடசாலைக்கும் ஊருக்கும் நிலையான பெருமையை புகழை தேடித்தந்தந்துள்ளார்.

பாடசாலை நிர்வாகம் ஆசிரியர் குழாம் பா.அ.ச. மற்றும் பெற்றோர் நலன்விரும்பிகள் சார்பாக  அவரை மனதார வாழ்த்துகின்றோம்.
பிரார்த்திக்கின்றோம்.


பாடசாலை நிர்வாகம்
Share:

sanitary napkin ; உலகின் பணக்கார நாடுகளில் கூட இதை வாங்க முடியாதவர்கள் உள்ளனரா ?

பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஸ்கொட்லாந்தை பிரதிநிதித்துவம் செய்யும் டேனியல் ரோவ்லி எனும் பெண்  உறுப்பினர் கடந்த ஜூன் மாதத்தில் கூட்டத் தொடருக்கு தாமதமாகி சமுகமளிக்கிறார்.தாமதத்திற்கு மன்னிப்பை கேட்டவர்,மாதவிடாய் காரணமாகவே தனக்கு தாமதமாக நேர்ந்ததாகவும் மாதமொன்றிற்கு அதற்காக 25 யூரோ செலவாவதாகவும் குறிப்பிடுகின்றார்.

sanitary napkin குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அவரது நோக்கமாகும்.உலகின் பணக்கார நாடுகளில் கூட இதை வாங்க முடியாதவர்கள் உள்ளனரா ? என கேள்வியெழுகிறது.

ஆம். ஸ்கொட்லந்தில் ஐந்திலொரு பெண்ணும்,முழு பிரித்தானியாவிலும் பத்தில் ஒருவரும் இவற்றை வாங்க வசதியின்றி மாற்று வழிகளை நாடுகின்றார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெண்கள் நல அமைப்புகளின் அறிக்கைகள் பிரகாரம் பல பெண் பிள்ளைகள் மாதவிடாயின் போது உபயோகப்படுத்த நெப்கின் இல்லாதமையால்  பாடசாலைக்கு செல்வதில்லை என்று அறியப்பட்டது.

 இது குறித்து பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டு பிரித்தானியாவில் நெப்கின்களுக்கான வரிகளை நீக்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. நெப்கின்கள் அத்தியாவசிய தேவையல்ல,ஆடம்பர தேவை என்ற ஐரோப்பிய கவுன்சிலின் கூற்றுக்கமைவாக அது சாத்தியப்படாத  காரணத்தால் அடுத்த வருடத்திலிருந்து (2020) பாடசாலை,பல்கலைக்கழக மாணவியருக்கு இலவசமாக நெப்கின் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் ஸ்கொட்லாந்து கடந்த வருடத்திலிருந்தே பாடசாலை,பல்கலைக்கழக மாணவியருக்கு இலவசமாக நெப்கின்களை வழங்கி வருகிறது.உலகில் இலவசமாக நெப்கின் வழங்கும் முதல் நாடு ஸ்கொட்லாந்து ஆகும்.

தனக்கு ஏற்பட்ட மாதவிடாயின் உபாதையை "சும்மா தலைவலி" என்று சொல்லிக் கொள்ளும் பெண்களும், "அதோ அந்த பெக்கட் ஒன்று தாங்க" என்று தயங்கி கேட்கும் ஆண்களும்,பிறர் காணாதவாறு அதை சுற்றிக் கொடுக்க பத்திரிகை தேடும் முதலாளிமாரும் உள்ள தேசத்தில் இவ்வாறான வாக்குறுதிகள் நகைப்புக்குரியவையே..

சவரம் செய்யாத இரண்டு நாள் தாடியை எந்தப் பெண்ணும் கேலி செய்வதில்லை.ஆயின் மாதவிடாயின் கறையை கேலிக்குரியதாக நோக்கும் மனிதர்கள் மத்தியில் இதுவெல்லாம் பேசத் தகாதவை என்பதில் முரண்பட எதுவுமில்லை.

தலைவலிக்கு பரசிட்டமோல்,சவரம் செய்ய பிக் ரேசர் போன்றுதான் இது ஒரு அத்தியாவசிய தேவை.ஆனால் எம்மைப் போன்ற நாட்டவரிற்கு இதுவே ஆடம்பரத் தேவையாகிப் போனது.

இலங்கைப் பெண்களில் 30% பெண்களே இந்த நப்கின்களை உபயோகிக்கிறார்கள்.ஏனையவர்கள் பழைய துணிகளையும் பேப்பர் கட்டுகளையும் பாவிக்கிறார்கள்.இதனால் பல்வேறு நோய்த் தொற்றுக்களுக்காளாகிறார்கள்.

 பாவித்த பழைய துணியை கழுவ சவர்க்காரம் வாங்க வசதியின்றி அதை எரித்தோ,புதைத்தோ விட்டு இன்னொரு துணிக்காக யாசிப்போர் குறித்து கைகளில் ஐபோன் வைத்திருப்போருக்கு தெரிவதில்லை.

மாதவிடாயின் போது ஏற்படும் அவஸ்தைகள் காரணமாக அந்த மூன்று நாட்கள்  பல மாணவியர் பாடசாலைகளுக்கு வருவதில்லை.தொழில் செய்யும் பல  பெண்கள் விடுப்பெடுக்கிறார்கள்.இவை ஒரு நாட்டின் பொருளாதார சுட்டிகளில் தாக்கம் செலுத்தும் காரணிகளாகும்.

எனவே சஜித்தின் கொள்கைகள் குறித்து பல்வேறு  முரண்பாடுகள் இருந்தாலும் இத்தகைய செயற்பாடு பாராட்டுக்குரியது.

--------------------------
எவ்வாறு மாதவிடாய் குறித்து  சரியாக அறிந்து அரசு இவற்றை விநியோகிக்கும் ???

நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு MOH பிரிவிலும் சகல பருவத்தை சார்ந்த  பெண்கள் குறித்தும் தகவல்கள் இருக்கின்றன.எவ்வாறு கர்ப்பிணிகளுக்கும் சிறுவர்களுக்கும் திரிபோஷ ,விட்டமின் மாத்திரைகள் தேவைக்கேற்ப விநியோகிக்கப்படுகின்றனவோ அதே போல விநியோகிக்கப்படலாம்.

சகல பாடசாலைகளிலும் மாணவியர் பற்றிய தகவல்கள் நிச்சயம் இருக்கும்.அதில் பருவமடைந்த மாணவியர் குறித்து ஆசிரியை ஒருவர் தகவல்களைப் பெற்று வருடத்தில் இருமுறையோ,மூன்று முறையோ நப்கின்களை ஒரேயடியாக விநியோகிக்கலாம்.

அல்லது சீருடைகள்  வழங்குவது போன்று வவ்ச்சர் மூலமாகவும் வழங்கப்படலாம்.

இலவச சீருடை,கஷ்டப் பிரதேச மாணவருக்கான சப்பாத்து விநியோகம் போன்றதொரு செயற்பாடுதான் இதுவும்.ஊழல்களும் துஷ்பிரயோகங்களும் எல்லாத் துறையிலும் இடம்பெறுவது போல இதிலும் இடம்பெறும்.இலங்கையில் அதுவெல்லாம் புதிதல்லவே.அதற்காக எல்லா திட்டங்களையுமா கைவிட முடியும்?

(ஆயிஷா அபூபக்கர்)
Share:

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு


புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை சற்று முன்னர் வெளியிட்டுள்ளார்.

கண்டி கிவின்ஸ் ஹோட்டலில் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகிறன்றது.

முன்னதாக, சஜித் பிரேமதாச இன்று முற்பகல் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரதி ஒன்றை மல்வத்து பீடத்தின் மகாநாயக்கருக்கு கையளித்திருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த தேர்தல் விஞ்ஞாபனம் " சஜித் சமூக புரட்சி" என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்ட அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல, மலையக வாக்குகள் மூலம் சஜித் பிரேமதாச வெற்றிப் பெறுவார் என தெரிவித்தார்.

இதேவேளை, நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்னவால் குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கம் தொடர்பில் இதன்போது தௌிவுபடுத்தப்பட்டிருந்தது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினால் அங்கு வருகை தந்திருந்த மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத்தலைவர்களுக்கு மற்றும் ஏனைய தரப்பினர்களுக்கு தேர்தல் விஞ்ஞாபனம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(AdaDerana)
Share:

இது இலங்கையில் நடைபெறும் கடைசித் தேர்தலாக இருக்கலாம்


இந்த ஜனாதிபதித் தேர்தலும் அதன் பின்னர் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலும் ஒருவேளை இலங்கையில் நடைபெறும் கடைசித் தேர்தல்களாக இருக்கலாம்..சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆள்வது போன்ற ஒரு சிஸ்டம் வரலாம்...எழுத்து சுதந்திரம் இருப்பதால் இப்போதைக்கு இந்த ஊகத்தை எழுத முடியும்.....

கட்டற்ற ஜனநாயக சுதந்திரமும் அதன் விளை நிலங்களில் ஒன்றாக அமைந்த எதையும் எழுதும் சுதந்திரமும் சுவாரஷ்யமான எழுத்தின் வழியே உலகமெங்கிலும் இருந்து கிடைக்கப்பெற்ற நண்பர்களும் என்று எத்தனை குறைகள் இருந்தாலும் ஒரு வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடு போல அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்..இதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு நிலைக்கும் என்று தெரியவில்லை....

பகுத்தறிவும் ஜனநாயகப் பண்புகளில் நம்பிக்கையும் கொண்ட அரச ஊழியர்கள் இன்று ஆரம்பமாகும் தபால் மூல வாக்களிப்பில் மிகச் சரியான தீர்மானத்தை எடுக்கட்டும்...

(ஸபர் அஹ்மத்)
Share:

இன்றும் நாளையும் தபால் மூல வாக்களிப்பு


எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது ஜனாதிபதித் தேர்தலின் தபால்மூல வாக்கெடுப்பு இன்றும், நாளையும் இடம்பெறும்.

காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அரச அதிகாரிகள் தமது வாக்குகளை அளிக்க முடியும்.

இதற்காக 7,920 வாக்களிப்பு நிலையங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அமைக்கப்பட்டுள்ளன. தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அவர்களது நிறுவனத்திலே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆறு லட்சத்து 59 ஆயிரத்து 30 பேர் தபால்மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தபால்மூல வாக்கெடுப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்தார்.

தபால்மூலம் வாக்களிப்பதற்காக ஏழு லட்சத்து 17 ஆயிரத்து 871 அரச ஊழியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 58 ஆயிரத்து 841 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தவிர்க்க முடியாத காரணத்தினால் இன்றும், நாளையும் வாக்களிக்க முடியாதவர்களுக்கு நவம்பர் மாதம் 7ஆம் திகதி தெரிவத்தாட்சி அலுவலகங்களில் வாக்குகளை செலுத்த முடியும் என திரு ரட்நாயக்க குறிப்பிட்டார். வாக்களிப்பு இடம்பெறும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களுக்காக சுமார் ஆயிரம் கண்காணிப்பாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

அதிவிசேட பாதுகாப்பு கோரப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு மேலதிக பாதுகாப்புகளை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகளங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், அடிக்கடி பொலிஸார் ரோந்து நடவடிக்கைளில் ஈடுபடவும் உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)
Share:

ஒக்டோபர் 31 - நவம்பர் 6 வரை கம்பஹா உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு


( மினுவாங்கொடை நிருபர் )

   நாட்டின் பத்து  மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேற்கொள்ள சுகாதாரம், போஷணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

   கொழும்பு, கம்பஹா,  களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, புத்தளம், இரத்தினபுரி, கேகாலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இவ்விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

   இதன்பிரகாரம்,  31ஆம் திகதி முதல் நவம்பர் 6 ஆம் திகதி வரை இரண்டு கட்டங்களாக இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு  அறிவித்துள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )
Share:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரின் துணைவியார் காலமானார் - ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் அனுதாபம்


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனின் துணைவியார் ஜீ. லத்தீபா பேகம் (வயது 72) இன்று (30.10.2019) புதன்கிழமை பகல் ஒரு மணி அளவில் திருச்சியில் உள்ள சுந்தரம் மருத்துவமனையில் காலமானார்.

அன்னாரது ஜனாஸா காஜா நகர் திருச்சி காயிதே மில்லத் தெருவில் உள்ள அவர்களது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் நல்லடக்கம் நாளை (31.10.2019) வியாழக்கிழமை பகல் 1 மணி அளவில் திருச்சி காஜாமலை மஸ்ஜிதே ஹு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது ஜனாஸா தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு அனுதாபம் தெரிவித்துள்ளார்.

Share:

சஜித் ஜனாதிபதியானால் நான் பிரதமர்

சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தான் தொடர்ந்தும் பிரதமராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிக் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Share:

தேர்தல் தொடர்பில் கருத்துக்கணிப்புக்களை நடத்தி, வாக்காளர்களை குழப்புவது குற்றம்( மினுவாங்கொடை நிருபர் )

   ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான  கருத்துக்கணிப்புக்களை நடத்தி, வாக்காளர்களைக் குழப்பும் செயற்பாட்டில் எவரும் ஈடுபடக்கூடாது என, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுள்ளார்.

   கொழும்பில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர்  மேலும் தெரிவிக்கையில்,   தேர்தல்கள் ஆணைக்குழு சில விடயங்களை தற்போது கண்காணித்து வருகிறது.

   அதாவது, சில தனியார் வகுப்புக்களிலும் சில தனியார் நிறுவனங்களிலும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான  கருத்துக்கணிப்புக்கள் நடத்தப்படுவதாகவும், இதன் பிரதிபலன் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

   இது ஒரு சில நபருக்கு, தாங்கள் வாக்களிக்கும்போது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். 

   எனவே, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான  சட்டத்தின் 72 ஆவது உறுப்புரிமையில், இது குற்றமாகவே கருதப்படுகிறது.

   அத்தோடு, குறித்த நிறுவனங்களில் வேலை செய்யும் ஒரு சிலர் மற்றும் குறித்த தனியார் வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களின் கருத்தை, ஒட்டு மொத்த நாட்டின் பெறுபேறாகக் கருதுவதும் பாரிய குற்றமாகும்.

தேர்தலொன்றின்போது செலுத்தப்பட்ட வாக்குகளின் பெறுபேறுகள், இன்னொரு தரப்பினரைப் பாதிக்காத வகையில்தான் வெளியிடப்பட வேண்டும். அதாவது, தபால் மூல வாக்களிப்பின் பெறுபேற்றை, சாதாரண வாக்களிப்புக்கள் முடிவடைந்த பின்னர்தான் வெளியிடவேண்டும்.

   அவ்வாறு இல்லாவிட்டால், அது ஏனைய வாக்காளர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். எனவே, இவ்வாறான செயற்பாடுகளைக் கைவிடுமாறு,  அனைத்துப் பிரஜைகளிடமும் கேட்டுக்கொள்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

( ஐ. ஏ. காதிர் கான் )
Share:

ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெறுவார் ? ஆய்வறிக்கைகள் என்ன கூறுகின்றன ?தேர்தல் ஒன்றுக்கான திகதி அறிவிக்கப்பட்டால் கருத்துக் கணிப்புக்களுக்கும், ஆய்வறிக்கைகளுக்கும் பஞ்சம் இருப்பதில்லை.

அதிலும் ஏனைய தேர்தல்களைவிட இந்த தேர்தலில் வெற்றிபெறுவதற்கு சாத்தியமான இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே உள்ளதனால் ஆய்வறிக்கைகள் மலிந்து காணப்படுகின்றது. 

இது அரசியல்வாதிகளிடமிருந்து பணம் சம்பாதிப்பதற்கான புதுவகையான தந்திரோபாயமே தவிர அதில் எந்தவித உண்மையும் இல்லை. ஏனெனில் கடந்தகால வரலாற்றில் வெளியான எந்தவொரு ஆய்வறிக்கைகளும் தேர்தல் பெறுபேறுகளுடன் ஒத்துப்போனதில்லை.

அது ஒருபுறமிருக்க, யார் வெற்றி பெறுவார் என்ற அறிக்கையை அமெரிக்க தூதரகம் வழங்கியுள்ளதாகவும், புலனாய்வு துறையினர் துல்லியமான அறிக்கைகளை தயாரித்துள்ளதாகவும் வதந்திகள் பரப்பப்படுவது வழமையாகும்.

வாக்களிக்கின்ற மக்கள் நாட்டின் பல பாகங்களிலும், மூலை முடுக்குகளிலும் பரந்து காணப்படுகின்ற நிலையில், யார் வெற்றிபெறுவார் என்று எங்கயோ இருக்கின்ற அமெரிக்க தூதரகம் எவ்வாறு அறிக்கை வழங்க முடியும் ? 

தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சுமார் இருபது நாட்கள் இருப்பதனால் அதற்குள் பிரச்சார தந்திரோபாயங்கள் காரணமாக மக்கள் மனதில் பலவித மாற்றங்கள் நடைபெறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றது.

அத்துடன் இந்த காலப்பகுதிக்குள் அரசியல் பிரமுகர்களின் கட்சித் தாவல்கள் நடைபெறலாம். மதில்மேல் பூனையாக இருக்கின்றவர்கள் மற்றும் யாருக்கு வாக்களிப்பது என்று இதுவரையில் முடிவெடுக்காமல் இருக்கின்றவர்களின் மனோநிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.

இவைகள் ஒருபுறமிருக்க தேர்தல் நடைபெறுவதற்கு முன்புள்ள சில மணித்தியாலங்களுக்குள் வாழ்வாதாரப் பொருட்கள் அல்லது பணம் வழங்கப்பட்டு அப்பாவி ஏழைகளின் வாக்குகள் விலைக்கு வாங்கப்படலாம்.

அத்துடன் அரசியலில் திடீர் திடீரென ஏற்படுகின்ற மாற்றத்தினால் வேட்பாளர்களின் செல்வாக்கில் வீழ்ச்சியும், வளர்ச்சியும் திடீரென ஏற்படலாம். இதற்கு இருபத்தி நான்கு மணித்தியாலங்கள் போதுமானது. 

இவ்வாறான களநிலவரங்களை துல்லியமாக அறியாமலும், நடுநிலையாக சிந்திக்காமலும் ஆய்வறிக்கை என்ற போர்வையில் தான் சார்ந்த வேட்பாளருக்கு சாதகமாக அறிக்கைகளை வெளியிட்டு அவரை மகிழ்சிப்படுத்துவதுடன் பணம் சம்பாதிக்கின்ற பொய்யர்கள் மத்தியில் நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு வெளியிடப்படுகின்ற அறிக்கைகள் மக்களை குழப்புவதற்கான தந்திரோபாயம் என்பது வேட்பாளர்களுக்கு தெரியாமலில்லை. ஆனாலும் தளம்பல் நிலையில் உள்ள வாக்காளர்களை தன்பக்கம் ஈர்க்க முடியும் என்பது வேட்பாளர்களின் தந்திரோபாயமாகும்.

எனவே யார் வெற்றிபெறுவார் என்று தேர்தல் நடைபெறுவதற்கு முன்புள்ள ஒருசில தினங்களுக்கு முன்பு ஊகிக்கலாமேதவிர, எந்தவொரு ஆய்வரிக்கைகளாலும் நூறுவீதம் உறுதியாக கூறமுடியாது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
Share:

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தீபாவளி வாழ்த்து


இந்துக்களுக்கு கேடு விளைவித்த நரகாசுரனைத் தோற்கடித்த தினமான இன்று இந்து பக்தர்கள் விளக்குகளை ஏற்றி சமயச் சடங்குகளில் ஈடுபட்டு தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:

இருளிலிருந்து வெளிச்சத்திற்கும், தீமையிலிருந்து நன்மைக்கும் மீண்டு அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று அனைத்து அம்சங்களிலும் தனிப்பட்ட ரீதியிலும் பொது சமூகரீதியிலும் ஆன்மீக விடுதலைக்கான போராட்டத்தை வெற்றி கொள்வதனை அடையாளப்படுத்தும் வகையில் உலக முழுவதும் இந்து பக்தர்கள் விளக்குகளை ஏற்றி சமயச் சடங்குகளில் ஈடுபட்டு தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

இந்துக்களுக்கு கேடு விளைவித்த நரகாசுரனைத் தோற்கடித்த தினம் மற்றும் இராமன் வனவாசத்திலிருந்து மீண்டு சீதையுடன் மீண்டும் அயோத்திக்கு வருகை தந்தமை என்பன விசேடமாக தீபாவளி தினத்தில் நினைவுபடுத்தப்படுகின்றன. இந்த அனைத்து புராணக் கதைகள் சம்பிரதாயங்கள் சமயச் சடங்குகள் ஊடாகவும் மனிதனிடமும் சமூகத்திலும் காணப்படும் தீமை எனும் இருளை விரட்டியடித்து நன்மை எனும் வெளிச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது.

தீபாவளிச் சடங்குகள் ஊடாக தன்னிடமுள்ள அகங்காரம் பேராசை பொறாமை போன்ற தீய எண்ணங்களை நீக்கி நலன் மிகுந்த அம்சங்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பது இந்து சமய நம்பிக்கையாகும். மானிடம் மேலோங்கி சமாதானம் நிலைபெற்று மனிதன் தனது தனிப்பட்ட அபிலாசைகள் தொடர்பாக மாத்திரம் கவனஞ் செலுத்தாது ஏனையோரின் நலன்கள் தொடர்பாகவும் கவனஞ் செலுத்த வேண்டும் எனத் தீபாவளி எடுத்தியம்புகிறது.

பிளவுபட்டுப் பிரிந்து செல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருப்பினும் தமது உள்ளங்களிலுள்ள ஞானத்தின் ஒளி அகன்று விடாது பேணிச் சென்று ஐக்கியத்துடனும் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வது நம் அனைவரினதும் பொறுப்பு என்பதை நினைவுபடுத்துவதுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் சகோதர இந்து மக்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்
Share:

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை; மீட்கப் போராடும் திருச்சி மாவட்டம்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.


தினத்தந்தி: குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு தீவிர முயற்சி

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நவீன கேமரா பொருத்திய கருவியை பயன்படுத்தி மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே விவசாயமும் செய்து வந்தார். இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2).
பிரிட்டோ தனது வீட்டு உபயோகத்திற்கான தண்ணீர் தேவைக்காக, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு அமைத்திருந்தார். சுமார் 400 அடி ஆழத்திற்கு அந்த ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.
ஒரு ஆண்டு வரை அந்த ஆழ்துளை கிணறு பயன்பாட்டில் இருந்தது. பின்னர் தண்ணீர் இல்லாத நிலையில், அந்த ஆழ்துளை கிணறு பயன்பாடின்றி இருந்தது. இதனால் ஆழ்துளை கிணற்றை மூடும் வகையில், மேல்மட்டம் வரை மண்ணை கொட்டியுள்ளனர். தற்போது அந்த பகுதியில் சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மழை பெய்ததால் ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் சுமார் 30 அடி ஆழம் வரை கீழே இறங்கியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பிரிட்டோ வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் கலாமேரி, சுஜித்வில்சனுடன் இருந்தார். மாலை சுமார் 5.30 மணியளவில் சுஜித்வில்சன் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவன் சோளம் சாகுபடி செய்யப்பட்ட பகுதியில் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இதில் மண்ணில் உராய்ந்தபடி சென்று அடிப்பகுதியில் சிக்கினான்.
இதைக்கண்ட கலாமேரி அலறியடித்துக்கொண்டு அங்கு ஓடிச்சென்றார். குழந்தை அடிப்பகுதியில் சிக்கியிருப்பதை கண்டு அவர் சத்தம்போட்டார். இதனால் அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். மேலும் உடனடியாக இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் பிரிட்டோவுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வேலைக்கு சென்ற இடத்தில் இருந்து, பிரிட்டோ பதறியடித்துக்கொண்டு அங்கு வந்தார்.
மேலும் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம் மற்றும் போலீசார், மணப்பாறை மற்றும் திருச்சியில் இருந்து தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து பார்த்து, குழந்தையை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மிகவும் குறுகலான அந்த ஆழ்துளை கிணற்றில், ஆட்கள் யாரும் இறங்க முடியாத நிலையில், கிணற்றின் அருகே குழிதோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்தனர்.
அதன்படி அங்கு 4 பொக்லைன் எந்திரங்கள் உள்ளிட்ட 5 எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, ஆழ்துளை கிணற்றின் அருகே குழிதோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதற்காக அந்த பகுதியில் மின்விளக்கு வசதி செய்யப்பட்டது.
இதற்கிடையே அங்கு 108 ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. ஆழ்துளை கிணற்றின் அடிப்பகுதியில் சிக்கியுள்ளதால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆழ்துளை கிணற்றுக்குள் சிறிய டியூப் மூலம் ஆக்சிஜன் செலுத்தும் பணியில் மருத்துவக்குழுவினர் ஈடுபட்டனர். மேலும் அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்தனர்.
மணப்பாறை அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் முத்துகார்த்திகேயன் தலைமையிலான குழுவினர், ஆழ்துளை கிணற்றில் உள்ள குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகும் காட்சிகளை டி.வி.யில் பார்வையிட்டு, குழந்தையின் நிலையை கண்காணித்தனர். எந்திரங்கள் மூலம் இரவு 8.15 மணியளவில் சுமார் 17 அடி வரை குழி தோண்டப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு கீழே பாறை இருந்ததால், குழிதோண்ட முடியாத நிலை ஏற்பட்டது.

Image copyrightDAILY THANTHIசுஜித் வில்சனை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு தீவிர முயற்சி - விரிவான தகவல்கள்

இந்நிலையில் மதுரையில் இருந்து, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் நிபுணர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் இரவு 8.30 மணியளவில் அங்கு வந்தனர். அவர்கள் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோருடன் சேர்ந்து சுஜித் வில்சனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மணிகண்டன் கண்டுபிடித்துள்ள கருவி மூலம், குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றது. ஆனால் அந்த கருவி மூலம் மீட்பு பணியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. இதையடுத்து கணினியால் இயங்கக்கூடிய சுருக்கு கயிறுகள் மூலம் மீட்பு பணி தொடங்கியது. இரவு 11 மணிக்கு மேலாகியும், அந்த பணி தொடர்ந்து நடைபெற்றது. குழாய்களில் கயிறுகளை விட்டு, குழாய்களை பிணைத்து ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கி, குழந்தையை மீட்க முயன்றனர்.
ஆனாலும் குழந்தையின் கைகளில் சரியாக கயிற்றை பிணைக்க முடியாததால், மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் மீட்பு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. மீண்டும், மீண்டும் கயிறுகளை ஆழ்துளை கிணற்றில் இறக்கி குழந்தையை மீட்க முயன்றும் முடியவில்லை.
அதிகாலை 3.20 மணிக்கு நாமக்கல்லில் இருந்து வெங்கடேசன் தலைமையில் வந்த ஐ.ஐ.டி. குழுவினர் தாங்கள் கொண்டு வந்த நவீன கருவியை ஆழ்துளை கிணற்றுக்குள் அங்குலம் அங்குலமாக இறக்கினார்கள். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு அந்த கருவி குழந்தை சிக்கி இருந்த இடத்தின் அருகே சென்றது. அப்போது, அங்கு குழந்தை இல்லை. அதில் இருந்து மேலும் 50 அடி, அதாவது 30 அடியில் இருந்து 80 அடிக்கு சென்றது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீட்பு குழுவினர் அந்த கருவியை மேலும் கீழே இறக்க முயன்றனர். ஆனால் அந்த இடத்தில் இருந்து அதற்கு மேல் குழி குறுகலாக இருந்ததால், அந்த கருவியை கீழே இறக்க முடியவில்லை. இதனால் அந்த கருவியை மேலே எடுத்து அதில் பொருத்தப்பட்டிருந்த கைகளை மாற்றினார்கள். பின்னர் அதிகாலை 3.50 மணிக்கு மாற்று கைகள் பொருத்தி மீண்டும் அந்த கருவி ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கப்பட்டது.
ஆனால் அதுவும் குழந்தை இருந்த இடத்தின் அருகே அதிகாலை 4 மணிக்கு சென்றது. அதற்கு கீழ் மீண்டும் அந்த கருவியை கொண்டு செல்லமுடியவில்லை. இதனால் மீட்பு குழுவினர் செய்வதறியாது திகைத்தனர். அதே நேரம் அந்த நவீன கருவி மூலம் குழந்தை சுஜித் வில்சன் சுவாசிப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் அந்த கருவியின் விட்டத்தை குறுகலாக்கி ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்க மீட்பு குழுவினர் முயற்சி மேற்கொண்டனர். இதற்கிடையே அதிகாலை 5 மணிக்கு புதுக்கோட்டையில் இருந்து வீரமணி என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசுவிடம் எப்படி குழந்தையை மீட்கப்போகிறோம் என்று விளக்கினார்கள்.
இதை தொடர்ந்து அவர்கள் குழந்தையை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். காலை 4.30 மணிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் உதவி கோரப்பட்டது. அவர்கள் உடனடியாக சென்னையில் இருந்து நடுகாட்டுப்பட்டிக்கு புறப்பட்டனர். ஆனாலும் தொடர்ந்து மற்ற குழுவினர் விடிய, விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து முயற்சித்தும் குழந்தையை மீட்க முடியவில்லை. அமைச்சர்கள் வெல்லமண்டிநடராஜன், விஜயபாஸ்கர், வளர்மதி, கலெக்டர் சிவராசு ஆகியோர் அந்த பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர்.
2-வது நாளாக நேற்று மீட்பு பணி இடைவெளி இல்லாமல் தொடர்ந்தது. குழந்தை சுஜித் வில்சனை மீட்பதற்காக திருச்சி, மதுரை, நாமக்கல், கோவை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தனித்தனி குழுவினர் வந்தனர். அவர்கள் தாங்கள் கண்டுபிடித்த கருவி மூலம் குழந்தையை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஒவ்வொரு குழுவினரின் முயற்சியும் பலன் அளிக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து திரைப்படத்துறையில் சினிமா சண்டை காட்சிகளில் விபத்து ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் குழுவினர், தகவல் அறிந்து சென்னையில் இருந்து நடுக்காட்டுப்பட்டிக்கு வந்தனர். இந்த குழுவினர் தாங்கள் வைத்திருந்த நவீன எந்திரம் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் குழந்தை சுஜித் வில்சனிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. தொடர்ந்து குழந்தைக்கு ஆக்சிஜன் கொடுக்கும் பணி நடைபெற்று வந்தது.
இதனிடையே மதியம் 12.15 மணி அளவில் மாநில பேரிடர் மீட்பு படையினர் சென்னையில் இருந்து வந்தனர். அதனைத்தொடர்ந்து 12.35 மணி அளவில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புபடை குழு கமாண்டர் ஆர்.சி.ஓலா தலைமையில் 33 பேர் வந்தனர். இந்த குழுவினர் நவீன கருவிகளை கொண்டு வந்தனர். தேசிய மீட்பு படை குழுவினர் வந்ததும், அவர்களை பணி செய்யவிட்டு, விட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மற்ற குழுவினரும் மற்றும் தீயணைப்பு துறையினர், காவல்துறையினரும் விலகி கொண்டனர்.
இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அதிநவீன கேமரா பொருத்திய பிரத்யேக கருவியை ஆழ்துளை கிணற்றுக்குள் விட்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை மத்திய மண்டல துணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், தென்மண்டல துணை இயக்குனர் சரவணன் தலைமையிலான குழுவினர் வந்துள்ளனர். குழந்தை உயிருடன் மீட்கப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் மருத்துவ குழுவினர் உள்ளிட்ட குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.
நன்
Share:

பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் முழுவிபரம்நாட்டு மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முன்னுரிமை வழங்கி எவரது நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் தேர்தல் கொள்கை பிரகடனத்தை உருவாக்கியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆட்சிக்கு வந்து குறுகிய காலப்பகுதியில் இந்தக் கொள்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (வெள்ளிக்கிழமை) நெலும் பொகுன பிரதான அரங்கில் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதன் விபரம் வருமாறு,

#தேசிய_பாதுகாப்பு

நாட்டின் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தால் ஏனைய அடிப்படைத் துறைகள் அனைத்தும் இயல்பாகவே வீழ்ச்சியடையும் என்ற நடைமுறை நிலைமையினை அடிப்படையாகக் கொண்டு அறிந்து கொள்ளலாம். அனைத்து மட்டங்களிலும் முன்னேற்றமடைய வேண்டுமாயின் தேசிய பாதுகாப்பிற்கே எந்நிலையிலும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஜனநாயகத்தை மதித்து அனைவருக்கும் பொதுவான அமைதியான சூழலை ஏற்படுத்தும் விதத்தில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

#நற்புறவுடனான_வெளிநாட்டுக்_கொள்கை

நாட்டின் கௌரவமான கொள்கைகள் சர்வதேச மட்டத்தில் வெளிநாட்டு கொள்கைகளின் ஊடாகவே வெளிப்படுத்தப்படும். நாட்டின் இறையாண்மையில் தலையிடுவதற்கும், நாட்டின் நிலப்பரப்பினை பிறிதொருவருக்கு கையளிப்பதற்கான ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்ட வெளிநாட்டு கொள்கைகள் நிராகரிக்கப்படும். இதேவேளை, அனைத்து நாடுகளுடன் என்றும் நட்புறவுடன் செயற்படும் கொள்கைத் திட்டங்கள் செயற்படுத்தப்படும். நட்புறவுடனான வெளிநாட்டுன் கொள்கை முழுமைப்படுத்தப்படும்.

#ஊழல்_மோசடியற்ற_அரச_நிர்வாகம்

மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரச நிர்வாக கட்டமைப்பு ஸ்தாபிக்கப்படும். முறையான கொள்கைகளைக் கொண்டு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் செயற்படுவதற்கான ஊழலற்ற முகாமைத்துவம் கட்டாயமாக்கப்படும்.

#மக்களுக்கு_பொறுப்பு_கூறும் #அரசியலமைப்பு_மீள்திருத்தம்

அரசசியல் கட்சிகளினதும் அரசியல் தலைவர்களினதும் தேவைக்காகவும் தனிப்பட்ட தேவைக்காகவும் அரசியலமைப்பினைப் பயன்படுத்திய காலம் நிறைவுக்கு கொண்டு வரப்படும். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முரண்பாடான விடயங்கள் நீக்கி மக்களாணையினை மையப்படுத்தியதும், பொறுப்புக் கூறும் விதத்திலும் புதிய அரசியலமைப்பு மீள்திருத்தம் செய்யப்படும்.

#மாற்றம்_கொண்ட_பிரஜை – #வளமான #மனித_வளம்

நாட்டு மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு மாறிவரும் உலக நடப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் அவசியமாகும். திறன் விருத்தி, சுகாதார கட்டமைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளில் மாற்றம் கொண்டுள்ள மக்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்குவதுடன் வளமான மனித வளங்கள் துறைசார் விருத்திக்கேற்ப கட்டியெழுப்பப்படும்.

#மக்களை_மையப்படுத்திய_பொருளாதாரம்

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் உள்ளூர் வியாபாரிகள் பலப்பட வேண்டும். இதன் முழுப் பொறுப்பினையும் அரசாங்கம் ஏற்கும். வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். தேசிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்ப துறைசார் விருத்திகளை அரசாங்கம் அனைத்து கிராமிய மட்டத்திலும் மேம்படுத்தும்.

#தகவல்_தொழினுட்ப_விருத்தி

பூகோள தொழினுட்ப விருத்தி மற்றும் அடிப்படை தகவல் தொழினுட்பம் ஆகியவையே இன்றைய இளம் சந்ததியினருக்கு அரசாங்கம் வழங்கும் வரப்பிரசாதமாகும். நாட்டின் முன்னேற்றத்திற்கு தகவல் தொழினுட்பத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. தகவல், திறன் விருத்தி மற்றும் கல்வித்துறை விருத்தி ஆகியவற்றில் முன்னேற்றமடைந்த சமுதாயம் உருவாக்கப்படும்.

#பௌதீக_வள_அபிவிருத்தி

பௌதீள வளங்களை பயனுடையவதாக மாற்றும் திட்டங்கள் செயற்படுத்தப்படும். ஒவ்வொரு பிரதேசங்களிலும் உள்ள பௌதீள வளங்கள் அங்கு வாழும் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் மாற்றியமைக்கப்படும்.

#சுற்று_சூழல்_பாதுகாப்பு_முகாமைத்துவம்

இயற்கை வளங்களைப் பாதுகாப்பது அனைவரது பொறுப்பாகும். எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்திற்காகவும், வாழ்வாதார இருப்பிற்காகவும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுசூழல் பாதுகாக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழல் முகாமைத்துவத்திற்காக முறையான கட்டமைப்புக்கள் செயற்படுத்தப்படும். சுற்றுசூழல் தொடர்பாக நடைமுறையில் உள்ள சட்டங்கள் மீள் திருத்தம் செய்யப்படும். அத்துடன் காலத்தின் தேவைக்கேற்ப சுற்றுச்சூழல் சார் திட்டங்கள் வகுக்கப்படும்.

#சட்டத்தினை_மதிக்கும்_ஒழுக்கமுள்ள #சமூகம்.

சட்டம் அனைத்து தரப்பினருக்கும் பொதுவானதாக செயற்படுத்தப்படும். சட்டத்தினை அனைவரும் மதிக்கும் நிலைமையினை சமூகத்தில் ஏற்படுத்தல் பிரதானமாகும். எவருக்கும் எந்நிலையிலும் சட்டத்தின் பிரகாரம் முன்னுரிமை கொடுக்காது கௌரவத்தின் பிரகாரம் ஒழுக்கமுள்ள சமூகம் தோற்றுவிக்கப்படும்.

என்று குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முபிஸால் அபூபக்கர்
முதுநிலை விரிவுரையாளர்
பேராதனைப் பல்கலைக்கழகம்

Share:

கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் ‘நமது கனவு’ தேர்தல் விஞ்ஞாபனம் திங்களன்று வெளியீடு‘ஜனாதிபதியைத் தீர்மானிக்கம் ஜனாதிபதி வேட்பாளர்’ கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ‘நமது கனவு’ எனும் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் திங்கட்கிழமை (28) உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

கொழும்பு -7இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை மாலை அதற்கான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதுடன், தேர்தல் விஞ்ஞர்பனம் தொடர்பில் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்

கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் ‘நமது கனவு’ எனும் தேர்தல் விஞ்ஞர்பனத்தில் தேசிய ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நிலையான அபிவிருத்திக்கான பொருளாதார கட்டமைப்பு, முஸ்லிம்களின் சமய விவகாரம், சுகாதார வசதி வாய்ப்புக்கள், கல்வி, பள்ளிவாசல்கள்,இமாம்கள், முஅத்தின்களுக்கான விசேட திட்டம், நிர்வாக – காணி பிரச்சினைகள உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

ஊடகவியலாளர் ஜெஸ்மின் அவர்களினால் கூரைத் தகடுகள் வழங்கும் நிகழ்வும் மக்கள் சந்திப்பும்


SLMC குருநாகல், பூவல்ல வட்டார அமைப்பாளர் சகோதரர் இத்ரீஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பிங்கிரிய தேர்தல் தொகுதியில் பூவல்ல எனும் கிராமத்தில் மிகவும் வருமானம் குறைந்த ஒரு குடும்பத்திற்கு ஊடகவியலாளர், சமூக சேவையாளர் ஜெஸ்மின் அவர்களினால் கூரைத்தகடுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டதோடு, மக்கள் சந்திப்பு ஒன்றையும் மேற்கொண்டார்.

Share:

’இனவாத குழுகள் காரணமாகவே அன்னத்துக்கு ஆதரவு’

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சுற்றிலும் இனவாத குழுவினர் உள்ளமை காரணமாகவு  ஜனாதிபதி தேர்தலில் தான் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என,  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இவ்வாறான காரணத்தினாலேயே, தான் புதிய ஜனாநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்க தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(தமிழ் மிரர்)
Share:

ஆராயப்பட வேண்டிய இலங்கைக்கும் கேரளாவுக்கும் இடையிலான தொடர்புகள்

இலங்கைக்கும் கேரளாவுக்கும் இடையிலான  தொடர்புகள் மிகவும் நெருக்கமானவை. நில அமைப்பு, சுற்றுச் சூழல், கட்டங்கள் பண்பாடு வாழ்வியல் என்று பட்டியல் நீண்டு செல்கிறது.

போர்த்துக்கேயர் இலங்கையை ஆக்கிரமித்த போது பெரும் சூபிகளான குஞ்சலி மரிக்கார்கள் (நாகூரில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஷாஹுல் ஹமீத் மீரான் சாஹிப் றஹ் அவர்களின் மாணவர்கள்) இலங்கையின் சுதந்திரப் போராட்டத்திற்கு சீதாவக்க இராஜ்ய மன்னருக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

கேரளாவின் கண்ணூர் நகரில் இருந்து இலங்கை வந்த செய்யித் புகாரி தங்கள் இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்கு உதவியதோடு, இந்தோனேசியவில் டச்சுக்காரருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

செய்யித் ஜிப்ரி தங்கள், அப்துல் ரஷீத் தங்கள்  போன்ற அறிஞர்களும் ஆன்மீக ரீதியில் இலங்கையில் பங்களிப்புக்களை வழங்கியவர்கள் ஆவர். இரு தரப்பு  உறவுகள் மேலும் விரிவாக ஆராயப்படுவது அவசியமாகும்.

(பஸ்ஹான் நவாஸ்)
Share:

இரவு நேரங்களில் வீடுகளில் நுழைவது ஐக்கிய தேசிய கட்சியினருக்கு பழகிவிட்டது


அரசாங்கத்தினால் நல்லாட்சி என்ற வார்த்தை இந்நாட்டு மக்களுக்கு பிடிக்காத வார்த்தையாக மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மொரடுவை பிரதேசத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி காரியாலயம் ஒன்றை திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நாமல், கிராமங்களில் வசிக்கும் அனைத்து சுதந்திர கட்சியின் ஆதரவாளர்களின் ஆதரவும் தற்போது பொதுஜன பெரமுனவிற்கு கிடைத்துள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டினார்.

புதிய தலைவர் ஒருவருடன் நாட்டு மக்கள் புதிய பயணத்திற்கு தயாராகியுள்ளதாக நாமல் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, கட்சியின் அரசியில் தலைவர்களுக்கு ´ஹூ´ கூக்குரல் அடிக்கப்படுவது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த நாமல், "ஐக்கிய தேசிய கட்சியினர் எமது மேடையில் இடம்பெறுவதை தேடுவதற்கு முன்னர், இணையத்தில் ஊடகவியலாளராக செயற்படும் இளைஞன் ஒருவன் தாக்கப்பட்டான். அவர் ஏன் தாக்கப்பட்டார் என்று முதலில் தேடுங்கள். ரணில் விக்கிரமசிங்கவிற்கு ´ஹூ´ அடித்தார்கள். வேறு யாருக்கும் இல்லை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருக்கு. அது தொடர்பில் தேடுங்கள். பக்கத்து வீட்டில் இடம்பெறுவதை தேடுவதையே இந்த ஐக்கிய தேசிய கட்சியினர் செய்கின்றனர்.

அதைதானே சஜித் பிரேமதாசவும் கூறுகிறார். இரவு நேரங்களில் வீடுகளில் நுழைவதாக. இரவு நேரங்களில் வீடுகளில் நுழைவது ஐக்கிய தேசிய கட்சியினருக்கு பழகிவிட்டது" என அவர் தெரிவித்தார்.
Share:

கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது.

கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டு மண்டபத்தில் இந் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

´உறுதியான நோக்கம் - தொழில் செய்யும் நாடு´ என்ற தொனிப்பொருளில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.

பல தொழில் வல்லுனர்கள் மற்றும் சமூக குழுக்களின் ஆலோசனைகளை பெற்று இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(பின்னிணைப்பு - 10.10 am) ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் முதலில் சர்வமத தலைவர்களிடம் கோட்டாபய ராஜபக்ஷவினால் கையளிக்கப்பட்டது. பின்னர் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷவிடமும் கையளிக்கப்பட்டது.

Adaderana
Share:

ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்; என்பது சட்டவிரோதமானதாகும் - சட்டமுதுமாணி ஹமீட்

ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்
============================
வை எல் எஸ் ஹமீட் 

சட்டத்தின் பார்வையில் போட்டியிடுகின்ற 35 வேட்பாளர்களும் தாம் ஜனாதிபதியாக வருவதற்கே போட்டியிடுகிறார்கள். வேட்பாளர் அதிகரிப்பு காரணமாக சில நூறுகோடி மக்கள் வரிப்பணம் மேலதிகமாக செலவாகிறது. 

இந்த 35 பேரில் யார் ஜனாதிபதி என்பதைத் தீர்மானிப்பது மக்கள். இன்னுமொரு வேட்பாளர் ஜனாதிபதியைத் தீர்மானிப்பதற்கு ஒரு வேட்பாளருக்கு நியமனம் வழங்குவதுமில்லை. கோடிக்கணக்கான பணம் அதற்காக செலவழிக்கப்படுவதுமில்லை. 

எனவே, தான் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்; என்பது சட்டவிரோதமானதாகும். ஏற்கனவே, நா காக்காததனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருக்கின்றது.

இது ஒரு புறமிருக்க, தனக்கு மூன்று லட்சம் வாக்குகள் கிடைக்கும்; தானே ஜனாதிபதியைத் தீர்மானிப்பேன்; என்கின்றார்.  மூன்று இலட்சம் பேர் இவரிடம் கூறினார்களா?  என்ற கேள்வி இருக்கட்டும். மூன்று லட்சம் வாக்குகள் கிடைக்கின்றன; என்றே வைத்துக்கொள்வோம். 

இவர் கூறுகின்ற வேட்பாளருக்கே அவர்கள் அனைவரும் இரண்டாம் வாக்கை அளிக்கிறார்கள்; எனவும் வைத்துக் கொள்வோம். ( இவர் கூறுகின்ற வேட்பாளருக்கே அவர்கள் வாக்களிப்பதாயின் அவர்களுக்கு சொந்தமூளை இல்லையா? இவர் என்ன அடிப்படையில் ஒப்பந்தம் செய்வார்? [ஒப்பந்தம் செய்யப்படுமா? என்பதும் இன்னுமொரு கேள்வி] அந்த ஒப்பந்தம் செய்வதற்கான அடிப்படைக் காரணிகளை இதுவரை வெளிப்படுத்தியிருக்கிறா?  தமிழ் கட்சிகள் வெளிப்படுத்தியதுபோல். போன்ற பலகேள்விகள் இருக்கின்றன. அவைகளையும் ஒரு பக்கம் வைப்போம்.)

இந்தப்பதிவின் பிரதான கேள்வி
——————————————-
இவருடைய இரண்டாம் வாக்கு சட்டப்படி இன்னுமொருவருக்குப் போடலாம். பிரச்சினையில்லை. இரண்டாம் சுற்று எண்ணிக்கையில் இவருடைய இரண்டாம் வாக்குகள் தவிர்த்து ஏனைய 32 பேருடைய இரண்டாம் வாக்குகளின் எண்ணிக்கை யாரை இரண்டாம் இடத்திற்கு கொண்டுவருகின்றதோ அந்த  வேட்பாளருக்கே இவரது இரண்டாம் வாக்குகள் பயன்படும். அதுவும் மூன்று இலட்சம் அல்லது அதைவிடக்குறைவான இடைவெளியே அந்த இருவருக்கும் இடையில் இருக்க வேண்டும். 

அந்த வேட்பாளர் யார்? அவரை எந்த அடிப்படையில் இவர் இனம் காண்பார்? தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணியதன் பின்பா? அதற்கு முன்பா? அதற்கு முன்பு அவரை அடையாளம் காண்பதற்கான அளவுகோல் என்ன?

அவ்வாறு அடையாளம் காணுகின்ற அந்த வேட்பாளர் இவரது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் முதலாவது இடத்திற்கு வரும் வேட்பாளருக்கா வழங்குவார்? ( வழங்கச் சொல்லுவார்?)

முதலாவதாக அவர் வருவாராயின் இவரது வாக்குகள் தேவையில்லையே! மட்டுமல்ல, அப்பொழுது இவர் ஜனாதிபதியைத் தீர்மானிக்கவில்லையே! இரண்டாவதாக வருகின்ற வேட்பாளர் இவரது இரண்டாம் வாக்குகளைப் பெற்றும் முதலாவது வேட்பாளரை மேவ முடியாவிட்டால் அப்பொழுதும் இவர் ஜனாதிபதியைத் தீர்மானிக்கவில்லையே! இப்போது வஹியும் வருவதில்லையே! எந்த அடிப்படையில் தன்னை ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்; என்கின்றார்?

இவர் மூன்று லட்சம் வாக்குகள் தருவதாக ஒப்பந்தம் செய்து மூவாயிரம் வாக்குகள்தான் கிடைத்தால் அவ்வொப்பந்தத்தின் பெறுமதி என்ன? இவர் கூறுகின்ற வேட்பாளருக்கு இவரது இத்தனை இரண்டாம் வாக்குகள் கிடைத்தன? என்பதை அளவிடும் முறை என்ன? 

இந்தக் கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பாரா?

Share:

ACJU - ஹிஸ்புல்லாஹ் கலந்துரையாடல் ; வியூகத்தின் வெற்றிக்காக துஆ செய்வதாக உறுப்பினர்கள் தெரிவிப்பு


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷேய்க் ரிஸ்வி முப்தி தலைமையிலான நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் ‘ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்’ கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கடந்த 21ஆம் திகதி திங்கட்கிழமை விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கொழும்பில் அமைந்துள்ள ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைமையகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், ஜனாதிபதித் தேர்தலில் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் எதற்காக போட்டியிடுகின்றார் - அதன் ஊடாக சமூகத்துக்கு ஏற்படும் நன்மைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, ஜம்இய்யதுல் உலமா சபை உறுப்பினர்களால் கேட்கப்பட்ட கேள்விகள் - சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கப்பட்டது. அத்துடன், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் - சவால்கள் - ஆபத்துக்களிலிருந்து சமூகத்தை பாதுகாத்து நிரந்தர தீர்வொன்றினை பெற்றுக்கொள்வதாயின் அதற்கு ஒரே ஒரு வழி இந்த தேர்தல் முறையில் போட்டியிடுவதாகும் என்பதை அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.

கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அவரது வியூகத்தை பாராட்டியதுடன், அது வெற்றியடைய துஆ செய்வதாகவும் தெரிவித்தனர். 
Share:

சஜித் பிரேமதாசவின் அத்தனகல்ல தொகுதி வாக்கெடுப்பு நிலையங்களுக்கான இணைப்பாளர்கள் நியமனம்


புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 99 வாக்கெடுப்பு நிலையங்களுக்கான  இணைப்பாளர்களுக்கான நியமனங்கள் இன்று (24.10) காலை நிட்டம்புவையில் அமைந்துள்ள ஐ.தே.க. காரியாலயத்தில் நடைபெற்றது.

அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினரும் கஹடோவிட வட்டார ஐ.தே.க. அமைப்பாளருமான நஜீம் J.P. அவர்களின் சிபாரிசுக்கமைய முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் K.A.நாஸர் J.P. கஹடோவிட அல்-பத்ரியா ம.வி. வாக்கெடுப்பு நிலைய இணைப்பாளராகவும் கம்புராகல்ல பாடசாலையின் வாக்கெடுப்பு நிலையத்துக்கான இணைப்பாளராக மேனக ருவன் குமார ஆகியோர் ஐ.தே.க. அத்தனகல்ல தொகுதி அமைப்பாளரும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் அத்தனகல்ல தொகுதிக்கான பிரதான இணைப்பாளருமான சந்திரசோம சரணாலால் அவர்களிடம் நியமனக் கடிதங்களை  பெற்றுக் கொள்வதையும் படங்களில் காணலாம்.

(Naasar JP)
Share:

ஆயுர்வேத வைத்தியத் துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல்


ஆயுர்வேத வைத்தியத் துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமுக்கும் இடையில் நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது...

[ஊடகப் பிரிவு]

Share:

சஜித் பக்கம் பத்தொன்பது ; கோட்டா பக்கம் இரண்டு( ஐ. ஏ. காதிர் கான் )

   முஸ்லிம் சமூகம் இரு பக்கமும் நிற்பதே நமக்குப் பாதுகாப்பாகும். எனவே, இரு தரப்பாக முஸ்லிம் மக்களும் நின்று கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கும் தமது வாக்குகளை அளிக்க முன்வர வேண்டும் என, ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

   இராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று, (23) புதன்கிழமை  மாலை இடம்பெற்றது.
   இச்சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது,  
   க‌ட‌ந்த‌ அர‌சாங்க‌த்தில்  அளுத்க‌ம‌, பேருவளை போன்ற‌ இடங்களில் ஏற்பட்ட  பிர‌ச்சினை கார‌ண‌மாக‌, அந்த‌ அர‌சாங்க‌த்தை மாற்றுவ‌த‌ற்கு முத‌லில் முன் வ‌ந்த‌வ‌ன் நானாகும். கார‌ண‌ம், நான் எப்போதுமே ச‌மூக‌த்தை நேசிப்ப‌வ‌ன். ஆனாலும், அந்த‌ அர‌சாங்க‌த்தை மாற்றி ஐ.தே.க‌. த‌லைமையிலான‌ இந்த‌ அர‌சை நாம் கொண்டு வ‌ந்த‌ போது, இந்த‌ அர‌சு க‌ட‌ந்த‌ அர‌சை விட‌ மிக‌ மோச‌மான‌ அர‌சாக‌ இருந்த‌தைக் க‌ண்டோம். 
   இந்த‌ அர‌சு மாற்ற‌த்தில் முஸ்லிம்க‌ள் எவ்வித  ந‌ன்மைகளையும் அடைய‌வில்லை. இந்த‌ நிலையில், ச‌மூக‌த்தின் பிர‌ச்சினைக‌ளைச் சுட்டிக்காட்டி ப‌த‌விக‌ளை இராஜினாமாச் செய்த‌ முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ள், ச‌மூக‌த்தின் எந்த‌ப் பிர‌ச்சினைகளையும் தீர்க்காம‌ல் மீண்டும் ப‌த‌விக‌ளை ஏற்ற‌ன‌ர்.

 முஸ்லிம்க‌ளுக்கு பாதுகாப்பு முக்கிய‌ம். ஆனால், ஐ.தே.க‌.  அர‌சால் முஸ்லிம்க‌ளைப் பாதுகாக்க‌ முடியாது என்ப‌தே உண்மை. நாட்டின் வ‌ர‌லாற்றைப் பார்க்கும்போது, ஐ.தே.க‌. ஆட்சியிலேயே சிறுபான்மை ம‌க்க‌ள் அதிக‌மான  பாதிப்புக்களைக் க‌ண்ட‌ன‌ர்.

   இன்று 19 பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் ச‌ஜித்தின் ப‌க்க‌ம் உள்ள நிலையில்,  நானும் காத‌ர் ம‌ஸ்தானும் மாத்திரமே, கோத்தாபயவின் ப‌க்க‌ம் நிற்கின்றோம். முஸ்லிம் ச‌மூக‌ம் இரு ப‌க்க‌மும் நிற்ப‌தே ந‌ம‌க்குப் பாதுகாப்பாகும். அந்த‌ வ‌கையில், முஸ்லிம் ம‌க்க‌ளும் இரு த‌ர‌ப்பாக‌ நின்று, கோத்தாபய  ராஜ‌ப‌க்ஷ‌வுக்கும் வாக்க‌ளிக்க‌ வேண்டும்.

   2015 இல் முஸ்லிம்க‌ளின் வாக்குக‌ளால் அர‌சாங்க‌ம் மாறிய‌து. இம்முறை அவ்வாறு  முடியாது. இந்த‌ நிலையில், முஸ்லிம்க‌ளால்தான்  ஜ‌னாதிப‌தி வேட்பாள‌ர் ஒருவ‌ர் தோற்றார் என்ற‌ அபாண்டமான பலி ந‌ம‌து ச‌மூக‌த்துக்கு வ‌ர‌க்கூடாது. என்னைப் பொறுத்த‌வ‌ரையில்,  கோத்தாபயவினால் மாத்திரமே நிச்ச‌ய‌ம் சமூக‌ம் பாதுகாப்பைப் பெற‌முடியும். இதனை  என்னால் உறுதியாகக்‌ கூற‌ முடியும் என்றார்.

   மேற்ப‌டி பத்திரிகையாளர் சந்திப்பில்,  அல் ஜ‌ஸீறா ல‌ங்கா ஊட‌க‌ ஆசிரிய‌ரும் உல‌மாக் க‌ட்சித் த‌லைவ‌ருமான‌ முபாற‌க் அப்துல் மஜீத்  மௌல‌வியும் க‌ல‌ந்து கொண்டிருந்தார்.

( ஐ. ஏ. காதிர் கான் )
Share:

மின்னேரியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து!


BREAKING_NEWS (DEADLY ACCIDENT)

இன்று(24) நள்ளிரவு மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமுற்று பொலன்னறுவை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் சாரதி உட்பட சிலர் உயிரிழந்துள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி சென்ற அரச பேரூந்தும், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு சென்ற தனியார் பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதால் இந்த பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளது.Shoora News Srilanka
Share: