எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை 20 வேட்பாளர்கள் கட்டுபணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய அவர்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பாக இதுவரை 10 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மேலும் 10 பேர் சுயேட்சை குழு மற்றும் ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்களாவர் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் இன்னும் இருப்பதாகவும், இந்த வாரத்தின் அடுத்த மூன்று நாட்களுக்குள்ளும் ஒக்டோபர் ஆறாம் திகதி காலை 8.30 முதல் 12 மணிவரையும் சந்தர்ப்பம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஒக்டோபர் மாதம் எழாம் திகதி காலை 9 மணி முதல் 11 மணி வரையும் கட்டுப்பணத்தை செலுத்த முடியும் எனவும், அது தொடர்பான ஆட்சேபனைகளை அன்றைய தினத்தில் 9 மணி முதல் 11.30 வரை தெரிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை (02) தினத்திலும் மேலும் மூவர் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

இதற்கமைய இலங்கை தொழிலாளர் கட்சி சார்பாக ஏ.எஸ்.பீ.லியனகே இன்று கட்டுப்பணத்தை செலுத்தினார்.

மேலும் சமரவீர வீரமந்திரி மற்றும் அசோக வடிகம்காவ ஆகியோரும் இன்றைய தினம் கட்டுப்பணத்தை செலுத்தினர்.

இதேவேளை இலங்கைக்கான அமெரிக்க துணை தூதுவர் மார்டின் டீ கெலிக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமை, ஜனாதிபதி தேர்தல் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

(adaderana)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.