எதிர்வரும் நவம்பர் 2019 இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக 41 பேர் தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

அந்த வகையில் இலங்கை தேர்தல்கள் வரலாற்றில் அதிகூடிய வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்திய தேர்தலாக இத்தேர்தல் இடம்பிடித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கை ஆரம்பமானதோடு, இன்று (06) நண்பகலுடன் அதற்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நிறைவுக்கு வந்தது. செயல்முறை மதியம் 12 மணிக்கு முடிந்தது.
இதேவேளை, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் இன்றைய தினம் (06) ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

ஏற்கனவே முன்னாள் பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம். இல்யாஸ் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை (05) ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நாளை (07) மு.ப. 9.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை வைப்பு செய்த அனைத்து கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்களும் இன்று (06) பிற்பகல் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று (06) பிற்பகல் 2.30 மணிக்கு அவர்களுடன் சந்தித்து, வேட்புமனு தாக்கல் செய்தல் செயன்முறை மற்றும் அடுத்த இடம்பெற வேண்டிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

நாளைய தினம் ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்திற்கு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் நடைமுறைப்பபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாளையதினம் (07) தேர்தல்கள் செயலக வளாகத்தை அண்டிய கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட 03 பிரிவுகளிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், ஶ்ரீ ஜயவர்த்தனபுர கல்வி வலயத்திற்கு உட்பட்ட 03 பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (07) மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய பொரளை, கொழும்பு கல்வி வலயத்திலுள்ள கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு பிரிவுகளிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், ஶ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்திலுள்ள ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரி, ஹேவாவிதாரண மகா வித்தியாலயம், ஹேவாவிதாரண மாதிரி ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலைகள் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்வர் 2019 இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக 41 பேர் தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.