தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீறி செயற்படுவதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.




மித்தெனிய பகுதியில் நேற்று (21) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் நடத்தப்படும் பிரச்சார கூட்டங்களில் மற்றுமொரு கூட்டம் மித்தெனியவில் நேற்று நடைப்பெற்றது.

அங்கு உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, உயர் தரத்தில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வாய்ப்பை வழங்குவதாக தெரிவித்தார்.

அவர்களுக்கான பாடநெறி நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் அமைவதாகவும், தொழிநுட்ப கல்வியில் மிக குறுகிய காலத்தில் புத்திஜீவிகளுக்கு பயிற்சியளித்து அவர்களுக்கு சிறந்த சம்பளம் ஒன்றை வழங்க கூடிய வகையில் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, சஜித் பிரேமதாச 54 வயதான இளைஞன் என்றால் அருக்கும் 10 வயதுக்கு இளமையான ஒருவரையும் இளைஞன் என அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்தார்.

சஜித் பிரமேதாச பாலம் ஒன்றில் கயிற்றை பிடித்துக் கொண்டு நடப்பதை கண்டால் அவரை இளைஞன் என எவ்வாறு கூறுவது? என கேள்வி எழுப்பிய அவர், சில வீடுகளில் கடன்களை செலுத்த முடியாத பெண்கள் அவ்வாறுதான் நடந்துக்கொள்வார்கள் எனவும் கூறினார்.

இதன்போது உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, தற்போது பிக்குகளுக்கு சமய போதனை ஒன்றை கூட நிம்மதியாக நடத்த முடியவில்லை என தெரிவித்தார்.

தேர்தல் சட்டங்களுக்கு அமைய அவ்வாறு செய்ய முடியாது எனவும், இதனால் விகாரைகளுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட முடியாதுள்ளதாகவும் கூறினார்.

அதற்கமைய மனிதர்களின் அடிப்படை உரிமைகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மீறியுள்ளதாக தெரிவித்த அவர் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எவராலும் பறிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

இது போன்ற செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் இவ்வாறு செயற்படுவது நியாயமா? என அனைத்து மதத்தவர்களும் சிந்துக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிது சிறிதாக மக்களை வேறு திசைக்கு கொண்டு செல்லும் அவர்களை ஆட்சியில் அமர்த்த முடியுமா எனவும் வினவினார்.

இதேவேளை, தொழில் செய்யும் நாடு, நிலையான தூரநோக்கு என்ற தொனிபொருளிலான மற்றுமொரு தேர்தல் பிரச்சார கூட்டம் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று மாலை இரக்குவானை நகரில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ மாணிக்கல் வியாபாரம் மூலம் நாட்டுக்கு அதிகமான அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் எனவும் அதனூடாக பாரிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இலங்கையை உலகின் இரத்தினகல் மையமாக மாற்ற முடியும் எனவும், அதற்கமைய மாணிக்கல் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் கோட்டபய ராஜபக்ஷ கூறினார்.

இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கஹவத்தை பகுதியில் அதிகளவில் மாணிக்கல் அகழ்வு இடம்பெறுவதாக தெரிவித்தார்.

அதற்காக மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய அனைத்து சலுகைகளையும் தற்போதைய அரசாங்கம் இல்லாது செய்தாகவும், மீண்டும் அவற்றை பெற்றுக்கொடுக்கும் யுகம் ஒன்றை உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது உரையாற்றிய பவித்ரா வன்னியாராச்சி, சஜித் பிரேமதாச போன்ற பொறுப்பற்ற ஒருவருக்கு வாக்களித்து நாட்டை கையளிப்பது எவ்வாறு என கேள்வி எழுப்பினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.