அரசாங்கத்தினால் நல்லாட்சி என்ற வார்த்தை இந்நாட்டு மக்களுக்கு பிடிக்காத வார்த்தையாக மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மொரடுவை பிரதேசத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி காரியாலயம் ஒன்றை திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நாமல், கிராமங்களில் வசிக்கும் அனைத்து சுதந்திர கட்சியின் ஆதரவாளர்களின் ஆதரவும் தற்போது பொதுஜன பெரமுனவிற்கு கிடைத்துள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டினார்.

புதிய தலைவர் ஒருவருடன் நாட்டு மக்கள் புதிய பயணத்திற்கு தயாராகியுள்ளதாக நாமல் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, கட்சியின் அரசியில் தலைவர்களுக்கு ´ஹூ´ கூக்குரல் அடிக்கப்படுவது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த நாமல், "ஐக்கிய தேசிய கட்சியினர் எமது மேடையில் இடம்பெறுவதை தேடுவதற்கு முன்னர், இணையத்தில் ஊடகவியலாளராக செயற்படும் இளைஞன் ஒருவன் தாக்கப்பட்டான். அவர் ஏன் தாக்கப்பட்டார் என்று முதலில் தேடுங்கள். ரணில் விக்கிரமசிங்கவிற்கு ´ஹூ´ அடித்தார்கள். வேறு யாருக்கும் இல்லை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருக்கு. அது தொடர்பில் தேடுங்கள். பக்கத்து வீட்டில் இடம்பெறுவதை தேடுவதையே இந்த ஐக்கிய தேசிய கட்சியினர் செய்கின்றனர்.

அதைதானே சஜித் பிரேமதாசவும் கூறுகிறார். இரவு நேரங்களில் வீடுகளில் நுழைவதாக. இரவு நேரங்களில் வீடுகளில் நுழைவது ஐக்கிய தேசிய கட்சியினருக்கு பழகிவிட்டது" என அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.