புதிய கூட்டணியொன்றை உருவாக்குவதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்தை மாற்ற முடியுமா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.
புதிய கூட்டணிக்காக தாமரை மொட்டு சின்னத்தினை தவிர வேறு சின்னமொன்றை  பயன்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாங்கள் உறுதியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Tamilmirror)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.