ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இருப்பது 30 நாட்கள் என்றும் இன்று (16) ​தொடங்கி 31 ஆவது நாளில் இந்நாட்டில் சூரியன் உதயமாவது புதிய தலைவர் ஒருவருடன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் இந்நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இருப்பார் என அவர் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ வேட்பாளர் என்ற முறையில் தேர்தல் கலாசாரத்திற்கு ஒரு புதிய இலக்கணத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஊடக சந்திப்புக்களில் கூறப்படும் விடயங்கள் அரச ஊடகங்களினால் திரிபுபடுத்தப்படுவதாக தெரிவித்தார்.

அரச ஊடகங்கள் ஒருபக்க சார்பான கொள்ளையை பின்பற்றி தேசிய வேட்பாளரின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் வீழ்ச்சிக் கண்டுள்ள கலாசாரம் மற்றும் தேசிய பாதுகாப்பினை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு வேலைத்திட்டமொன்று அவசியம் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ தனது பொருளாதார கொள்கையை மக்கள் பொருளாதாரமாக தெரிவித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(அ.தெ)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.