எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வாழ்க்கைச் செலவு குழுவின் தலைவர் அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். 
அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட உலர்ந்த மிளகாயின் விலையை குறைக்கும் நோக்கில் இறக்குமதி வரி  கிலோகிராம்  ஒன்றுக்கு ரூ .25 லிருந்து 05 ஆகக் குறைக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இறக்குமதி செய்யப்படும் மீன் ஒரு கிரோகிராமின் இறக்குமதி வரி, 100 ரூபாயில் இருந்து 25ரூபாயாக குறைக்கப்படவுள்ளது.
இதேவேளை, பண்டிகை காலத்தில் ஏற்படும் கோழியிறைச்சி மற்றும் முட்டை தட்டுப்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக கோழியிறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரச களஞ்சியசாலைகளில் இருந்து  48 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல்லை சிறிய மற்றும் மத்திய தர அரிச ஆலை உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுத்து, மிகவிரைவான அரிசியாக்கி, சத்தோச ஊடாக  நாட்டரிசி கிலோகிராம் ஒன்று 80 ரூபாயக்கும் சம்பா கிலோகிராம் ஒன்று 85 ரூபாயக்கும் விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(TamilMirror)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.