கொழும்பு மாநகர சபையால் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளம், அறுவக்காடு பகுதியில் கொட்டும் நடவடிக்கையை நாளை (16) முதல் நிறுத்துவதற்கு நடவடிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அறுவக்காடு குப்பை சேகரிப்பு நிலையம் தொடர்பில் கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்த கருத்தின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை எடுக்க நேரிட்டுள்ளதாக மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க கொழும்பு மாநகர சபை ஆணையாளருக்கு கடிதம் ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

அறுவக்காடு குப்பை சேகரிப்பு நிலையம் தோல்வியான ஒரு முயற்சி என கடந்த தினத்தில் கொழும்பு மேயர் பத்திரிகை ஒன்றிற்கு தெரிவித்திருந்ததாக அவர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குப்பை பிரச்சினையை தீர்ப்பதற்கான அதிகபட்ச நடவடிக்கையை எடுத்தாகவும் கெரவலபிட்டிய குப்பை சேகரிப்பு நிலையத்தை மூடியதன் பின்னர் அறுவக்காடு குப்பை சேகரிப்பு நிலையமே தீர்வாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மேயரின் கருத்தை மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சு வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நாளை காலை அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.