மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமானால் ஜனாதிபதி என்பவர் அவர்களின் காலடிக்கு செல்வதனை விடுத்து ஒரு வலுவான பொருளாதாரக் கொள்கையை உருவாக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருணாகலையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இளைஞர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஐக்கிய தேசியக் கட்சியினர் எம்மை இனவாதிகள் என கூறுகின்றனர். ஆனால் நாம் தேசியவாதிகள்.

மஹிந்த ஐ.தே.காவுடன் மாத்திரம் மோதவில்லை மாறாக ஜே.வி.பியுடனும் மோதியுள்ளார்.

ஜே.வி.பி என கூறுவது தமிழ், முஸ்லிம் இனத்தவர்கள் அல்லர் மாறாக அவர்கள் சிங்கள இனத்தவர்கள்.

தேசியவாதி என்பதாலேயே மஹிந்த ராஜபக்ஷ பிரபாகரனுடனும் மோதினார்.

வேட்பாளர்கள் தமது சரியான கொள்கைகளை முன்வைத்தால் மாத்திரம் போதும் அவர்களின் காலடிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(AD)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.