யூத் பெfஸ்ட் மாநாடு விஷேட தொகுப்பு ஊடகவியலாளர், ஒலிபரப்பாளர் வை.எம்.ஆஷிக் -

இளைஞர்களே! இந்த நாடு உங்களுடையது; ஜனநாயகத்தை கட்டியெழுப்ப முன்வாருங்கள்"-யூத் பெfஸ்ட் மாநாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்மஹிந்த தேஷப்பிரிய

ஜனாதிபதி தேர்தலில் இளைஞர்களின் பொறுப்பு குறித்த இளைஞர் மாநாடு யூத் பெfஸ்ட் கடந்த வெள்ளி (04) மாலை 4 மணி முதல் கொழும்பு தாஜ் சமுத்திர ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய "இன்று எமது நாட்டின் ஜனநாயகம் கவலைக்கிடமாக உள்ளது. இன்றைய காலத்து இளைஞர்கள் அரசியலில் ஓரமாக நிற்பதையே அவதானிக்க முடிகிறது. அரசியல் பற்றி அதிகம் பேசுபவர்களாக இளைஞர்களே காணப்பட வேண்டும். இன்று உலகையே இந்த அரசியல்தான் ஆள்கிறது என்றால் மிகையல்ல. இளைஞர்களே! இந்த நாடு உங்களுடையது; ஜனநாயகத்தை கட்டியெழுப்ப முன்வாருங்கள்" என அழைப்பு விடுத்தார். அத்தோடு முக்கிய பேச்சாளர்களாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய மற்றும் ️ரொஷான் மகாநாம, யசஸ் அபேவிக்ரம, ️சரண்யா சேகரம், புஷ்பகுமார சமரவிக்ரம, ஆஸ்ஷர்யா பீரிஸ், நதீஷா சந்திரசேன, நாலக சேனாதீர, ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு பயனுள்ள பல தகவல்களை பகிர்ந்தனர். நிகழ்வின் இடைக்கிடையே சானுகா விக்ரமசிங்க பாடல்களை வழங்கி உற்சாகமூட்டினார். மேலும் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாலில் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய "தேர்தலில் பெரும்பான்மை கருத்தை ஜனநாயகக் கருத்தாகக் கருத முடியாது. இருப்பினும், வாக்குகளை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.முதன் முறையாக வாக்காளர்கள் தங்கள் முதல் வாக்குகளை விரும்ப வேண்டும் என்று கூறினார். தேர்தல் ஆணைக்குழு மற்றும் ‘எனது முதல் வாக்கு- இலங்கை’ பேஸ்புக் குழு இணைந்து எதிர்வரும் தேர்தல்களில் முதன் முறையாக தங்களது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளும் இலங்கை இளைஞர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக இந்த இளைஞர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









கருத்துரையிடுக

Blogger இயக்குவது.