உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் பஷில் ராஜபக்ஷ் சந்திப்பு

( மினுவாங்கொடை நிருபர் )

   நாடளாவிய ரீதியிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றின் முஸ்லிம் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலொன்று, (20) ஞாயிற்றுக்கிழமை காலை, தெஹிவளை ஸ்ஹரான் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. 

இக்கலந்துரையாடலில், ஸ்ரீல.பொ.பெ. தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, உள்ளூராட்சி மன்ற நகரபிதாக்கள்,  தலைவர்கள், பிரதித்தலைவர்கள்,  உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம்  அமைப்பாளர்களுடனும் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

   எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீல.பொ.பெ. ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ்வின் வெற்றியை உறுதிப்படுத்துவது அத்துடன்,  முஸ்லிம்கள் ஐக்கியமாக இணைந்து இத்தேர்தலை எவ்வாறு வழி நடாத்துவது...?  மற்றும் அந்தந்த மாவட்டங்களில் இரு தரப்பினரும் இணைந்து ஒற்றுமையாக செயற்படுவது எவ்வாறு...? போன்ற அறிவுறுத்தல்கள் இவ் ஒன்றுகூடல் நிகழ்வின்போது வழங்கப்பட்டன. 

இக்கலந்துரையாடலில், முன்னாள் அமைச்சர்களான பைஸர் முஸ்தபா, அதாவுல்லாஹ், மயோன் முஸ்தபா, காதர் மஸ்தான் எம்.பி., பஷீர் சேகுதாவூத், ஸ்ரீல.பொ.பெ. முஸ்லிம் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மில்பர் கபூர் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.