தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரினாலும் வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவத்தை ஒருபோதும் அகற்ற போவதில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். 
கண்டியில்  இன்று (30) ஊடகங்களுக்கு இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், 
வடக்கு , கிழக்கு உள்ளிட்ட எந்த பகுதிகளில் இருந்தாலும் பௌத்த புரதான சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமெனவும், அவை எந்த இனத்தவர் வசிக்கும் பகுதிகளில் இருந்தாலும அவற்றுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதியும் பிரதமரும் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
குறிப்பாக வடக்கு கிழ​க்கில் உள்ள பௌத்த உரிமைகள் தேசத்தின் அபிமானமாக கருதப்பட வேண்டுமென தெரிவித்த அவர், அது குறித்து தொல்லியல் திணைக்களத்துக்கு உரிய அறிவுருத்தல்கள் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.
அதேபோல் வடக்கு கிழ​க்கில் உள்ள இராணுவம் அகற்றப்படாதெனவும், இராணுவ முகாம்கள் இருப்பதால் மக்களுக்கு சேவை வழங்கப்படுமே தவிர ஒருபோதும் மக்களுக்கு நெருக்கடியாக இராணுவம் செயற்படாதெனவும் ​தெரிவித்தார்.
அதனால் இராணுவத்தினர் இருக்க வேண்டிய பகுதிகளில் இருந்து அவர்களை அகற்போவதில்லை என்றும், யுத்தம் இருந்த காலத்திலும் வடக்கு கிழக்கு மக்களின் நெருக்கடி நிலைமைகளின் போது இராணுவமே உதவியதாக தெரிவித்த அவர், புலிகளிடமிருந்து மீண்ட மக்களுக்கு அரசாங்கத்தால் முடிந்த சகல சலுகைகளும் வழங்கப்படும் என்றார்.

(Tamilmirror)



பியாஸ் முஹம்மத்

சிங்கள மன்னன் துட்டகைமுனு தனது கால்களைச் சுருட்டி படுத்திருந்தபோது அவரது தாய் ஏன் மகனே, உனது கால்களை நீட்டி ஏன் படுக்கக் கூடாது என வினவுகிறாள். அதற்கு துட்டகைமுனு, எப்படி அம்மா கால்களை நீட்டிப் படுப்பது, ஒரு பக்கம் கடல், மறுபக்கம் தமிழர்கள் என்று இருக்கும் போது நான் எப்படி சுதந்திரமாக கால்களை நீட்ட முடியும் எனப் பதில் அளிக்கிறார். இந்த துட்டகைமுனு தான் பின்னர் தமிழ் மன்னன் எல்லாளனுக்கு எதிராகப் போரிட்டு எல்லாளனுடைய படையைத் தோற்கடிக்கிறார். இந்த துட்டகைமுனுவின் சிலையைத் தான் தனது பதவியேற்புக்குரிய இடமாக புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுத்திருந்தார். கொடுங்கோலனை எதிர்த்துப் போராடி வெற்றிபெற்ற துட்டகைமுனுவின் சிலையின் முன்னாலிருந்து எனது பதவியைப் பொறுப்பேற்பதில் நான் பெருமை அடைகின்றேன் என ஜனாதிபதி தனது கன்னி உரையில் தெரிவித்தார்.

தமிழர்களது போராட்டத்துக்கு எதிரான யுத்தம் தான் ராஜபக்ஷ குடும்பத்தினரை நாட்டு மக்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடும் நிலைமைக்கு ஆளாக்கியிருக்கிறது. முப்பது வருடங்களாக முடிவுக்குக் கொண்டு வரப்படாமல் இருந்த உள்நாட்டு யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்த பெருமை யுத்தத்துக்கு அரசியல் தலைமை வகித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், களத்தில் நின்று வழிநடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவுக்கும், பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய தற்போதைய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவுக்கும் உண்டு. அந்த வகையில் 2009 இல் யுத்தம் முடிவடைந்த கையோடு 2010 இல் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவும் போட்டியிட்டனர். தற்போது யுத்த வெற்றியின் மூன்றாவது பங்காளியான கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கிறார்.

ஆகவே யுத்த வெற்றி என்பது இந்த நாட்டு பெரும்பான்மை மக்களில் எவ்வளவு பாதிப்புச் செலுத்தியிருக்கிறது என்பது விளங்குகிறது. உலகில் சிங்கள மக்களுக்கென உள்ள ஒரே நாடாக சிங்கள மக்கள் இந்த நாட்டைப் பூஜிக்கிறார்கள். இந்த நாட்டை விட்டால் தமக்கு வேறு கதியில்லை என்று அவர்கள் நினைக்கின்றார்கள். உலகிலேயே சிறந்த நாடு இது என அவர்களது இதிகாசங்களும் சமயத் தலைவர்களும் அவர்களுக்கு ஊட்டி வைத்திருக்கிறார்கள். இதனால் இந்த நாடு பிளவுபடுவதை, துண்டாடப்படுவதை அவர்கள் தமது இனத்தை அழிக்கும் செயற்பாடாகவே நோக்குகிறார்கள். இதற்கான முயற்சிகளில் ஈடுபடுபவர்களை அவர்கள் ஜென்ம விரோதிகளாகவே பார்க்கின்றார்கள். இதன் அடிப்படையில் தான் சிறுபான்மை இனம் பற்றிய அவர்களது கண்ணோட்டமும் அமைகிறது.

சிறுபான்மை பற்றிய அவர்களது இந்த அச்சம் இன்று நேற்று முளைத்ததல்ல. இலங்கை மன்னர்களால் ஆளப்படும் போது மேற்கொள்ளப்பட்ட தென்னிந்தியப் படை எடுப்புக்களுடன் இந்த அச்சம் தொடர்புபடுகிறது. சேர, சோழ நாடுகள் மேற்கொண்ட படையெடுப்புக்கள் தொடர்பான ஞாபகங்கள் இன்னும் மறக்கடிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகின்றன. துட்டகைமுனு சிலை முன்னிலையிலான பதவியேற்பும் இதனை நினைவுறுத்தித்தான் நடைபெற்றது. சுதந்திரத்தின் போது முன்வைக்கப்பட்ட 50 க்கு 50 கோரிக்கைகள் சிங்களவர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. பின்னர் 1960 இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்கு பெடரல் கட்சியை அணுகியபோது அவர்கள் சுயாட்சிக் கோரிக்கையை நிபந்தனையாக வைத்ததால் சிங்கள மக்கள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தையே உதறித் தள்ள முயற்சித்த போது, கடவுளே வந்தாலும் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்ற கோஷத்தை முன்வைத்தே ஐதேக தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள நேரிட்டது. இந்த எண்ணம் மேலோங்கியதனால் தான் இந்திய வம்சாவழித் தமிழரின் பிரஜாவுரிமையை பறிக்கும் நிலைக்கு ஜேஆரை ஆளாக்கியது.

83 கலவரத்துக்கு முன்னர் தமிழரின் கோரிக்கை தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதாகவே இருந்தது. இது தமிழினத்தின் ஆதிக்கத்தை வளர்க்கும் என்று சிங்களவர் கருதியதனால் அதனைக் கொடுக்கக் கூடாது என்பதில் அவர்கள் பிடிவாதமாக இருந்தனர். இதுவும் கூட சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் தமிழர்கள் முன்வைக்கின்ற ஆட்சியில் பங்குவகித்தல் என்ற இடத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்து விடுமோ என்ற ஐயத்தின் வெளிப்பாடாகவே அமைந்தது. வடமாகாணத்தின் முதலைமைச்சராக அரசாங்கம் தன்னை நியமித்த போது அதனைப் பயன்படுத்தி வரதராஜப் பெருமாள் தனிநாடு பிரகடனம் செய்வதற்கு எடுத்த முயற்சி தமிழர்களுக்கு கொடுக்கப்படும் வாய்ப்புக்கள் எல்லாம் நாட்டைத் துண்டாடுவதற்கே பயன்படுத்தப்படும் என்ற பிராந்தியை சிங்களவர் மனதில் ஆழமாகப் பதித்தது.

இந்த வகையில் தமிழரை அடக்கி வைக்க வேண்டும் என்ற பெரும்பான்மை மக்களின் உணர்வை அரசியல் மயப்படுத்துவதில் ஜேஆர் வெற்றிபெற்றார். ஜூலைக் கலவரத்தின் போது அதனை அடக்காமல் தமிழினத்தின் மீதான வெறித்தனத்தை வெளிக்காட்டுவதற்கு சிங்களவர்களுக்கு தாராளமாக இடமளித்தார். தன்னை கிறிஸ்தவர் என்றும் முஸ்லிம் என்றும் கூறு போட்டுப் பார்த்த சிங்கள மக்களுக்கு மத்தியில் தன்னை சிங்கள இனவாதியாகக் காட்டிக் கொள்வதற்கு ஜேஆருக்கு இந்தக் கலவரம் தேவைப்பட்டது. அதிலிருந்து 2015 தேர்தல் வரை தமிழரை அடக்கி வைத்திருக்கும் ஒருவரையே சிங்களவர் தலைவராகத் தெரிவு செய்தனர். 2015 தேர்தல் வித்தியாசமாக அமைந்த போதிலும் தனது தோல்விக்கு தமிழரும் முஸ்லிம்களுமே காரணம் என மஹிந்த ராஜபக்ஷ ஜன்னல் கட்டிலிருந்து தெரிவித்த வார்த்தைகள் சிங்களவர் மனதில் ஊசி போல் குத்தின. இந்தத் தவறை மீண்டும் செய்யக் கூடாது என்பதில் சிங்கள சமூகம் ஒன்றிணைந்ததன் வெளிப்பாடே ராஜபக்ஷ குடும்பத்தினை மீண்டும் அரியாசனத்தில் ஏற்றி இருக்கிறது.

தேர்தலுக்காக வேண்டி சிங்கள மக்களை மீண்டும் ஒன்றிணைப்பதற்கு ஸஹ்ரானின் அடாவடித்தனம் உதவி  செய்தது. தேர்தலின் ஆரம்பத்தில் ஹக்கீம், மனோ, ரிஷாட் என சிறுபான்மைகள் சஜித்தைச் சூழ அணிதிரளும் பொழுதே சிங்கள மக்கள் தம்மால் ஒன்றிணைவதைத் துரிதப்படுத்தினர். தேர்தல் வெற்றியின் பின்னர் பாற்சோறு பார்ட்டியில் கலந்து கொண்ட ஒருவர், அவர்களுக்கு எமக்கெதிராக ஒன்றிணைய முடியுமென்றால் எமக்கும் ஒன்றிணைய முடியும் என்பதை இப்பொழுது நாங்கள் எடுத்துக் காட்டியிருக்கிறோம். நாங்கள் ஒன்றிணைந்தால் எவனாலும் எங்களை ஆட்டிப் படைக்க முடியாது என்று கூறினார். இந்த ஒன்றிணைவுக்கு இறுதி நேரத்தில் ஒத்துழைத்த அம்சமாக தமிழ்த் தரப்பின் கோரிக்கையை சுட்டிக் காட்ட முடியும். கோதாபயவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த சிங்களவர்கள் கூட தமிழரின் 13 அம்சக் கோரிக்கையை எதிர்நிலையிலேயே பார்த்தார்கள். சிங்களக் கிராமங்களை அகற்றக் கோருகிறார்கள், புத்தர் சிலைகளை நீக்கச் சொல்கிறார்கள் என 13 அம்சக் கோரிக்கைகளின் ஒவ்வொன்றுமே சிங்கள தேசம் பற்றிய அவர்களின் அச்சத்தை ஊதிப் பெருப்பிப்பதாகவே அமைந்திருந்தது. இவர்களின் இந்தக் கோரிக்கைகளை எதிர்த்தரப்பு வேட்பாளர் சஜித் பிரேமதாச ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களை சஜித் பிரேமதாச இணைத்துக் கொண்டமையே அவருக்கு வினையாக முடிந்தது.

மஹிந்த ராஜபக்ஷ தனது தோல்வியின் பின்னர் தெரிவித்த கருத்தை ஒத்ததாகவே ஜனாதிபதி கோதாபயவும் தனது வெற்றியின் பின்னர் கருத்து வெளியிட்டிருந்தார். “ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது சிங்கள மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற முடியும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தேன். எமது வெற்றியில் தமிழ் முஸ்லிம் மக்களும் பங்கு கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தேன். ஆனால் எதிர்பார்த்த அளவு அவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை” என அவர் குறிப்பிட்டிருந்தார். தேர்தல் முடிவுகள் ஜனாதிபதியுடைய இந்தக் கருத்தை தெளிவாக எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தன. எவ்வளவு தான் கணக்குப் போட்டுப் பார்த்தாலும் அவர் எதிர்பார்த்த அளவு சிறுபான்மை மக்களின் ஆதரவு அவருக்குக் கிடைக்கவில்லை என்பதை மறுப்பதற்கில்லை. இதனை அவர் எதிர்பார்த்ததனால் தான் கிழக்கு மாகாணத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக ஜனாதிபதி செல்லவில்லை என பஸில் ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.

சிறுபான்மையினரின் ஆதரவு பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு தேர்தல்களின் போது தான் தேவைப்பட்டுக் கொண்டிருந்தது. இனி அதுவும் அவசியமில்லை என்ற நிலை உருவாகுமானால் நாட்டில் ஓரங்கட்டப்பட்ட ஒரு சமூகம் உருவாவது தவிர்க்க முடியாதது. இது நாட்டை இன்னும் பல தசாப்தங்களுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லும். அதனால் ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பின் பக்கம் சிறுபான்மைச் சமூகங்கள் கவனம் செலுத்த வேண்டும். பொறுப்புக்களில் இருந்து ஒருபோதும் நான் விடுபட மாட்டேன். நடந்து முடிந்த தேர்தலில் எனக்கு ஆதரவு வழங்கியவர்கள், வழங்காதவர்கள் அனைவரினதும் ஜனாதிபதி நானாவேன் என்பதை நானறிவேன். இந்த அனைத்து மக்களினது உரிமைகளையும் ஜனாதிபதி என்ற பதவி நிலையிலிருந்து முழுமையாகப் பாதுகாப்பேன் என அவர் அறைகூவல் விடுத்திருக்கின்றார்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கப் போனால் நாட்டை இப்போது அச்ச உணர்வே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. சிங்களப் பெரும்பான்மை மக்கள் தமது இனம் அழிந்து விடும் என்றும் தமது நாடு தம்மிடம் இருந்து பறி போய் விடும் என்றும் அஞ்சுகின்றனர். நாட்டின் முன்னேற்றம் எப்படிப் போனாலும் தமது இனத்தைப் பாதுகாத்தல் என்பதுவே சிங்கள மக்களின் தேவையாகவிருக்கிறது. இதனால் தான் சஜித் பிரேமதாச முன்வைத்த அபிவிருத்திக் கோஷங்கள் சிங்கள மக்கள் மத்தியில் எடுபடவில்லை. சிங்கள மக்களின் பாதுகாப்பு உணர்வு என்ற சூழ்நிலை உருவாக்கிக் கொடுத்த தேர்தல் வாக்குறுதி தொடர்பில் சஜித் பிரேமதாச கொடுத்த அழுத்தம் சிங்கள மக்களின் நம்பிக்கையை வெல்லுவதற்குப் போதுமானதாக இருக்கவில்லை. அநுர குமாரவின் தேர்தல் உறுதிமொழிகளும் சூழ்நிலைக் கைதிகளை திருப்திப்படுத்துவதாக அமையவில்லை.எனவே பாதுகாப்பற்று அச்சத்தில் வாழ்கின்ற தமக்கு ஒரு தீர்வாக சிங்கள மக்கள் கோதாபயவையே தெரிவு செய்தனர்.

மறுபுறத்தில் இந்த மேலாதிக்க உணர்வு காரணமாக சிங்கள மக்கள் தம்மீது அத்துமீறுவார்களோ என சிறுபான்மை மக்கள் அஞ்சுகின்றனர். சிங்களப் பெரும்பான்மை மக்களது அச்சத்தைத் தீர்ப்பதற்கான மீட்பர்கள் காலத்துக்குக் காலம் தோன்றி வருகின்றனர். ஆனால் சிறுபான்மை மக்களின் அச்சம் காலாகாலமாகவும் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. அந்த வகையில் நாட்டு மக்கள் அனைவரினதும் ஜனாதிபதி என்ற வகையில் சிறுபான்மையினரின் அச்சம் தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவுக்கு நியாயமான பொறுப்பிருக்கிறது.

அதே நேரம் சிறுபான்மை மக்களுக்கும் பாரிய பொறுப்பிருக்கிறது. இந்த நாட்டை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப் போகிறார்கள் என்ற பெரும்பான்மையினரின் மனப்பாங்கை மாற்ற வேண்டும். நாட்டில் தமது பங்குகளைக் கேட்பதிலேயே சிறுபான்மையினர் குறியாக இருக்கிறார்கள் என்ற உணர்வை இல்லாமல் செய்ய வேண்டும். முதலில் எல்லோருமாக இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக விட்டுக் கொடுக்க முடியுமான உரிமைகளில் சில விட்டுக் கொடுப்புக்களுக்கு சிறுபான்மைச் சமூகங்கள் வர முடியும். எல்லோருமாக இணைந்து தான் நாட்டை அபாயத்திலிருந்து மீட்டு மீளக் கட்டியெழுப்பினோம் என்ற வரலாறு இலங்கைத் தீவைப் பற்றி எழுதும் போது எழுதப்படுமானால் அடுத்த தலைமுறையில் சிறுபான்மை பேதமின்றிய இலங்கையர்களைக் காண முடியும்.

Fiyaz Muhammad



கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பெண் அதிகாரி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பற்றி விசாரணை நடத்தப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எந்தவொரு முறைப்பாடும் இதுவரையில் கிடைக்கவில்லை இருப்பினும் விசாரணை நடைபெறுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில், விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் அதிகாரியின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

இந்தப் பெண் அதிகாரியின் ஒத்துழைப்பின்றி விசாரணையை முன்னெடுப்பது சிரமமானதாகும்.

சிசிரிவி கெமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ள காட்சிகளும் கவனத்திற்கொள்ளப்பட இருக்கின்றன.

இவ்வாறான விடயங்கள் பற்றி கவனம் செலுத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் அதனை தாம் கண்டிப்பதாகவும் பிரதமர் என்று கூறினார்.

அததெரண 



அனைத்து அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கமைய அன்றைய தினம் காலை 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களை மீள் திருத்தம் செய்வது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்படவுள்;ளது.

தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் முன்னெடுக்கும் தேர்தல் பிரச்சாரங்களுக்காக செலவாகும் பண செலவை குறைத்து அதற்கு பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சட்டங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

(அததெரண)



( ஐ. ஏ. காதிர் கான் )

   ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கொள்கைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. இக்கட்சியைப் பாதுகாப்பதும், வளர்த்தெடுப்பதும் கட்சிப்  பற்றாளர்களுக்குள்ள பாரிய பொறுப்பாகும்.

    எனக்கென்று ஒரு கொள்கை உள்ளது. நான் அமைச்சரவை அந்தஸ்துள்ள இரண்டு அமைச்சுப் பொறுப்புக்களை வகித்துள்ளேன். இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்களை இளைஞர்களுக்கு வழங்க  வேண்டும் என,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் தெரிவித்திருந்ததை நாம் அறிவோம். இதனை அனைவரும் வரவேற்க வேண்டும்.   

    கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, முஸ்லிம்களுக்கு ஏன் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவில்லை...? என, ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போதே, பைஸர் முஸ்தபா மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

   அவர் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது,
    நான் இரண்டு முறை அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்துள்ளேன். இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்களை, இளைஞர்களுக்கே வழங்குவதாக ஜனாதிபதி கூறியிருந்தார். ஜனாதிபதியின் இக்கூற்றை,  உண்மையில் வரவேற்கின்றேன்.

    பட்டமும் பதவியும் எனது கொள்கையல்ல. நான் அவைகளுக்கு அப்பாற்பட்டவன். கட்சியின் தீர்மானங்களுக்கு அப்பால் நானும், எமது கட்சிப் பற்றாளர்களும் இம்மியேனும் நகரமாட்டோம்.

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சிறந்த கொள்கைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டீ.ஏ. 
ராஜபக்ஷ் ஆகியோர் அரும் பாடுபட்டு வளர்த்தெடுத்தனர். கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் தடம் புரளாது இக்கட்சி நிலைத்து நிற்கிறது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

    சுதந்திரக் கட்சியின் நன்மைக்காக, அதன் எதிர் கால நலனுக்காக புதிய ஜனாதிபதியோடு, புதிய பிரதமரோடும், புதிய அரசாங்கத்தோடும் எமது கட்சி பேசும். அது எமது கட்சிக்கு உரித்தானது. அதில் எவ்விதத் தவறுமில்லை.

    நாம் சிறந்த கொள்கையுள்ள கட்சிப் பற்றாளர்களாவே எப்பொழுதும் இருப்போம் என்பதை, எமது இலங்கை வாழ் மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

( ஐ. ஏ. காதிர் கான் )



சஜித் பிரேமதாச அவர்களை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஐதேக தலைவர் ரணிலுக்கிடையில் ஏற்பட்ட சந்திப்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் ரணில், சஜித் மற்றும் சபாநாயகர் கரு ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட சந்திப்பிலும் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.



சமூக இணையத்தளங்களுக்காக அமைச்சுக்குள் பிரிவொன்றை எற்படுத்தி செயற்படுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.

அமைச்சர் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் சிறிதளவேனும் குறைக்கப்படமாட்டாது என்றும் எந்தவித பாதிப்புக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார். மக்களுக்காக முன் நிற்கும் ஊடக நிறுவனங்களில் அரசியல் பழிவாங்கலுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன் பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றினார். யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறதி மொழி ஒன்றை வழங்கினார். அதற்கு அமைவாக ஊடக துறை அமைச்சராக செயற்பட்டேன். அன்று முதல் 4 வருட காலம் மிகவும் சிரமமான காலப்பகுதியில் செயற்பட்டேன்.

ஊடகத்துறை அமைச்சிற்கு எல்.ரி.ரி.ஈ யினால் கூட அச்சுறுத்தல் இருந்தது. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சராக இது விரிவடைந்துள்ளது. இந்த அமைச்சில் இராஜாங்க அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்பதை இட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன் என்றும் தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக நாம் செயற்பட கடமைப்பட்டுள்ளோம்.

ஜனாதிபதி முன்மாதிரியாக செயற்பட்டுள்ளார். அது எமக்கு எடுத்துக்காட்டாகும். மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் இவற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டும். கொள்கை பிரகடனத்தில் ஊடகம் தொடர்பாக உள்ள அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும். ஊடக சுதந்திரம் உண்டு. அபிவிருத்தியில் மேற்கொள்ளப்படும் நடைமுறை தொடர்பாக பொது மக்களுக்கு ஊடகங்கள் தெளிவுபடுத்தும் என்று தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மற்றும் ஊடகத்துறை அமைச்சிற்கு உட்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)




அக்கரைப்பற்றிற்கு தென்புறத்திலுள்ள திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டமடு பிரதேசத்தில் அமைந்துள்ள பொத்தானையில் - முஸ்லிம் பெரியார் ஒருவரின் சியாரம் - சுமார் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக அந்த இடத்தில் இருந்து வருகிறது.

இந்த பிரதேசத்தை சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் தொல்பொருள் திணைக்களம் அடையாள கட்டைகளை நாட்டி உட்பிரவேசிக்க முடியாமல் விபரமறியாமல்  தடுத்தது.

இவ்விடயம் அந்த சியாரத்தை பாராமரித்துவரும் அக்கரைப்பற்றை சேர்ந்தவர்களினால் - ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இப்பராமரிப்பாளர்களையும் கூட்டிக்கொண்டு தொல்பொருள் திணைக்கள தலைவரை கொழும்பில் சந்தித்து முழு விபரங்களையும் தெளிவுபடுத்தினார்.

இதன் பின்னர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சமய அனுஷ்டானங்களை செய்வதில் தடை இல்லை எனவும் - ஆனால், நிரந்தரமான கட்டிடமோ அல்லது அகழ்தலையோ செய்ய முடியாது எனவும் நிபந்தனை விதித்து - சியாரத்திற்கு செல்வதிலுள்ள தடைகளை நீக்கி வழங்கினார்.

அதன் பின்னர் வழமை போல அங்கு சியாரத்தை தரிசிக்கும் விடயங்கள் - கந்தூரி வைபவங்கள் - திக்ர் மஜ்லிஸ்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த 04 மாதங்களுக்கு முன்னரும் ஒரு கந்தூரி வைபவம் இடம்பெற்றது.

இடையில், தற்காலிக கொட்டகை ஒன்று குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்பட்டு அதை இனம் தெரியாதவர்கள் உடைத்தெறிந்த விடயமும் - இவ்விடத்தின் தனிப்பட்ட உரிமை சம்மந்தமான விடயமும் - திருக்கோயில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடாகவும் அக்கரைப்பற்று  நீதிமன்றத்தில் வழக்காகவும் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் சுமார் 03 தினங்களுக்கு முன்னர் - றிசா மஷூர் என்பவரும் இன்னும் சில பிக்குகளும் குறிப்பிட்ட சியாரம் இருந்த இடத்திற்கு சென்றதாகவும் - இவ்விடம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களின் ஏற்பாட்டில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி வழங்குமிடமாக பயன்படுத்தப்படுவதாக "ஹிரு TV" செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சியாரத்தில் இரவு வேளைகளில் இடம்பெற்ற திக்ர் மஜ்லிஸ்கள் - இரவு நேர பயிற்சிகளாக சித்தரிக்கப்பட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சியாரங்களை தரிசிப்பதையும் பெரியார்களை கண்ணியம் செய்வதையும் தீவிரவாத செயலாக காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு ஹிரு TV யில் காட்டப்பட்ட பின்னணியிலேயே - றஊப் ஹக்கீமை கைது செய்ய வேண்டும் என்ற கோசம் ராவணா பலய அமைப்பின் இணைப்பாளரான இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தலைமையில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம்களை பலிக்கடாவாக்கும் நிகழ்ச்சி திட்டம் மிகக்கச்சிதமாக அரங்கேற்றப்பட்ட வண்ணமே இருக்கிறது. கருத்து வேறுபாடுகளுக்கப்பால் அதற்கு பெரியார்களின் கண்ணியமும் சியாரங்களும் கூட பயன்படுத்தப்படுவது மனதை கனக்க வைக்கிறது.

(சியாரத்தின் பழைய படம் இணைக்கப்பட்டுள்ளது)

A.L.Thavam


இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனநாயகம் விருத்தியுறாத, மனித உரிமைகளும் சமூக பன்மைத்துவம் பேணப்படாத மன்னர் ஆட்சிக் கால அமைச்சரவைகளில் கூட முஸ்லிம்கள் அமைச்சர்களாகப் பணிபுரிந்து எமது தாய் நாட்டுக்குச் சேவையாற்றியுள்ளனர். இருப்பினும் தற்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள ஜனாதிபதி கோட்டபாய தலைமையிலான புதிய அமைச்சரவையில் எந்தவொரு முஸ்லிம் அமைச்சரோ பிரதி அமைச்சரோ உள்வாங்கப்படாமையானது பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் தோற்றுவித்துள்ளன.

தேசிய அரசுப் பேரவை தொடக்கம் கோட்டா அரசு அமைச்சரவை வரை

1931 ஜுலை 07 ஆம் திகதி நியமிக்கப்பட்ட முதலாவது தேசிய அரசுப் பேரவையில் கௌரவ H.M. மாகான் மாகார் அவர்கள் முதலாவது அமைச்சராக அதாவது “தொடர்பாடல் மற்றும் தொழில்” அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இரண்டாவது தேசிய அரசுப் பேரவையில் முஸ்லிம்கள் எவரும் நியமிக்கப்படாவிடினும் அதனைத் தொடந்து வந்த அனைத்து அமைச்சரவைகளிலும் முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டு நாட்டுக்குப் பல முக்கிய பங்களிப்புக்களைச் செய்துள்ளனர்.

சுதந்திர இலங்கையின் முதலாவது அமைச்சரவையில் கௌரவ டீ.பீ. ஜாயா அவர்கள் தொழில் மற்றும் சமூக சேவைகள் அமைச்சராகவும் ஜனாப் சேகு இஸ்மாயீல் அவர்கள் உணவு மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சராகவும் ஜனாப் கேட் முதலியார் காரியப்பர் அவர்கள் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து வந்த பாராளுமன்றங்களில் டொக்டர் M.C.M. கலீல், சோ் ராஸிக் பரீட், C.A.S. மரிக்கார், பதியுதீன் மஹ்மூத், M.P.M.M. முஸ்தபா, அப்துல் மஜீத், நைனா மரிக்கார், M.H. மொஹமட், A.C.S. ஹமீட், பாகீர் மாகார், அபூசாலி, இம்தியாஸ் பாகிர் மாகார், M.H.M. அஷ்ரப்,  A.H.M. பவுஸி, A.R.M. அப்துல் காதர், அலவி மௌலானா, A.H.M. அஸ்வர், ரவூப் ஹகீம், கபீர் ஹாசிம், போியல் அஷ்ரப், அதாவுல்லா, ரிஷாட் பதுறுதீன், ஹலீம், பைசர் முஸ்தபா போன்ற பல முக்கிய முஸ்லிம் தலைமைகள் அமைச்சர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

எண்ணிக்கை அடிப்படையில், ஜே.ஆர். ஜயவர்தன அவர்களின் அரசாங்கத்தில் (1978-1988) மூன்று அமைச்சர்களும் ஐந்து பதில்/பிரதி அமைச்சர்களும், பிரேமதாஸ அரசாங்கத்தில் (1989-1993) இரண்டு அமைச்சர்களும் ஆறு பிரதி அமைச்சர்களும் இருந்துள்ளனர்.  ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களின் 1994-2000: 2000-2001: 2004-2005 எனும் மூன்று அமைச்சரவைகளிலும் முஸ்லிம்களுக்கு உரிய இடம் வழங்கப்பட்டிருந்தது. முதலாவது அமைச்சரைவில்  2 அமைச்சர்களும் 3 பிரதி அமைச்சர்களுமாக ஐந்து அமைச்சர்களும், இரண்டாவது அமைச்சரைவில்  4 அமைச்சர்களும், 4 பிரதி அமைச்சர்களுமாக 8 அமைச்சர்களும், மூன்றாவது அமைச்சரைவில்  7 அமைச்சர்களும் 3 பிரதி அமைச்சர்களுமாக மொத்தம் 10 அமைச்சர்களும் நியமிக்கப் பட்டிருந்தனர்.

அதேபோல, மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியை நிறுவுவதில் முஸ்லிம்கள் போதிய பங்களிப்புச் செய்யவில்லை என்ற மனக் குறை இருந்தாலும், அவரது முதலாவது அரசாங்கத்தில் வரலாற்றில் அதிகூடிய எண்ணிக்கையான நான்கு அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட 14 முஸ்லிம் அமைச்சர்களை நியமித்தார். அவரது இரண்டாவது அமைச்சரவையில் அதனை 03 அமைச்சர்களும் 01 பிரதி அமைச்சருமாக மட்டுப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்த நல்லாட்சி அரசில் (2015) அமைச்சர்களின் எண்ணிக்கை அரசியல் அமைப்பின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டாலும், ஐந்து முஸ்லிம் அமைச்சர்களும் ஏழு இராஜாங்க/ பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். மைதிரி - ரணில் பிரிவுடனான நல்லாட்சியின் இறுதிப்பகுதியில் (2018) அமைக்கப்பட்ட அமைச்சரவையில் நான்கு அமைச்சர்களும் 4 பிரதி அமைச்சர்களும் அங்கம் வகித்தனர்.

இருப்பினும் 15 உறுப்பினர்களைக் கொண்ட கோடாபாய ராஜபக்ஷ அவர்களின் அமைச்சரவையிலும், 34  உறுப்பினர்களைக் கொண்ட இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் தொகுதியிலும்  இரண்டு தமிழ் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டாலும் எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரும் உள்வாங்கப்படவில்லை.

முஸ்லிம் புறக்கணிப்பு?

தனிச் சிங்கள அரசாங்கத்தை அமைப்பதை இலக்காகக் கொண்ட இந்தப் புதிய அரசாங்கத்தின் முதல் எதிரிகள் முஸ்லிம்கள் எனத் தோ்தலுக்கு முன்னமே சித்தரிக்கப்பட்டாலும், ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஷ அவர்கள் தனது அமைச்சரவை நியமனத்தின் மூலம் அதனை வெளிப்படையாகவே செய்தும் காட்டியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தோ்தலில் மேலும் அதிக சிங்கள வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று ‘சிங்கள தேசத்தை’ உறுதிசெய்வதற்கானதொரு உத்தியாகவே இந்த அமைச்சரவை நியமனம் உள்ளது.

நாடளாவியரீதியில் சுமார் 150,000 முஸ்லிம்கள் அதாவுது எட்டில் ஒரு பகுதியினர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக கோட்டாபே ராஜபக்ஷவுக்கு வாக்களித்துள்ள நிலையிலும் ஒரு அமைச்சுப் பதவியேனும் முஸ்லிம்களுக்கு வழங்கப்படாமையானது கோட்டபாயவுக்கு வாக்களித்த அனைத்த முஸ்லிம்களையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.

ஜனாதிபதி கோடபாய பெற்றுக் கொண்ட 69 இலட்சம் வாக்குகளில் 2 வீத வாக்குகள் முஸ்லிம் வாக்காளர்களது என்பது மறுக்க முடியாது. அவ்வாறாயின், தனது அனைத்து நியமனங்களிலும் குறைந்தது 2 வீத்ததையாவது முஸ்லிம்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். 49 உறுப்பினர்களுடனான இந்த அமச்சரவையில் ஒரு முஸ்லிமையாவது உள்வாங்கியிருக்க வேண்டும். ஆனால் கோட்டாபாயவுக்கு வாக்களித்த 150,000 முஸ்லிம் வாக்காளர்களும் இலங்கை வாழ் 22 இலட்சம் முஸ்லிம்களும் முழுமையாகவே புறக்கணிப்பட்டுள்ளமை இலங்கை வரலாற்றில் இழப்பீடு செய்ய முடியாத ஒரு பாரிய வரலாற்றுத் தவறாகும்.

முடிவுரை

இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனநாயகம் விருத்தியுறாத, மனித உரிமைகளும் சமூக பண்மைத்துவம் பேணப்படாத மன்னர் ஆட்சிக் கால அமைச்சரவைகளில் கூட முஸ்லிம்கள் அமைச்சராகப் பணிபுரிந்து எமது தாய் நாட்டுக்குச் சேவையாற்றியுள்ளனர். இருப்பினும் ‘சிங்கள தேசம்’ எனும் இனத்தேசியவாத எண்ணக்கருவுடனான இந்த புதிய அரசியல் பயணத்தில் இலங்கை வாழ் 22 இலட்சம் முஸ்லிம்களும் முழுமையாகவே புறக்கணிக்கப்பட்டுள்ளமை ஒரு பாரிய வரலாற்றுத் தவறாகும். குறுகிய அரசியல் இலாபம் கருதி இனவாத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்மானங்களால் எமது தாய் நாடு இழப்புகளை அன்றி அபிவிருத்தியை என்றும் அடைந்ததில்லை பல நிகழ்வுகளும் சம்பவங்களும் எமக்கு உணர்த்தியுள்ளன. உனவே இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் இன மக்கள் ஒன்றிணைந்த ஒரு பயணத்தின் ஊடாக மாத்திமே இந்த நாடு நிலையான அபிவிருத்தியை அடையும் என்ற உறுதியான நிலைப்பாடு இலங்கையர்களாகிய எம் அனைவரதும் ‘வாக்காகவும் செயலாகவும்’ அமைய வேண்டும்.

----------முற்றும்----------

அபூ அய்மன், BA (Hons), M.Phil. சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர்.
(2019.11.29 - விடிவெள்ளி)




பாகிஸ்தான் கிரிக்கட் அணியுடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் கலந்துக் கொள்ளும் இலங்கை அணியின் இறுதி 16 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

அதன்படி, அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன பெயரிடப்பட்டுள்ள நிலையில், தினேஸ் சந்திமால் மற்றும் எஞ்சலோ மெத்திவ்ஸ் ஆகியோர் அணியில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

அதன்படி, ஓசத பெர்ணான்டோ, குசல் மெந்திஸ், குசல் ஜனித் பெரேரா, லஹிரு திரிமான்ன, தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, தில்ருவன் பெரேரா, லசித் அம்புல்தெனிய, சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்ணான்டோ, கசுன் ராஜித்த மற்றும் லக்‌ஷான் சந்தகென் ஆகியோர் ஏனைய வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இரண்டு போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடர்பில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் 08 ஆம் திகதி இலங்கை அணி பாகிஸ்தான் நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

AdaDerana 





கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது இலங்கை முஸ்லிம்கள் தங்களின் வரலாற்றில் அதிசயமாகிப்போன ஓர் ஒற்றுமையான நிலைப்பாட்டை கட்சி பேதமின்றி எடுத்தனர். முஸ்லிம்களின் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டனவும் தேசிய ரீதியான தங்கள் இறக்கைகளைப் பரவ விட்டனவுமான முஸ்லிம் கட்சிகள் இதில் முதலிடம் பெற்றன.
நுட்பான அடக்குமுறை எனப்படும் கண்ணுக்குப் புலப்படாத சதிவலைக்குள் சிக்கிய ஒரு சமூகத்தின் அரசியல் தலைமைகள் அதி உச்சமான என்ன தெரிவுக்கு வரமுடியுமோ அத்தகைய தீர்மானத்தையே அவர்கள் எடுத்தனர். அந்தத் தீர்மானம் பொதுவெளியில் முஸ்லிம்களினதும் ஏனைய சிறுபான்மை மக்களதும் பெருத்த வரவேற்பை அப்போது பெற்றுக்கொண்டது.
ஆனால், ஜனாதிபதித் தேர்தலின்போது அவர்களின் தெரிவு வேட்பாளர் தோல்வி கண்டதன் பின்னர் அதே பொதுவெளியில் திட்டமிடப்பட்டோ அல்லது இயல்பாகவோ அந்தத் தீர்மானம் ஓர் இனவாதத் தீர்மானமாக கொச்சைப்படுத்தப்படுகின்றது. அது மட்டுமன்றி சமூகத்தை புதை குழிக்குத் தள்ளிவிட்ட அரசியலாகவும் சிலரால் தூற்றப்படுகின்றது. இது தொடர்பான ஒரு சிந்தனைப் பரவலே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இந்தத் தீர்மானம் ஒரு தூய சிங்கள பௌத்தரான சஜித் பிரேமதாச என்ற ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கின்ற தீர்மானமே தவிர தமிழ்ப்பேசும் இஸ்லாமியரான ஹிஸ்புல்லாஹ்வையோ அல்லது மொழிவழி சகோதர இனமாகிய தமிழ் இனத்தைச் சேர்ந்த சிவாஜிலிங்கத்தையோ ஆதரிப்பதாக எடுத்த தீர்மானமன்று. ஆகவே, இந்தத் தீர்மானத்தை இனத்துவேஷ அடிப்படையிலான தீர்மானம் என்று முகமூடி போடுவது முற்று முழுதுமான பித்தலாட்டமாகும்.

ஓர் இனம் தனது உயிரியல் மற்றும் புவியியல் இருப்பை தப்பிப்பிழைக்க வைத்துக் கொள்வதற்கான (survival) உத்திகளைக் கையாள்வதானது இனவாதம் என்ற கருதுகோளின் வரைவிலக்கணமாக முடியாது. இனவாதம் பிற இனத்தின் உயிரியல், சமூகவியல், பொருளியல் முதலிய அனைத்தின் மீதும் அடர்ந்தேறும் நோக்கமுடையதாகும்.
கலாநிதி நீலன் திருச்செல்வம் இனவாதத்துக்கும் இனத்துவ அரசியலுக்கும் இடையிலான வெளிப்படையான அர்த்தத்தை மிகச்சிறப்பாக விளக்கியுள்ளார். மட்டுமன்றி, லங்கா கார்டியனின் ஆசிரியராக இருந்த மேவின் டி சில்வாவும் தன்னுடைய கட்டுரைகளில் 1980களிலேயே இதனைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இனத்துவ அரசியலுக்கும் இனவாத அரசியலுக்கும் இடையிலுள்ள தருக்க ரீதியான தத்துவார்த்தப் பின்புலத்தைப்; புரிந்து கொள்ள மறுப்போரின் கபட விளையாட்டுக்கள் பொது வெளியில் சமூக ஊடகங்களைக் கையாளும் இளைய தலைமுறையினரை பிழையாக வழிநடாத்தும் இலக்குடன் வெளியிடப்படுகின்றன. ஆனால், உண்மையில் இந்த அரசியல் பேரிடர் நடந்தமைக்கான காரணம் இங்கு காணப்பட்ட வேறு வேறான சமூகச் சூழ்நிலைகளாகும்.
முஸ்லிம் அடையாள அரசியலானது அத்தகைய ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டிய இக்கட்டான நிலைக்கு, சமகால வரலாற்றில் மிக வெளிப்படையான காரண காரியங்கள் நிகழ்ந்துள்ளன. தங்களின் சுயநல அரசியல் பார்வையைத் தவிர்த்து சமூக அக்கறை கொண்டு அவதானிப்பவர்களிடம் இத்தகைய மேம்போக்கான அபிப்பிராயங்கள் நிலைகொள்ளும் நிலை அறவே தோற்றம்பெற வாய்ப்பில்லை.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21இல் அரங்கேற்றப்பட்ட உயிர்த்த ஞாயிற்றின் பயங்கரவாதம் இலங்கையில் இஸ்லாமோபோபியாவின் பல்பரிமாணங்களையும் சேர்த்துக்கொண்டு உயிர்ப்பிக்கச் செய்துவிட்டது. காத்திரமாகத் திட்டமிடப்பட்ட, ஓரு சமூகத்தை நோக்கிய சுனாமி இலங்கை எங்கணும் புவிசார் அரசியலின் முற்றுமுழுதான ஆசீர்வாதத்துடன் ஏவப்பட்டது. அதன் பின்னர் நிகழ்ந்த அவலம் இலங்கையின் சமூக உளவியலைப் புரட்டிப்போட்டுவிட்டது. அதன் பின்னணியில் இலங்கையர் தனித்தனி இனங்களாகவும் தீவுகளாக்கப்பட்ட சமூகங்களாகவும் துருவப்படுத்தப்பட்டனர். இத்தோடு இலங்கைச் சமூகத்தின் எல்லா சமூக விழுமியங்களும் நிதானங்களும் கூண்டோடு அழிக்கப்பட்டன.

விடுதலை இலக்கில்லாத தான்தோன்றியான ஒரு மதவாத கைக்கூலிப் பயங்கரவாதத்தின் களத்தில், எல்லா இலங்கைச் சோனகரையும் சார்ந்த அனைத்து சமூகத்தினதும் அழிபடுதிறன் வாய்ப்புப் பார்க்கப்பட்டது. ஓர் அப்பாவிச் சமூகத்தின் அமைதியான வாழிடங்கள்  பரிசோதனைக் களமாக மாற்றப்பட்டன. அவர்களின் தொழில் நிலையங்களையும் வியாபார ஸ்தலங்களையும் வழிபாட்டிடங்களையும் பொறாமைத் துப்பாக்கிகள் இலக்குப்படுத்தின. சராசரி மக்களின் அமைதியான வாழ்க்கை வலிந்து உருவாக்கப்பட்ட நெருக்கடிக்குள் சிக்கிவிடப்பட்டது.

ஆனால், 1983 ஜூலைக் கலவரமானது ஏப்ரல் 21 தாக்குதலுடன் ஒப்பிடுகையில் இந்தப் போக்கில் நின்றும் பெரிதளவுக்கு வேறுபட்டது. தனிநாட்டு விடுதலையை நோக்கி இலக்குப்படுத்தப்பட்டதும் வாழ்வியல் சார்ந்த கல்வியறிவில் உச்சநிலையில் இருந்ததுமான ஒரு சமூகத்தினது பல்பரிமாண ஆசீர்வாதங்களையும் பெற்ற விடுதலைப் போராளிகள் 1983 ஜூலை 23இல் இலங்கை இராணுவத்தினர் மீது யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தியில் வைத்து ஒரு கண்ணிவெடித் தாக்குலைத் தொடுத்தனர்.
இத்தாக்குதலால் ஏற்படுத்தப்படப்போகும் நேரடி விளைவுகளும் பக்கவிளைவுகளும் பற்றிய அச்சமும் எதிர்பார்ப்பும் அந்த தாக்குதலைத் தொடுத்த இயக்கங்களைச் சார்ந்த சராசரி மக்களின் மனக்குகைகளில் ஏற்கனவே 1978ஆம் மற்றும் 1981ஆம் ஆண்டின் நெருக்கடி நிலைகளால் ஏற்படுத்தப்பட்டிருந்தன (1958 ஆம் ஆண்டின் அனுபவத்தை ஒரு தலைமுறை கடந்த அனுபவமாக சிலர் கருதுவர்).

திருநெல்வேலி கண்ணிவெடித் தாக்குதல் நடைபெற்றபோது சிங்கள சமூகத்திடம் எதிர்வினையாக உருவான கூட்டுக் கழிவிரக்கமானது (collective sympathy) ஒரு வன்மமாக மடைமாற்றம் பெற்று காடைத்தனமாகவும் பின்னர் அரச பயங்கரவாதமாகவும் வெடித்தது. ஒரு விடுதலைப் போராட்டத்தின் நேரடி விளைவுகளோடும் பக்கவிளைவுகளோடும் சம்மந்தப்பட்டதான ஒரு நிகழ்ச்சி திட்டமானபடியால் ஒரு வகையில் அவர்களின் போராட்டத்துக்கு அது உரம் சேர்த்ததோடு அதற்கான ஒரு சர்வதேச வியாப்தியையும் கொடுத்தது.

ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது அடக்குமுறைக்கு எதிரான எந்தவிதமான போராட்ட உணர்வுகளுடனும் சம்மந்தப்பட்டிருக்காத சர்வதேச இஸ்லாமோபோபியாவின் நிகழ்ச்சித் திட்டத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்மந்தப்பட்ட ஒரு தாக்குதலாகும். ஏற்கனவே பொது பல சேனாவினாலும் றாவண பல வேகயவினாலும் உருவாக்கப்பட்ட உளவியல்சார் வன்முறைக் கோட்பாடுகளுக்கு பதில் வன்முறையை உருவாக்குதல் என்பதைப் பற்றி முஸ்லிம் சமூகம் பரந்த அளவில் சிந்திக்கவும் இல்லை. அது தொடர்பான விவாதங்களில் ஈடுபடவும் இல்லை. மட்டுமன்றி  ஏப்ரல் 21இன் தாக்குதலைத் தொடுத்த பயங்கரவாதிகளுக்கும் அவர்களின்; சமூக வெளியிலுள்ள மக்களுக்கும் எவ்வித பரஸ்பர புரிந்துணர்வோ, கொள்ளல் கொடுத்தல் உறவுகளோ, பொதுமைப்படுத்தப்பட்ட உளவியல் அங்கலாய்ப்புக்களோ ஏற்கனவே தீவிரமாகக் காணப்பட்டதற்கான பாதுகாப்புத் துறைசார் தடயங்கள் இலங்கைச் சூழலில் அறவே இருக்கவில்லை.

மேற்படி சமூகவியல் சூழலில் தோன்றிய செயற்கையான பயங்கரவாதம் ஓர் இனக்குழுமத்தின் பொது மக்கள் பயங்கரவாதமாக அரசியல் பொதுவெளியில் மொழி பெயர்த்துப் பார்க்கப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு அப்பாவி மக்கள் மீது தான்தோன்றியாக மட்டுமன்றி நிறுவன மயப்படுத்தப்பட்டும் சரமாரியான தாக்குதல் நிகழ்த்தப்பட்டன.

இத்தாக்குதல்களானது ஒரு கூட்டு உளவியல் வன்முறையாக மட்டுமன்றி, ஓர் இனக்குழுமத்தின் அப்பாவி மக்கள் மீது நேரடியாகத் தொடுக்கப்பட்ட சரமாரியான அத்துமீறலுமாகும். நாட்டின் சட்டமும் ஒழுங்கும் கூட மடாலயங்களில் நேர்ச்சைக்கு விடப்பட்ட அறுவைக்கான விலங்குகளாகவே தோற்றம் காட்டின.

அத்துடன், இஸ்லாமோபோபியாவின் ஊடகப் பயங்கரவாதம் இதற்கான பொது உளவியலை நாட்டின் பெரும்பான்மையிடம் மட்டுமல்லாது முதலாம் சிறுபான்மையிடமும் கூட ஏற்படுத்தி இருந்தமை அதன் தங்கு தடையற்ற வெற்றியாகும்.

இதனால் 2019 ஏப்ரல் 21ஆம் திகதியின் பின்னர் இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தினதும் ஓரளவுக்காயினும் முதலாம் சிறுபான்மை சமுகத்தினதும் பொதுப்புத்தியில் முஸ்லீம்கள் மீதான பொது வெறுப்பை உருவாக்கும் இஸ்லாமோபோபியா ஆழமான செல்வாக்கை புரையோடச் செய்தது.

அதன் உச்சக்கட்டமாக நேரடியாகவே முஸ்லீம் அரசியல்வாதிகள் மீதும் புத்திஜீவிகள் மீதும் ஒரு வன்முறை சார்ந்த காழ்ப்புணர்வுடன் கூடிய முடிவற்ற பயங்கரவாதத் தாக்குதலாக அப்போக்கு மாற்றம் பெற்றது.
அதற்கான சிறந்த உதாரணம் உயிர்த்த ஞாயிறு வன்முறையாளனோடு உண்மையாகவே எவ்விதமான நெருக்கமான அரசியல் தொடர்பும் இல்லாதிருந்த அவரின் ஊரைச் சேர்ந்தவரான கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன், மேல்மாகாண ஆளுனர் ஆஸாத் சாலி ஆகியோர்களுக்கும் எதிராகப் பேரினவாதம் தன் கொடுவாளை நீட்டியது.

மேலும் குறிப்பாக, மருத்துவர் ஷாபிக்கு எதிராக நிறுவனமயமாக்கப்பட்ட கூட்டுத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன.
மேற்படி மூன்று அரசியல் வாதிகளுக்கும் எதிரான ரத்ன தேரரின் தலதா மாளிகையில் அரங்கேற்றப்பட்ட உண்ணாவிரதமானது ஓர் இரத்தவெறியை பெரும்பான்மையிலுள்ள காடையர்களிடம் தூண்டுவதற்கான ஒரு தந்திரோபாயமாகப் பார்க்கப்படுவதில் எவ்வித தவறும் கிடையாது.
முஸ்லிம் மக்களுக்கு எதிராகத் தூண்டப்பட்ட இந்த தங்கு தடையற்ற பெரும்பான்மைப் பயங்கரவாதம் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற எல்லைக் கோடுகளைக் கடந்து அன்றைய இலங்கை சிவில் சமூகத்தின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டது. எனினும், பேரினவாதிகள் அவற்றைக் கணக்கில் எடுக்கவில்லை என்பதே அன்று வெளிப்படையாகத் தெரிந்த உண்மையாகும். ஒவ்வொரு சராசரி மனிதனும் அடுத்தகணம் என்ன நடக்குமோ என்று பரிதவித்துக்கொண்டிருந்தான்.

இந்தக்கட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தன்னுடைய பயங்கரமான உரைகளால் தூண்டிக்கொண்டிருந்த ஞானசாரவின் தலதா மாளிகை நோக்கிய தரிசனமும் அதனையடுத்து அவர் அரங்கேற்றிய மத்திய மாகாணத்தில் இருந்து மேல்மாகாணம் நோக்கிய பாத யாத்திரையும் முஸ்லிம்களின் மீதான தாக்குதலைத் தொடுக்க காடையர்களைத் துரிதப்படுத்திற்று. இறுதி அழிவுக்கான ஸ_ர் எனும் ஊதுகுழலின் ஒலி இலங்கைச் சமூகத்தின் காதுகளை நோக்கி திருப்பப்பட்டது.

ஆளும் கட்சியின் அதிகாரம் வாய்ந்த அமைச்சர்களாக முஸ்லிம் மக்களின் அரசியல் தலைமைகள் இருந்திட்டபோதிலும் சுனாமிபோல பேரழிவை ஏற்படுத்தும் நோக்குடன் உருவான இந்தப் பிரளயம் கண்டு செய்வதறியாது கையறு நிலையில் அவர்களும் இருந்தனர்.

எனினும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை சிந்திப்பதற்காக, சிதறடிக்கப்பட்டிருந்த முஸ்லிம் தலைமைகள் முதன்முறையாக ஒரே மேசையில் வட்டமிட்டு அமர்ந்தன. முஸ்லிம் கட்சிகளில் மட்டுமன்றி ஆளும் கட்சியின் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் இந்த வட்ட மேசையை நோக்கி வேறு வழியின்றி நகர்ந்தனர். இஸ்லாமிய பரிபாஷையில் மஷ_றா எனப்படும் ஆலோசனையில் அனைவரும் ஒருமித்த கருத்தோடு எவ்வித தனிப்பட்ட அரசியல் பின்னணிகளும் இன்றி அபிப்பிராயங்களைக் கூறினர்.

இறுதியில் இந்தப் பிரளயத்தை நிறுத்த வேறு வழியின்றி ஆளும் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் அமைச்சு, இரஜாங்க  மற்றும் பிரதியமைச்சுப் பதவிகளை உடனடியாக இராஜினாமா செய்வது என்ற ரவூப் ஹக்கீமின்  முன்மொழிவுக்கு ஒருசேர அனைவரும் ஆமீன் கூறினர். அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியுத்தீன் மட்டுன்றி கபீர் ஹாஷீம், ஹலீம் உள்ளிட்ட அமைச்சர்களும் ஏனைய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் அத்தனைபேரும் இராஜினாமாச்செய்து கடிதங்களைப் பிரதமருக்கு அனுப்பி முஸ்லிம்கள் நெஞ்சங்களிலும் இலங்கையில் பிரளயத்தை விரும்பாத சிவில் சமூகத்தின் நெஞ்சகளிலும் பாலை வார்த்தனர். ஒற்றுமைப்படாத சமூகம் என்று முகத்தின் மீது காறித் துப்பப்பட்ட சமூகம் முதல் முறையாக தங்கள் ஒற்றுமையின் தக்பீர் முழக்கத்தை இலங்கையின் எட்டுத் திசையிலும் முழங்கிற்று.

இந்த இராஜினாமா என்ற அதிசயத்தினால் இலங்கையின் சமூக மற்றும் அரசியல் இயங்கியலின் சுழற்சி திடீரென ஸ்தம்பிதமானது. தாக்குதலுக்குத் தயாரான கிரனைட்களும் பெற்றோல் கலன்களும் துப்பாக்கிகளும் அமைதிப்படுத்தப்பட்டன. இந்த அதிர்ச்சி வைத்தியம் பேரினவாதிகளின் காடையர்கள் பின்வாங்கிச் செல்வதற்கான உத்தரவுகளைப் பறக்க வைத்தன.

அத்துரலிய ரத்தின தேரரின் உண்ணாவிரதம் குளிர்பான இஃப்தாறுடன் நிறைவடைந்தது. ஞானசாரவின் ஏ-2 வீதியின் பாதயாத்திரை பைபிள் மலைச்சாரலை அண்மிக்கும் முன்னரேயே பின்வாங்கப்பட்டது. மத்திய மலையகத்தில் தாக்குதலுக்குத் தயார்நிலையில் வெகுண்டெழுந்த கும்பல் வேறு வழியின்றி கலைந்து சென்றது. பிபிஸி, சீஎன்என், அல்ஜஸீரா போன்றனவற்றின் அசையும் கெமறாக்கள் ஒளியிழந்து ஒழித்துக் கொண்டன. முஸ்லிம்கள் மட்டுமன்றி எல்லாச் சமூகங்களையும் சேர்ந்த சராசரி மக்கள் மூச்சை விட்டனர் சுயாதீனமாக!

இருட்டிய மழை தூறவில்லை, வெட்டிய மின்னல் பயங்கர இடியாக விழவில்லை, மக்களுக்கு மீண்டும் உயிர் வந்தது. ஆனால், ஊடகப் பயங்கரவாதம் வேறு வழியில் தனது தாக்குதலை முகாந்திரப்படுத்தியது. அதில் பிரதானமானது மருத்துவர் ஷாபியை நோக்கி அவரது வாண்மை சகாக்களின் உதவியுடன் ஏவப்பட்ட பன்முனைத் தாக்குதலாகும்.

அம்பாறைக் கலவரம் 2018இல் நிகழக் காரணம் கொத்துரொட்டியில் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டிருந்தது என்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்பை வெட்கமின்றி அவர்களால் வெளியிடப்பட்டது. அதனைப்போலவே மகப்பேற்று மருத்துவ சத்திர சிகிச்சை நிபுணரான ஷாபி சிங்கள மாதர் சமூகத்தின் கருப்பைகளை இரகசியமாக அகற்றி ஓர் அமைதியான இனவாத வன்முறையில் ஈடுபடுகின்றார் என்று கிளப்பப்பட்ட வதந்தியும் அதனால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுமாகும். இது மட்டுமன்றி மென்மேலும் ஏராளமான வதந்திகள் எழுப்பபட்டன. தனியார் ஊடகங்கள் இதனைத் திட்டமிட்டு இனவாத அரசியலாக்கின. சட்டமும் ஒழுங்கும் கூட ஒருவகையான ஓர வஞ்சனையுடனேயே காரியங்களை நகர்த்திச் சென்றன. இதற்கு உதாரணமாக வகைதொகையற்ற கைதுகளைக் குறிப்பிடலாம். முஸ்லிம் இளைஞர்கள் மூர்க்கமாகக் கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் முஸ்லிம் பெண்களும் அடக்கம். நீதி மன்றங்களில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கான பிணை கூட மாதக்கணக்காக ஒத்தி வைக்கப்பட்டன.

தவிர முஸ்லிம்களுக்குச் சொந்தமான பாரிய வியாபார நிலையங்கள் மின்னொழுக்கு காரணமாக தீயிலே வெந்தன. நாடெங்கிலும் 500க்கு மேற்றபட்ட சிறிய நடுத்தர முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஹோட்டல்கள் வன்முறையாளர்கள் தொடுத்த பயமுறுத்தலினால் இழுத்து மூடப்பட்டுள்ளன. ஒரு உத்தியோகப் பற்றற்ற பொருளாதாரத்தடையை முஸ்லிம்களின் வர்த்தக ஸ்தாபனங்களை நோக்கி ஏவப்பட்டுள்ளது.

இந்திய சமயங்களை வேற்றுமை களைந்து ஒருமுகப்படுத்தியும் கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய சமயங்களை விதேசிய சமயங்களாக்கியும் ஒருவகை நிறுவனமயப்படுத்தப்பட்ட பிரசாரம் அமைதியான முறையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதற்காக சில தீவிரவாத சமயத் தலைவர்களால் கிராமம் கிராமமாக பிரசாரம் செய்யப்படுவதை அவதானிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் எவ்வித புலனாய்வு அறிக்கைகளும் அவசியமில்லை.

நீர்கொழும்புப் பிரதேசத்திலும் குருநாகல் மாவட்டத்திலும் முஸ்லிம்கள் மீதான வன்முறைத் தாக்குதல் வகை தொகையற்று நடந்து முடிந்தன. தாக்கப்பட்ட பிரதேசங்களின் பெண்மணிகளும் குழந்தைகளும் நள்ளிரவு வேளைகளில் காடுகளில் ஒழித்திருந்தனர். அது ரமழான் மாதமானபடியால் நோன்பு நோற்க முடியாதும் பள்ளிகளுக்கு தொழுகைக்காகச் செல்லமுடியாதும் அவர்கள் அவதிப்பட்டனர். இவற்றையெல்லாம் அவ்வப்பிரதேசங்களின் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் வட்டாரங்களுக்கான கட்சித் தலைவர்களும் அவற்றின் அடியாட்களுமே செய்து முடித்ததாக தாக்கப்பட்ட பிரதேச மக்கள் சாட்சி கூறினர். அதுமாத்திரமன்றி, தாக்கப்பட்ட மக்களே கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் பிணை வழங்கப்படாது நீண்ட நாட்கள் அடைத்து வைக்கப்பட்டனர். இவையெல்லாம் அவ்வப்பிரதேச அரசியல் கட்சிகளினதும் மத ஸ்தாபனங்களினதும் வழிகாட்டலுடன் நடந்தேறின என்பதற்த யாரும் விஞ்ஞான பூர்வமான ஆதாரம் கேட்கத் தேவையில்லை.

மேலும், ஒரு கலாசார வன்முறையும் முடுக்கி விடப்பட்டமை மிக வெளிப்படையாகத் தெரிந்தது. இதற்கு சட்டமும் ஒழுங்கும் மானசீகமான ஒத்துழைப்பை வழங்குகின்றதா என சந்தேகிக்கும்படியான நிலைமையே எங்கும் தெரிந்தன. இதற்கு உதாரணமாக தனது மேலங்கியில் கப்பலின் சுக்கானைப் பொறித்திருந்த ஆடை அணிந்த பெண் தர்மச்சக்கரத்தை அவமரியாதைப்படுத்தியாதக் கூறி பொலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தாள். தர்மச்சக்கரத்தை சுக்கானிலிருந்து வேறுபடுத்தி விளக்கம்பெற நீதிமன்றத்துக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. இந்த செயற்கையான தேவைப்பாட்டினால் அப்பாவிப் பெண்ணுக்கு பிணை வழங்குவதை நீதி மன்றம் தாமதித்துக்கொண்டே வந்தது. இத்தகைய நிறுவனப்பமயப்படுத்தப்பட்ட மற்றும் பொதுவான வன்முறைகள் அனைத்தும் ஒரு மெல்லிய கட்புலனாகா மின் இழையினால் தொடர்புபடுத்தப்பட்டிருப்பதான ஒரு புலக்காட்சியை மக்கள் அவதானித்தனர். அது பாதிக்கப்பட்ட மக்களிடையே குறிப்பிட்ட அரசியல் கட்சி தொடர்பான வன்மத்தையும் அரசாங்கம் தொடர்பான வெறுப்பையும் வளர்த்துவிட்டது.

ஏப்ரல் 21 தொடங்கி கடந்த மாதம்வரை கைதுகளும் பிணை மறுப்புக்களும் தொடர்ந்து கொண்டே இருந்தன. ஊடகங்களும் பாராளுமன்றமும் இனவாதத்தைக் கக்கிக்கொண்டே இருந்தன. விசேடமாக பொதுஜன பெரமுனவினரின் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏராளமான பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் உறுப்பினர்கள் மீது பாராளுமன்றத்துக்கு உள்ளேயே வீராவேசத்துடன் ஒரு தலைப்பட்ச தாக்குதலைத் தொடுத்தனர். போதாதென்று ஐ.தே.க ரத்னதேரோ, சம்பிக்க ரணவக்க போன்றோர்களும் மற்றும் ஜே.வி.பி. உட்பட ஏனைய உறுப்பினர்கள் சிலரும்; கோடீஸ்வரன் மற்றும் வியாழேந்திரன் உள்ளிட்ட சில தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும்; கூட முஸ்லீம்களைப் பயங்கரவாதிகளாகக் காட்சிப்படுத்துவதில் அக்கறைப்பட்டனர்.
ஆக, முஸ்லிம்களும் முஸ்லிம் தலைவர்களும் பாதையில் செல்லும் பைத்தியக்காரனை ஒழுக்கம் தவறி வளர்க்கப்பட்ட சிறுவர்கள் கல்லாலும் சொல்லாலும் காயப்படுத்தப்படுவதைபோல காயப்படுத்தினர். இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் ஏராளமான முஸ்லிம் தனவந்தர்கள் ஏற்கனவே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக உயிர்த்த ஞாயிறை அண்மித்த மறுதினங்களில் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் தான் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளராகத் தயார் என்ற அசந்தர்ப்பவசமான பிரகடனமும் முஸ்லிம்களை அச்சத்தில் ஆழ்த்திற்று.
தேர்தல் ஆணைக்குழுவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரகடனம் வெளியேவந்த கையோடு முஸ்லிம்கள் யாரை ஆதரிப்பது என்ற மிகமுக்கியமான தீர்மானத்தை எடுத்தாகவேண்டிய அழுத்தம் முஸ்லிம்களின் அதிகபட்டச ஆதரவுத் தளத்தை தக்கவைத்துள்ள தலைமைகளின் தோள்மேலே சுமத்தப்பட்டது.

2015இல் அப்போதைய அரசை விட்டு மாற்றும் தீர்மானத்துக்கு மக்கள் அதிரடியாக விரைந்தாலும் முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் அளவுக்கு அதிகமான நிதானத்தைக் கடைப்பிடித்ததாக மக்கள் பேசிக்கொண்டனர். அந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அவர்கள் காட்டிய அதிகபட்ச நிதானம் சமூகத்தில் ஏற்கனவே ஓர் எரிச்சல் உணர்வை அவர்கள் மீது உருவாக்கியிருந்தது. அந்த எரிச்சலின் விழுப்புண் ஆற அவர்களுக்கு கனகாலம் எடுத்தது.

இதனால் பிரதான கட்சிகள் யாரைத் தீர்மானிக்கப்போகின்றன என்கின்ற பரபரப்பு ஏற்பட்டது. பொது ஜன பெரமுன தன்னுடைய வேட்பாளரை முந்திக்கொண்டு அறிக்கையையும் விட்டுவிட்டது. அந்த வேட்பாளர் தொடர்பான முஸ்லிம்களின் மனப்பாங்கு உயிர்த்த ஞாயிற்றின் பின்னர் சற்று விகாரமானதாகவே இருந்தது. மஹிந்த ராஜபக்ஷவுடன் வாரப்பாடு கொண்டிருந்தோரும் கூட தற்போதைய வேட்பாளர் தொடர்பான அச்சத்தை அப்போதில் வெளிப்படையாகவே வெளியிட்ட வண்ணம் இருந்தனர். நாட்கள் கடந்துகொண்டே போயின. எனினும், நிறுவன மயப்படுத்தப்பட்ட இனவாத சங்கிலித் தொடரின் அதி முக்கிய புள்ளிகள் பொதுஜன பெரமுனவிலேயே அதிக அளவில் கண்களுக்குத் தெரிந்தனர். அவர்கள் வன்முறை இனவாதத்தின் கோரமுகத்தை அப்படியே வெளிக்காட்டும் பொது பல சேனாவிடம் வெளிப்படையான உறவைப் பேணிக்கொண்டிருந்தனர்.

ஏற்கனவே பொது பல சேனாவின் ஸ்தாபிதத்துடனும் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் ஈடுபாட்டுடனும் நிறைய வதந்திகள் உலா வந்தன. அதிலும் நோர்வே நாட்டின் கடாட்சத்துடன் தலைநகரில் நிர்மாணிக்கப்பட்ட பொது பல சேனாவின் ஆடம்பரமான அலுவலகம் கோதாவின் கையினால் திறக்கப்படுவதற்கான விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
முஸ்லிம்களை எதிரியாகக் கருதும் ஒரு ஸ்தாபனத்தின் செயலக கட்டடத் திறப்பு விழாவுக்கு அப்போதைய ஜனாதிபதியின் தம்பியான பாதுகாப்புச் செயலாளர் பிரசன்னமாவது ஜனாதிபதி மஹிந்த மீது மரியாதை வைத்திருந்த முஸ்லிம்களின் மனதில் கசப்புணர்வை ஏற்படுத்திற்று.

இதனால் அப்போதைய அமைச்சரவையில் இருந்த ரவூப் ஹக்கீம் அவர்களின் மனவருத்தம் ஜனாதிபதி மஹிந்தவுக்கு நேரடியாக அவர் மூலமாகவே தெரிவிக்கப்பட்டது. தெரிவிக்கும்போது காதுகொடுத்துக் கேட்ட மஹிந்த பின்னர் தம்பியிடம் தொலைபேசியில் பேசிவிட்டு ஹக்கீம் அவர்களைத் தொடர்பு கொண்டு மிகக்காட்மாக தனது நிர்தாட்சண்ணியமான பதிலைக் கூறி அவரை மனமுடையச் செய்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் மிக உற்சாகமாக அந்த ஆடம்பரக் கட்டடத்தை திறந்து வைத்த செய்திகளைத் தொலைக் காட்சிகள் மகிழ்ச்சியாக ஒலிபரப்பின. இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற முஸ்லிம்களின் மன உணர்வில் வேதனையே தென்பட்டது.

பொதுபல சேனாவின் பிரபல்யமான தோற்றத்துடன் இஸ்லாமோபோபியா என்பது அப்பாவி சிங்கள மக்களின் ஆழ்மனங்களில் விதைக்கப்பட்டாயிற்று. முஸ்லிம்கள் ஒரு சர்வதேச சமூகம் என்றும் அவர்கள் ஐம்பத்தி இரண்டு நாடுகளின் அரசுகளை கொண்டிருப்பவர்கள் என்றும் அவர்கள் மீதான ஒரு போபியாவை பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் நாட்டுப்புற சிங்கள மக்களிடமே விதைத்துவிட்டன. சில பிரபல்யமான ஊடகங்கள் இக்கட்டுக்கதைகளை பயங்கரமாக விதைப்பதில் முன்னின்று செயற்பட்டன. அவை பொது ஜன பெரமுனவின் நேசத்தைப் பெற்றிருந்தமையும் பெரும்பான்மையினருடன் கூடி வாழ்ந்த முஸ்லிம்களால் உணரப்பட்டது.
மேற்படி அமைப்பானது நீண்ட நாட்களாகவே கோதாவை ஜனாதிபதியாக்கும் செயல்திட்டத்தை முடுக்கிவிட்டிருந்தது. அது மட்டுமன்றி பொதுபல சேனாவுக்கும் அது பிரேரித்த வேட்பாளரான கோதாவுக்கும் இடையே இரகசியமான ஓர் ஒப்பந்தம் கைச்சாத்தாகி இருப்பதாகவும் அதற்கெதிரான அரசியல் அமைப்புக்கள் சில தகவல்களை கசியவிட்டிருந்தன. அவ்வொப்பந்தத்தில் இஸ்லாமோபோபியா தொடர்பான சரத்துக்களும் சேர்க்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் கசிந்தன.

அதில் முதலாவது முஸ்லிம்களின் அடையாளம் தொடர்பானதாகும். அவர்கள் பிரதானப்படுத்தியது ஒரே தேசிய அடையாளத்தையே சகலரும் கொண்டிருத்தல் வேண்டும். தனித்துவமான அடையாளங்களுக்கு புதிய ஜனாதிபதி எவ்விதமான சலுகைகளையும் வழங்கக்கூடாது. அதில் பிரதானமானது பள்ளிவாசல் தொடர்பான அடையாளங்களாகும். பள்ளிவாசல்களின் நீர்மாணம் தொடர்பான கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரல் வேண்டும்.

மேலும், மத்ரஸா அமைப்புக்கள் நிறுத்தப்படல் வேண்டும். மத்ரஸா கல்வி என்ற போர்வையில் தீவிரவாதம் பயிற்றுவிக்கப்படுவதான வதந்தி ஏற்கனவே இலங்கையிலும் இந்தியாவிலும் பரப்பப்பட்டு முடிந்து விட்டது.
அத்துடன் முஸ்லிம் தனியார் சட்டம் முடக்கப்படல் வேண்டும். நாட்டின் பொதுச் சட்டத்தலேயே சகலரும் ஆளப்படல் வேண்டும்.

விசேடமாக வட்டியில்லா வங்கிகள் என்ற பெயரில் இஸ்லாமிய வங்கிகளும் பிரதான வங்கிகளின் இஸ்லாமிய அலகுகளும் புற்றீசல்கள்போல் முளைத்துவிட்டன. இவை உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
அபாயா, புர்கா, நிகாப், ஹிஜாப் முதலிய ஒழுக்கவியலோடு தொடர்பான சகல ஆடைகளும் பொது இடங்களில் அணிதல் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அந்த ஒப்பந்தத்தில் சேர்த்திருப்பார்கள் என்பதற்கு அண்மைக்கால வரலாறே சான்றுபகர்கின்றது.

இவற்றைப் பொய்யென் கூறுவது முஸ்லிம் வெகுஜனத்தைப் பொறுத்தவரை முடியாத ஒன்றாகும். ஏனெனில் அவர்களின் அண்மைக்காலப் பட்டறிவு அப்படிப்பட்டதாகும்.
மேற்படி பின்புலத்துடன் அறிமுகமானவர் ஜனாதிபதி வேட்பாளராக வந்தபோது முஸ்லிம் தரப்பானது மகிழ்ச்சியின் சாயலை வெளிக்காட்டவில்லை. இப்போது வெற்றியில் பட்டாசு கொழுத்தும் முஸ்லிம்கள் சிலரும் இதனுள் அடக்கம்.
இதற்கிடையில் பெரும்பான்மை சமூகம் தங்களின் துரோகியாகவும் ஷரீஆ பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகராகவும் கருதிய ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதியை உருவாக்கும் ஜனாதிபதி வேட்பாளராக தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டு வட்டக் களரிக்குள் பிரசன்னமாகி ஒரு கூத்தையே அரங்கேற்றி இருந்தர்.

அதனைவிட முஸ்லிம் தலைமைகள் சங்கமித்திருந்த ஐ.தே.க. தன்னுடைய வேட்பாளர் யார் என்பதை வெளியிட முடியாத அளவுக்கு உட்கட்சி தில்லுமுல்லுகளால் அவதிப்பட்டது. கட்சித்தலைமையானது  தானே வேட்பாளர் என்பதில் பிடிவாதமாக இருந்தது.

 ஆனால் ஐ.தே.கவின் தலைமை சர்வதேச அரசியலில் பிரகாசித்தாலும் கூட உள்ளுர் அரசியலில் கோமாளியாக்கப்பட்டிருந்தது. அத்துடன் நடந்து முடிந்த வன்முறைகளில் தீ பறக்கும் அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை என்ற நியாயமான மனக்குறை அவர் மீது முஸ்லிம்களுக்கு உண்டு. அதிலும் திகன கலவரம் நடைபெற்ற காலத்தில் உள்நாட்டு பாதுகாப்பு அவரின் கைக்குள்ளேயே அடங்கியிருந்தது. ஜனாதிபதி அதனை அப்போது பறித்து எடுத்திருக்கவில்லை.
ஐ.தே.க. தலைமையின் அறிவுப் பின்புலனும் அவருக்கிருந்த காய்நகர்த்தும் சாணக்கியமும் எந்தப் பிரச்சினையையும் அமைதியாகக் கையாண்டு இறுதி வெற்றியை சாதகமாக்கும் சாதுரியமும் பேரினவாத மனோபாவமின்மையும் சிங்கள வெகுஜனத்திடம் கணிசமான அளவுக்குச் சென்று சேர்க்கப்படவில்லை. சிங்கள வெகுஜனம் அவரை ஒரு பிரபுத்துவ அரசியல் வாதியாகக் கண்டமையினால் ஒரு வெஜன உட்பகை அவரை நோக்கி இருந்தது. ஆனால், கடந்த பல வருடங்களாக ஐ.தே.க உட்கட்சி மோதல்களின் போது சஜித் பிரேமதாச ஒரு வெகுஜன தலைமையாக அந்தக் கட்சியினால் இனங்காணப்பட்டிருந்தார். அதனால் ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராகக் கூடாது என்ற மறுபக்க பிடிவாதம் தவிர்க்க முடியாத அழுத்தமாக மாறிற்று. இந்த நிலையில் சஜித் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார்.
சிலர் கூறுவதுபோல பிராந்திய விஸ்தரிப்பு வாதிகளின் ஆதங்கத்தை முஸ்லிம் தலைமைகள் நுண்ணுனர்ந்து கொள்ளவில்லையே என்ற குற்றச்சாட்டு மேட்டுக்குடி முஸ்லிம்களிடையே தற்போதைக்கு மேலோங்கி வருகின்றது.

ஆனால் வட கிழக்கு மாகாண சபையின் முதல்வராக இருந்தபோது சுயாதீனமான ஈழத்தைப் பிரகடனம் செய்து விட்டு பின்னர் வட இந்தியாவில் அஞ்ஞாதவாசம் இருந்தவரும் நல்லாட்சியின்போது நாட்டில் செற்றிலான பின்னரும் ஒரு மூலையில் ஒதுங்கிப்போய் இருந்தவருமான  வரதராஜப் பெருமாளின் மீள் அரசியல் பிரவேசமும் அவரின் மாமிசப்பகை எதிராளியான டக்ளஸ் தேவானந்தா சங்கமித்துள்ள அதே இடத்திலேயே அவர் சென்று சங்கமித்துள்ளமையையும் அனிச்சையாக ஏற்பட்ட அரசியல் சுத்துமாத்து அல்ல என்பது ரவூப் ஹக்கீம் போன்ற முஸ்லிம் தலைமைகளால் முகர்ந்தறிய முடியாத ஒன்றல்ல.

ஆனால் பெரும்பான்மை மக்களிடம் ஐ.தே.க நிலையான சேமிப்பாக வைத்திருந்த 35 வீதமான வாக்குகளும் அதற்குப் பதில் சொல்லும் என்றே பலரும் கணித்தனர். 16.11.2019 அன்று பி.ப 4 முதல் 5 மணி வரை ஏற்பட்ட திடீர் வாக்களிப்பு வீத அதிகரிப்பு நாட்டில் ஒரு மௌனப் புரட்சி ஏற்பட வழிவகுத்துள்ளமையின் அறிகுறிகளே. அவை நிதானமாக ஆராயப்பட வேண்டும். ஆனால், அந்த நிதானம் தற்போது யாருக்கும் இல்லை, தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் உட்பட.

மேலே விபரிக்கப்பட்ட இஸ்லாமோபோபியாவும் அதன் மூலமாக முஸ்லிம்களைக் கருவறுக்கக் கங்கணங்கட்டியோரும் பெரும்பான்மையாக சங்கமித்த பொஜன பெரமுனவின் வேட்பாளரையா அல்லது இத்தகைய தன்மைகள் குறைந்த அளவில் இணைந்திருக்கின்ற ஒரு தூய பௌத்தரான சஜித்தையா என்பதில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் வெகுஜனத்துக்கு தெரிந்த ஒரே பதில் சஜிதேதான்; என்பதைக் கண்டுகொள்ள முஸ்லிம் தலைமைகளுக்கு ஒரு பூதக்கண்ணாடி அவசியப்படவில்லை. அவர்கள் தங்கள் அனுபவத்தாலும் பட்டறிவாலும் உந்தப்பட்டு சஜித் சிங்கள மக்களின் 35 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளையாவது பெறின் சிறுபான்மையினரை ஒற்றுமைப்படுத்துவதன்மூலம் சஜித்தை வெற்றிபெற வைக்கலாம் என கணக்கிட்டனர்.
இதனைத்தவிர வேறு தெரிவை அவர்கள் மேற்கொண்டிருப்பின் எதிர்காலத்தில் கட்புலனாகவோ அல்லது அல்லாமலோ நடைபெற எதிர்பார்க்கப்படும் இஸ்லாமோபோபியாவின் எதிர் விளைவுகளுக்கு இவர்கள் துணைபுரிந்ததான வரலாறே எழுதப்படும்.

ஞானசாரதேரரோ தன்னுடைய கடையை இழுத்து மூடியதாக விட்டுள்ள அறிக்கை அவர் சர்வசமய ஆர்வலராக மாறிவிட்டார் என்பதற்கான சமிக்ஞையாக எடுத்துக்கொள்வது நமது முட்டாள்தனமே. அவர் நினைக்கின்றார் தன்னுடைய போராட்டமும் அழுத்தமும் இன்றியே தான் எதிர்பார்த்த அனைத்தும் நடந்து முடியும் என்று.
இனி எதிர்காலத்தில் கடந்த காலங்களில் நம் கண் முன்னே நிகழ்ந்த பாரிய அசம்பாவிதங்கள்  நடந்துவிடமாட்டாது என நாம் பூரணமாக நம்புவோம். பல தமிழ்ப் படங்களின் இறுதிக் காட்சிபோல இனி சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு யாவும் சுபமே காரியமாகுக எனப் பிரார்த்திப்போம்.


 



இளமைப் பருவம் என்பது குழந்தைப் பருவத்திற்கும் (Childhood) முழு வளர்ச்சிப்பருவத்திற்கும் (Fullmanhood) இடைப்பட்ட பருவமென அடையாளப்படுத்தப்படுகின்றது. இது உடல் வலிமையும் வீரியமும் (physical strength and energy) கொண்ட பருவமாகும்; வாழ்வில் சுறுசுறுப்பும் இயக்கமும் செயற்றிறனும் மிக்க பருவமாகும். வாழ்வில் தன் வாலிபத்தைப் பயன்படுத்திக் கொள்ளாதவன் வளமான வாழ்வுக்கு உரித்துடையவனாவது சாத்தியமானதன்று. இதனாலேயே முதுமை வரும் முன்னர் இளமையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நபிமொழி வழிகாட்டி நிற்கின்றது. 
பருவ வயது என்பது முற்றிலும் நல்ல பருவமல்ல. கெட்ட மோசமான பருவமுமல்ல. இளமையென்பது வாளைப் போன்றது. அதனைப் போர் வீரனும் பயன்படுத்தலாம்; கொள்ளைக்காரனும் பயன்படுத்த முடியும். மனித இன வரலாற்றில் ஆக்கப் பணிகளில் முன்னின்று உழைத்த பெருமை அதிகம் இளைஞர்களையே சாரும். அதேவேளை உலகில் நாசவேலைகளுக்கும், அழிவு வேலைகளுக்கும் அவர்களே துணை நிற்பதையும் காணலாம். 
ஒரு சமூகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் இளைஞர்களில் தங்கியுள்ளது என்றால் மிகையாகாது. தனது இளைஞர் பரம்பரையை சரியாகப் பயிற்றுவித்து, முறையாக நெறிப்படுத்தி, வழிப்படுத்திய ஒரு சமூகமே எழுச்சி பெற முடியும் என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது. இளைஞர்களை இழந்த சமுதாயம் தன் இருப்பை இழந்து விடும் இருந்த இடம் தெரியாமல் தொலைந்து விடும். இவ்வகையில் இஸ்லாம் இளமையின் முக்கியத்துவத்தை பக்குவப்படுத்தி அதன் மூலம் பயன் பெறுமாறு வலியுறுத்துகின்றது. முன்மாதிரியான ஓர் இளைஞனுக்கு உதாரணமாக அல்-குர்ஆன் நபி யூஸுபைக் குறிப்பிடுகின்றது. அவரின் ஆளுமைப் பண்புகளையும் அவர் பெற்றிருந்த திறன்களையும் தருகின்றது. அடையாளப் புருஷர்களாகக் கொள்ளத்தக்க ஓர் இளைஞர் குழுவைப் பற்றி அல்-குர்ஆனின் அல்-கஹ்ப் அத்தியாயம் விளக்குகின்றது.  
''நிச்சயமாக அவர்கள் சில இளைஞர்கள்; அவர்கள் தங்கள் இரட்சகனை விசுவாசித்தார்கள்;. மேலும் நேர்வழியை அவர்களுக்கு நாம் அதிகப்படுத்தினோம். மேலும், (அக்கால அரசன் முன்னிலையில்) அவர்கள் எழுந்து நின்று வானங்களுக்கும் பூமிக்கும் இரட்சகன்தான் எங்கள் இரட்சகன் அவனையன்றி வணக்கத்திற்குரிய வேறு நாயனை நாம் அழைக்க மாட்டோம். (அவ்வாறு அழைத்தால்) அப்போது உண்மையில் நாம் வரம்பு மீறிய வார்த்தையைக் கூறிவிட்டோம் என்று அவர்கள் உறுதியாகக் கூறிய போது, அவர்களுடைய உள்ளங்களை (நேரான வழியில்) நாம் உறுதிப்படுத்தி விட்டோம்.'' 
நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவப் பணிக்குத் தோள் கொடுத்தவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்களாகவே இருந்தனர். இஸ்லாமிய வரலாற்றில் ஸ்பெயினைக் கைப்பற்றிய தாரிக் பின் ஸியாதும், இந்தியாவின் மீது படையெடுத்து வந்த முஹம்மத் பின் காஸிமும் இளம் வாலிபர்களே. 
ஆனால், இன்றைய முஸ்லிம் உம்மாவைப் பொறுத்த வரையில் அதன் இளைய தலைமுறையினரின் நிலை பெரிதும் கவலைக்கிடமானதாகக் காணப்படுகின்றது. மேற்கத்தேய, சடவாத, உலகாயத கலாசாரத்தின் படையெடுப்புக்களுக்கு முன்னால் எமது இளைஞர்கள் நாளாந்தம் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். சிற்றின்பங்களும் அற்ப உலகாயத அடைவுகளுமே இவர்களில் பெரும்பான்மையானோரின் இலக்குகளாக இருக்கின்றன. வாழ்வின் அர்த்தத்தைப் புரியாமல் தம் மீதுள்ள பொறுப்புக்களை உணராமல் தான்தோன்றித்தனமாக வாழும் வாலிபர்களையே எங்கும் காண முடிகின்றது. இளைஞர் சமூகத்தின் இவ்வீழ்ச்சி நிலையின் பயங்கர விளைவை உலகளாவிய முஸ்லிம் உம்மா இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. 
எனவே இன்றைய சமூகப் புனர்நிர்மாண சீர்திருத்தப் பணியிலும் பிரசாரப் பணியிலும் இளைஞர் விவகாரம் முக்கியத்துவமும் முன்னுரிமையும் பெற வேண்டியது அத்தியவசியமாகும். அதிலும் இளைஞர்களின் தனிப்பட்ட ஒழுக்க வாழ்வை ஒழுங்குபடுத்துவது பிரதான இடத்தைப் பெறல் வேண்டும். இன்றைய இளைஞர்களின் இருப்பை அச்சுறுத்தும் மிகப் பெரிய பிரச்சினை ஒழுக்கச் சீர்கேடுகளே என்பதை அறியாதோர் இருக்க முடியாது. ஆயினும் நடைமுறையில் முஸ்லிம் சமூகத்தில் இளைஞர்களின் பிரச்சினைகள் உரிய இடத்தைப் பெறாமை கவலைக்குரியதாகும்.    
அஷ்ஷெய்க்
ஏ.ஸீ. அகார் முஹம்மத் ( நளீமி) எம்.ஏ
பிரதித்  தலைவர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 



ஜனாஸா அறிவித்தல்!

இலங்கையில் கஹட்டோவிட்டயை பிறப்பிடமாய் கொண்ட பேருவளை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மது தப்லீஹு முஹம்மது அக்ரம் {58 வயது} அவர்கள் {28.11.2019 வியாழக்கிழமை}, கட்டாரில் காலமானார்.

 "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்."

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்

(Source ; Qatar Janaza News)

"அமைச்சரவை அந்தஸ்துள்ள, அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சுப் பதவிகள் ஆளும் தரப்பு முஸ்லிம் எம்பிகளுக்கு வழங்கப்படாமை குறித்து எம்மால் ஜனாதிபதியையோ, ஆட்சியையோ விமர்சிக்க முடியாது. அது தொடர்பில் அவர்கள் எடுத்த முடிவு குறித்து காரணம் தெரிவிக்க தெரியாது" என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

ஆளுந்தரப்பு முஸ்லிம் எம்பிக்கள் அமைச்சுப் பதவி விடயத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எமது சியனே நியூஸ் இணையம் அவரைத் தொடர்பு கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(ஆசிரியர் ரிஹ்மி ஹக்கீம்)



தகவல் தொழிநுட்பம் சார்ந்த அனைத்து துறையினரும் சகல வரிகளில் இருந்தும் விலக்களிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

(அததெரண)



சஜித் பிரேமதாசவினை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணியினை சேர்ந்த 57 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் நேற்றைய தினம் (27) பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளரிடம் குறித்த கடிதத்தின் பிரதியுடன், நடவடிக்கை ஒன்றை எடுக்குமாறு உத்தியோகபூர்வ வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.


பொலிஸ் ஊடகப் பிரிவின் நடவடிக்கைகள் நேற்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் ஊடகப் பிரிவால் நேற்றைய நாளில் எந்தவித ஊடக அறிக்கைகளும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

அத்துடன் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கையடக்க தொலைப்பேசியும் பயன்பாட்டில் இல்லை என்பதோடு, பொலிஸ் ஊடகப் பிரிவின் நிலையான தொலைப்பேசியும் இயங்கவில்லை.

இது தொடர்பில் அததெரண தேடி பார்த்தது.

அப்போது பொலிஸ் ஊடகப் பிரிவின் செயற்பாடுகளை பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தின் ஊடாக, புதிய தொழிநுட்பங்களுக்கு ஏற்ப முன்னெடுக்க முயற்சிக்கப்படுவது குறித்து தெரியவந்தது.

இதன் காரணமாகவே பொலிஸ் ஊடகப் பிரிவு தற்காலிகமாக இயங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

(அததெரண)


Al-Noor Charity Association நிறுவனத்தின் பிரதித் தலைவரும் நிதி மற்றும் செயற்திட்ட பணிப்பாளருமான ரிப்கி ரம்ஸான் அவர்கள், சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் சமூக சேவைகள் செய்ததன் காரணமாக அமெரிக்காவிலுள்ள American National Business University யினால் கலாநிதி (Doctor ) பட்டம் பெற்று கௌரவிக்கப்பட்டார்.

(நாஸர் JP)






மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ....

புல்மோட்டை  பிரதேசத்தில் புனித பூமிக்கு காணி அபகரிக்கும் திட்டம் மீள ஆரம்பம்
************************************************************
குச்சவெளி பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட

01. ஸ்ரீ சந்தர்வ யுக்திக வன செனசுன - புல்மோட்டை -01  50 ஏக்கர் காணி

02. யான் ஓயா ராஜமஹா விகாரை  - புல்மோட்டை -01   50 ஏக்கர் காணி

03. எனா நெகி கந்த ரஜ மகா விகாரை  -புல்மோட்டை -01 50 ஏக்கர் காணி

04. மிகுந்து லென பிராண ரஜமகா விகாரை -புல்மோட்டை-01 50 ஏக்கர் காணி

05. சாந்தி விகாரை    -புல்மோட்டை -04 50 ஏக்கர் காணி

06. நாகலென புராண ரஜ மகா விகாரை -புல்மோட்டை 03 50 ஏக்கர் காணி

07. படரகள ஆரண்ய சேனா சனய -கும்புறுபிட்டி கிழக்கு  - 50 ஏக்கர் காணி

08. சப்தனாக பப்பதை வன சென  -திரியாய் 50 ஏக்கர் காணி

09. பாகிய பப்பன வன சென சுன -கும்புறுபிட்டி கிழக்கு  50 ஏக்கர் காணி

10.தெபரகல பிராண வன செனசுன -கும்புறுபிட்டி கிழக்கு 50 ஏக்கர்  காணி

போன்ற பகுதிகளில் அண்மையில் நிறுவப்பட்ட பௌத்த விகாரை அண்டிய எமது பிரதேசத்திலுள்ள வயல் காணிகளை புனித பூமி என்ற போர்வையில் அபகரிக்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

ஏலவே குறித்த பகுதியில் சுமார் 2000 க்கு மேற்பட்ட காணிகளை புனித பூமிக்கு அளவிட முற்பட்டவேளை பிரதேச அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிரதேச வாசிகளின் ஒத்துழைப்புடன் தடுத்து நிறுத்தியமை கடந்த 2010 ம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்ட அதேவேளை மீண்டும் 2019 ஆண்டில் குறித்த பிரதேச மதகுரு ஒருவரினால் தொடர்ந்தும் குறித்த நடவடிக்கை எடுக்கும்படி குச்சவெளி பிரதேச செயலகத்தில் ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது மீண்டும் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நிலையில் பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன

மேற்குறிப்பிடப்பட்ட அளவு திட்டத்தின்படி புல்மோட்டை பிரதேசத்தில் மாத்திரம் சுமார் 300 ஏக்கர் பிரதேச மக்களின் வயல் காணிகள் புனித பூமி என்ற போர்வையில் அபகரிக்கப்டும் நிலைமை

அரிசிமலை பகுதியில் பொதுமக்களால் வழக்கு தொடரப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்குள் செல்ல முடியாத நிலையில் ஏனைய பகுதிகளை குறிவைத்து மேற்குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது 
இதுவிடயமாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களூடாக 27(புதன்) அரசாங்க அதிபரை நேரில் சென்று சந்தித்து விடயமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அன்வர்,
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்.


 காஸாவிலும் மேற்குக் கரையிலும் கடலோரக் குழந்தைகளாய் அங்க அவயங்கள் சிதறுண்டு கிடக்கும் பலஸ்தீனப் பிஞ்சுகளே!உங்கள் தாயும் தந்தையும் கண்ட துண்டமாய் வெட்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு கண்ணீர் கூட வடிக்கச் சக்தியற்றிருக்கும் அப்பாவிக் குழந்தைகளே!மஸ்ஜிதுல் அக்ஸாவுக்காய் இரத்தத்தை இழந்து கொண்டிருக்கும் பலஸ்தீன சொந்தங்களே!!எங்கள் முதல் கிப்லாவுக்காக உம்மத்தின் சார்பில் தன்னந் தனியாய் போராடிக் கொண்டிருக்கும் பலஸ்தீனமே! மன்னித்து விடு.

நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம் .எமது இளைஞர்கள் உன்னை மட்டுமல்ல ஈராக்கையும் ,ஆப்கானையும்,காஷ்மீரையும் மறந்து மிகவும் பிஸியாக இருக்கிறார்கள்.எதில் தெரியுமா??அரசியல் விவகாரங்களிலும்,சினிமா கேலிக்கைகளிலும், அரசியல் கதைகளிலும்,போராட்டங்களிலும் ,விளையாட்டு நட்சத்திரங்களுடனும்,சினிமா சிங்காரிகளுடனும் லயித்துப் போயிருக்கிறார்கள்.மீண்டும் வர நாளாகும்.அதுவரை நீ காத்திருக்க வேண்டியதுதான்.

என் கட்சியா?உன் கட்சியா?என்ற விவாதங்களை அவர்கள் இன்னும்  முடித்துக் கொள்ளவில்லை.இப்போதல்லாம் அவர்கள் இதிலே ஆழமாக மூழ்கிப் போயுள்ளனர்.ஜிஹாத் களத்துக்கு வராமல் மக்காவிலும் மதீனாவிலும் மாறி மாறி இறை வணக்கம் புரிந்து கொண்டிருந்த இமாம் புழைல் இப்னு இயாழ் (ரஹிமதுல்லாஹ்)அவர்களை விளித்து அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹிமதுல்லாஹ்)வடித்தனுப்பிய கவி வரிகள்.....

"இரு புனிதத் தலங்களின் புனிதத்தில் திளைத்திருப்பவரே-எம் இபாதத்தில் -நீர் விளையாடிக் கொண்டிருப்பதை அறிவீரா?
உம் கன்னங்கள் அங்கு விழிநீரால் நனைகின்றன -எம் கழுத்துக்களோ இங்கு இரத்தப் பிரசவம் நடத்திக் கொண்டிருக்கின்றன.

எத்தனை கருத்தாழம்மிக்க கவிவரிகள் !அல்லாஹ்வையே நினைத்து நினைத்து கஃபாவை வலம் வந்து கொண்டிருந்த அந்த மாமனிதர் இதைப் பார்த்து மறுகணமே தன் தவறை ஏற்றுக் கொள்கிறார்.என்ன தவறு?ஜிஹாத் களம் மனிதர்களை வேண்டி நிற்கின்ற போதுதான் இங்கு இபாதத்தில் திளைத்திருந்தது .தவறு என்பதை ஏற்றுக் கொள்கிறார்.

அல் அக்ஸா கைவிட்டுப் போவதைப் பார்த்துக் கொண்டு வெறுமனே வேடிக்கை விளையாட்டிலும் ,அரசியல் விவாகாரங்களிலும் மூழ்கியிருப்பதை என்னவென்று சொல்வது.?
"அறுபது வருடங்கள் இறை தியானம் செய்வதை விட சில கணப் பொழுதுகள் இறை பாதையில் போராடுவது அல்லாஹ்வுக்கு மிகவும் உவப்புக்குரியது"என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

பலஸ்தீன சிங்கங்களே!!தாயின் வயிற்றிலிருந்து வெளியே வரும்போது யூதனை கலங்கடிக்கும் கல்லைச் சுமந்து வரும் வீரக் குழந்தைகளே!உங்கள் தலைகள் அங்கு உருள்வதை மறந்து இந்த உம்மத் அரசியலிலும்,சினிமாவிலும் ,வேடிக்கைகளிலும் லயித்துப் போயுள்ளது.

சிலுவைகளின் அழுங்குப் பிடியில் பலஸ்தீனும் அக்ஸாவும் தவித்துக் கொண்டிருந்த ஒரு நாளில் ஸலாஹுத்தின் அய்யூபியிடம் பலஸ்தீனின் நிலை பற்றிச் சொல்லப்படுகின்றது.தனயனை இழந்த தாயைப் போன்று கண்ணீர் விட்டழுதார்கள்.பின் தன் படையணிக்குள் நுழைந்து அங்கு கடலெனத் திரண்டிருந்த முஸ்லிம் இளைஞர்களைப் பார்த்து வீராவேசத்துடன் கேட்கிறார்.

"இஸ்லாத்துக்காக யார் வருகின்றீர்கள்?இஸ்லாத்துக்காக யார் வருகின்றீர்கள் ?தன்னோடு புறப்பட்டு வந்த படையினரை கண்ணீருடனேயே வழிநடத்த செல்கின்றார்."பலஸ்தீன் அழுது கொண்டிருக்கும் போது என்னால் எப்படி சிரிக்க முடியும்?என்று அவர் வாயால் மாத்திரம் சொல்லவில்லை .பலஸ்தீனை உம்மத்துக்கு மீட்டுக் கொடுத்து விட்டுத்தான்.அவர் புன்னகைத்ததாக வரலாறு சொல்லிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் இந்த உம்மத்தின் உரமாக இருக்க வேண்டிய எம் இளைஞர்கள் நபியவர்களின் எச்சரிக்கையை உண்மைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
"அவர்கள் உடும்புப் பொந்துக்குள் நுழைந்தால் இவர்களும் போய் நுழைந்து கொள்வார்கள்"என்ற நபியவர்களின் வார்த்தைகள் நிதர்சனமாவதை நாம் இன்று கண்கூடாகக் காண்கிறோம்.அவர்கள் முடி வளர்த்தால் இவர்களும் வளர்க்கிறார்கள்.
அவர்கள் தலை மழித்தால் இவர்களும் மழித்து விடுகிறார்கள்.

"போராடாமல் போராட வேண்டுமென்ற எண்ணம் கூட இல்லாமல் யார் மரணிக்கின்றாரோ அவர் முனாபிக்காக மரணிக்கிறார் "என்று நபியவர்கள் கூறினார்கள்.

அவர்களுக்காக உடலால் போராட முடியாவிட்டாலும் உள்ளத்தாலும் உணர்வுகளாலும் போராடுங்கள்.அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவு கூறுங்கள் .உங்களது உயிர்களையும் ,உடமைகளையும் தருவதாக நீங்கள் அவனுக்கு வாக்களித்திருக்கின்றீர்கள்.ஆனால் அனைத்தையும் மறந்து விட்டு இன்னும் இந்த உம்மத் பிஸியாகிப் போய்விட்டது.

       பலஸ்தீனமே !நீ மன்னித்தாலும் அல்லாஹ் எங்களை மன்னிப்பானா???..........






Afra binth Ansar ✍️

Blogger இயக்குவது.