இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான 7 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி ​தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, பதுளை, பொலன்னறுவை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் 80 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் 75 சதவீத வாக்குப்பதிவும், யாழ்ப்பாணத்தில் 66 சதவீத வாக்குப்பதிவும், கிளிநொச்சியில் 73 சதவீத வாக்குப்பதிவும், மட்டக்களப்பில 77 சதவீத வாக்குப்பதிவும், இரத்தினபுரியில் 84 சதவீத வாக்குப்பதிவும், கம்பஹாவில் 81 சதவீத வாக்குப்பதிவும் கேகாலையில் 79 சதவீத வாக்குப்பதிவும் மற்றும் திருகோணமலையில் 83 சதவீத வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளது.

அததெரண 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.