நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் அனைவருக்கும் ஒரே விதமாக சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன் ஊழலை முழுமையாக இல்லாது ஒழிக்க வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

காலி பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டை கட்டியெழுப்ப பல தேசிய கொள்கைகள் இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அடிப்படை சட்டத்தின் கீழே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் அனைவருக்கும் ஒரே விதமாக சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு நாட்டை ஆட்சி செய்வதற்காக மக்கள் வாய்ப்பு வழங்கினால் இவ்வளவு காலமாக ஊழல் மற்றும் மோசடிகள் ஊடாக பெற்றுக் கொண்ட பணம் மற்றும் சொத்துக்களை மீள வழங்குவதற்கு அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்குவதே தனது முதலாவது வாக்குறுதியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(AdaDerana)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.