கொழும்பில் நீண்ட காலமாக பெரோசா முஸம்மில் அவர்களின் தலைமையில் இயங்கிய ஐ.தே.க பெண்கள் குழு,காந்தா சவிய, இலங்கை பொதுஜன பெரமுனவின்  ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்க்ஷவுக்கு முழு ஆதரவையும் அளிப்போம் என உறுதியளித்தனர் என  இலங்கை பொதுஜன பெரமுன (எஸ்.எல்.பி.பி) முன்னிலையில் கொழும்பு பொது நூலகத்தில்  நடைபெற்ற நிகழ்வில் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
காந்தா சவிய என்பது அனைத்து மதங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு ஆகும்இது கொழும்பு மற்றும் தலைநகரின் பிற பகுதிகளில் பெண்களின் நலனுக்காக பணியாற்றும் ஒரு அமைப்பாகும்.
கோட்டபய ராஜபக்க்ஷவுக்கு ஒற்றுமையைக் காட்ட பெண்கள் நூற்றுக்கணக்கானோர் இங்கே கூடினர் பெரோசா முஸம்மில் தலைமையிலான சிவப்பு (மெரூன்) நிற ஆடை  அணிந்திருந்த ஒரு பெரிய குழு பெண்கள்வரவிருக்கும் தேர்தலில் கோட்டபய ராஜபக்க்ஷவின் வெற்றிக்காக பசில் ராஜபக்ஷ முன் தங்கள்  ஒத்துழைப்பை தெரிவித்தனர்.
மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்ஜனாதிபதியின் சட்டதரணிகள் அலி சப்ரி, விஜெயதாச ராஜபக்க்ஷ அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுசில் பிரேம்ஜயந்த்பைசர் முஸ்தப்பா மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தனது தொடக்க உரையில்மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில்கொழும்பு மேயராக இருந்த காலத்தில்ஒரு முஸ்லீமாகஐக்கிய தேசியக் கட்சியை (யு.என்.பி) பிரதிநிதித்துவப்படுத்தியபோதுஅப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்க்ஷ அவருடன் கைகோர்த்து கொழும்பு நகரத்தை அபிவிருத்தி செய்ய உதவினார் என்றும் மேலும் சமுதாயத்தின் தேவைகளைப் புரிந்து கொள்ளக்கூடியவரும், மக்களை திருப்திப்படுத்தும்வகையில் தேசத்திற்கு சேவை செய்யக்கூடிய ஒரு க்கச்சார்பற்ற ஜனாதிபதியாக இருப்பார்.  ஆகவே நாம் அவரை நாட்டின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெண்களின் உறுதிமொழிக்கு பதிலளித்த பசில் ராஜபக்க்ஷஇலங்கை ஜனாதிபதி பதவிக்கு கோட்டபய ராஜபக்க்ஷ சிறந்த தேர்வாக இருப்பார்ஏனெனில் அவர் எந்த அரசியல் அல்லது இன பாகுபாடும் இன்றி நாட்டை ஆட்சி செய்யக்கூடிய நபர். ஜதே.க ஆட்சியின் கீழ் கொழும்பு பெண்களின் பிரச்சினைகள் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்தன, 1,500 க்கும் மேற்பட்ட குடிசை இடங்கள் உள்ளனஅங்கு பெண்கள் பரிதாபகரமான நிலையில் வாழ்கின்றனர். "அவர்கள் கடன்கள் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகள்குடிநீர் வழங்கல்,சுகாதாரம்மோசமாக பராமரிக்கப்படும் வடிகால் அமைப்புகள் போன்றவற்றால் பாரியநெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்," என்று அவர் கூறினார்கோட்டபய ஜனாதிபதியாக வரும்போது இந்த பிரச்சினைகள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்றும் உறுதியளித்தார். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா இந்த பிரச்சினைகளை  தீர்க்காமல் கண்மூடித்தனமாக இருந்தார் என குற்றம் சாட்டினார். மேலும் ராஜபக்க்ஷஅவர்கள் இந்த சுற்றுச்சூழல் மற்றும் சமூக பிரச்சினைகளால் ஏழைக் குடும்பங்கள் தொடர்ந்து அவதிப்படுவதாக புலம்பினார்.
பெரோசா முஸம்மில் அவர்கள் செய்தித் தொடர்பாளர்களுக்கு அளித்த பேட்டியில்ஐ.தே.க ஆட்சியின் கீழ் நகரத்தில் உள்ள ஏழைப் பெண்கள் நிறைய அவதிப்பட்டனர்இப்போது அவர்கள் “போதும் போதும்’ என்று சொல்ல ஒரு எல்லைக்கு வந்துவிட்டார்கள்” என்று கூறினார். "எந்தவொரு மத, இனபாலின பாகுபாடும் இன்றி சமூகத்திற்கு சேவை செய்யத் தயாராக இருக்கும் கோட்டபய ராஜபக்க்ஷ மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளதுஎனவே,அனைத்து பெண்களும் கோட்டபயாவின் வேட்புமனுவை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்று  கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.