இஸ்லாமிய சிந்தனையின் புனர்நிர்மாணமும், இமாம் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பங்களிப்புக்களும்.

 The Reconstruction of Religious Thought in Islam & Contributions of Imam Abdul Qadir Jilani

ஒரு சமூகத்தில் ஆன்மீகம் விலகிச் சொல்லும் போது அங்கு அறியாமையும், சடவாதமும் தலைதூக்கும். ஹிஜ்ரி 5ம் நூற்றாண்டு காலப்பகுதியில் அப்பாஸிய கிலாபத்தின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் சமூக ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்திய குதுபுல் அக்தாப், கௌதுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜிலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள். ரபீஉனில் ஆகிர் மாதம் வந்தால் முஸ்லிம் உலகம் அவர்களை நன்றியுடன் நினைவுபடுத்துகிறது. இதனால் தான் இமாம் தஹபி அவர்கள் கூட அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹு அன்ஹு வை 'பூரணத்துவம் வாய்ந்த முன் உதாரணம்" என்று கூறுகிறார்.

அவர்கள் இளைஞராக இருந்த போது அப்பாஸியரின் ஒடுக்குமுறை தலைவிரித்தாடியது. சமூகத்தில் ஊழல் நிறைந்து இருந்தது, அரசியல் ஸ்திரத்தன்மை நிலவவில்லை. 21ம் நூற்றாண்டில் வாழும் இன்றைய முஸ்லிம் உம்மா முகங்கொடுக்கும் சமூக, பொருளாதார ரீதியிலான நெருக்கடிகளால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். 19ம் வயதில் கல்வி தேடி பக்தாத் சென்ற போது சிரியா, ஜெரூஸலம் போன்ற இடங்களில் நாளாந்தம் மக்கள் கொலைசெய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பக்தாத் நகர அப்பாஸி கலீபா பலமிழந்து காணப்பட்டார். சிற்றரசுகளை நிர்மாணிப்பதற்காக போட்டி போட்டுக்கொண்டிருந்தார்கள் . நயவஞ்சகத்தன்மை ஆட்சியில் இருந்து.

 உலமாக்கள் தமது செல்வங்களில் கூடுதல் ஆர்வம் காட்டிக்கொண்டிருந்தார்கள். இந்தக் காலபகுதிக்கு உதாரணமாக '2009ம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட அரேபிய வசந்தத்தின் பெறுபேறுகளோடு ஒப்பிட முடியும்". இந்த நிலைகளால் மனந்தளர்ந்து போன இமாம் அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 32 வருடங்களாக ஆன்மீக மற்றும் கல்வித்துறையில் தன்னை தயார்படுத்திக் கொள்கிறார்கள். 50 வயதில் தனது பிசரப்பணிகளை ஆரம்பிக்கிறார்கள். இதனைத் தான் அவர்கள் ' அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹு அன்ஹு மக்களின் முழுமையான அங்கீகாரத்தை வென்றெடுத்தார்கள்.

மன்னர்களை விட அந்த ஆத்மீக ஆசானுக்கு அதிகாரம் இருந்தது என இப்னு ரஜப் அவர்கள் எழுதுகிறார்கள்.

அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹு அன்ஹு வின் செல்வாக்கு அதிகரித்த காலப்பகுதியில் தான் பக்தாத் நகரின் மேயராக அபூஅல் முழப்பர் அல் முஸ்தன்ஜித் பில்லலாஹ் பதிவியேற்கிறார். மேயராக இருந்த கலீபாவிற்கு செல்வாக்கோ, வெளிநாட்டு உதவிகளோ இருக்கவில்லை. இதனால் அப்துல் காதிர் ஜிலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மீது பக்தாத் நகர மேயருக்கு பொறாமை ஏற்படுகிறது. தனது புகழை அதிகரித்துக் கொள்வதற்காக அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு வை சந்திப்பதற்காக செல்கிறார். கலீபாவோடு பத்து ஊழியர்களும் செல்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்க மூட்டைகளை சுமந்திருந்தார்கள். அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவர்கள் தங்கமூட்டைகளை பரிசாக ஏற்க மறுக்கிறார். கலீபாவின் வற்புறுத்தலால் அவர்கள் தங்கத்தை கைகளால் அள்ளிஎடுத்து பிழிகிறார்கள். தங்கத்தில் இருந்து இரத்தம் வடிந்துடிகொண்டிருந்தது. அப்பாவி மக்களின் இரத்தத்தை எனக்கு பரிசாக தருகிறீர்? உமக்கு வெட்கமாக இல்லை? எனக்கேட்கிறார்கள். இதனால் ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோகிறார் பக்தாத் நகர மேயர். இந்த சம்பவத்தை இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரலியல்லாஹு அன்ஹு பதிவு செய்துள்ளார்கள்.

போலி நயகவஞ்சகத்தனமான அறிஞர்கள் மீதும் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) எதிர்ப்பு வெளியிட்டார்கள். கி.பி 1151-1155 காலப்பகுதியில் பெரும்பாலான அறிஞர்களும், மக்களும் அவர்களின் தலைமைத்துவத்தின் கிழ் ஒன்றுபடுகிறார்கள். உலகின் பல இடங்களில் இருந்தும் ஈராக் தலைநகர் பக்தாதில் அமைந்திருந்த அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) கல்லூரியில் சேர்ந்துகொண்டார்கள். ஆன்மீக பயிற்சிகளை வழங்கும் மத்திய தளமாக விளங்கியது. ஜிஹாத், தஃவா போன்ற பணிகளுக்காகவும் அவர்கள் ஆட்களை பயிற்றுவித்தார்கள். சிரியா, பலஸ்தீன் போன்ற இடங்களில் அவர்களின் மாணவர்கள் ஊக்கத்தோடு செயற்பட்டார்கள்.

இமாம் அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹு அன்ஹு வினால் கவரப்பட்டவர்கள் அவருடைய மாணவர்களாகவும் இருந்தார்கள். சிலுவை விரர்களிடம் இருந்தது பலஸ்தீனை பாதுகாத்த நூhத்தீன் ஸங்கி, சுல்தான் ஸலாஹ்தீன் அய்யூபி போன்றவர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அப்தல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) முரீதான ஸலாஹ்தின் அய்யூபி அவர்கள் அல்- அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அஸ்அரி அகீதாவை முதலில் அறிமுகப்படுத்துகிறார். சிலுவைப் போராட்டத்தின் ஒவ்வொரு தளபதியும் காதிரியா தரீக்காவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முக்கிய புள்ளியாக கருதப்படும் இஸ்ஸதீன் கஸ்ஸாம் கூட காதிரியாவார்கள். பாகிஸ்தான் என்ற நாடு உருவாகும் என்று கனவு கண்ட பாகிஸ்தானின் முன்னோடியும், நவீன சிந்தனையாளருமான அல்லாமா இக்பால் அவர்களும் காதிரிய்யா தரீக்காவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்திய துணைக்கண்டம், இலங்கை, தூர கிழக்காசிய நாடுகளிலும் காதிரிய்யா தரீக்கா செல்வாக்குடன் உள்ளது.

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி இன்றும் இளைஞர்களுக்கு மத்தியில்  Heroவாக வலம்வருகிறார். கி.பி 1187ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் திகதி 88வருடங்களின் பின்னர் குத்ஸ் (பைதுல்மக்திஸ் விடுவிக்கப்படுகிறது) திறமையான தலைமைத்துவம்,பண்பட்ட ஆன்மீக பயிற்சி. மேற்குலகின் 3வது சிலுவை யுத்தம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்மைக்காக அவர் கதாநாயகனாக அடையாளம் காணப்படுகிறார். சிலுவை வீரர்களை ஆதரிப்போரும் சலடீனின் (ஸலாஹுத்தீன)மனிதாபிமானத்தையும், யுத்ததர்மங்களையும் பாராடட்டத்தவறுவதில்லை.

சுல்தான் நூர்தீன் ஸங்கியின் படைத் தளபதியாக இருந்து காலத்தில் எகிப்து கைப்பற்றப்படுகிறது. எகிப்தில் கி.பி 1171ல் பாதிமியர்களின் ஆட்சி மறைகிறது. எகிப்தின் அல்அஸ்ஹர் பல்கலைக்கழகம் மூடப்படுகிறது. பாடத்திட்டம் குறிப்பாக அகீதா அஹ்ல் சுன்னா அடிப்படையில் போதிக்கப்பட வேண்டும் என்பதற்காக சுல்தான் ஸலாஹுத்தீன் அஷ்அரி அகீதாiவை அறிமுகம் செய்கிறார்கள். அல் அஸ்ஹரின் வரலாற்றில்  முதல்தடவையாக. சுல்தான் ஸலாஹத்தீனின்  வரலாற்றை இத்துடன் நிறுத்திவிட்டார்கள்.

 ஸலாஹுத்தீன் வாழ்வு மற்றும் பணியை வரலாற்று ரீதியாக அனுகும் போது பல்வேறு அம்சங்கள் இன்று திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. அல் அக்ஸாவை மீட்மைக்கான காரணங்கள் எவை? அன்றைய மத்திய கிழக்கு முகங்கொடுத்த வரலாற்று ரீதியான சவால்கள்? சமூக கலாசாரத்துறையின் பின்னடைவு, அப்பாஸிய ஆட்சியின் பலயீனம் போன்ற பல வினாக்களுக்குப் பதில் அளிப்பது  தேடுவது அவசியமாகும். சுல்தான் ஸலாஹுதீனை சிறந்த ஆட்சியாளராக மாற்ற உதவியவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய மாபெரும் சிந்தனையாளர்களில் இருவர் முதலாமவர் இமாம் அல்கஸ்ஸாலி, அடுத்தவர் இமாம் அப்துல் காதிர் ஜீலானி (றழியல்லாஹுஅன்ஹுமா)

இந்த விடயத்தை  புகழ்பெற்ற சமகால இஸ்லாமிய அறிஞர்
கலாநிதி மாஜித் இர்ஸான் கைலானி அவர்கள் எழுதிய ''ஹகதா ழஹர ஜீலு ஸலஹுத்தீன் வஹாகதா அததல் குத்ஸ்" (சலாஹுத்தீனின் பரம்பரை இவ்வாறு தான் உருவானது இவ்வாறு தான் குத்ஸ் மீட்கப்பட்டது)

ஸலாஹுத்தீனோ, நூர்தீனே திடீரென அவதரித்தவர்கள் அல்லர் மாறாக அவர்கள் சமூக – சமய பொறிமுறையை   அமைப்பதற்கான 50 வருடங்களுக்கு மேலதிகமாக , இமாம் அப்துல் காதிர் ஜீலானி போன்ற அறிஞர்களிடம் தலைமைத்துவப் பயிற்சியைப் பெற்றார்கள். இந்த குழு அல் இன்ஷிஹாப் அல் அவ்தாஹ் என்று அழைக்கப்பட்டது. ஆன்மீக ரீதியில் தனி மனிதனை பயிற்றுவித்தன் மூலம் இஸ்லாமி உம்மாவின் மீது பார்வையை செலுத்துதல் என்பதாகும்.

ஆன்மீகப் பயிற்சி மற்றும் கல்வி மூலம் சமூகமாற்றம் மேற்கொள்ளப்பட்டதே  அன்றி அரசியல் மூலமாக இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது சமகால இஸ்லாமிய அமைப்புகளும், அரசியல் கட்சிகள் எதிர்நோக்கும் சவால்களுக்கான பதிலாகும்.

எதிரிகளை குற்றம் சுமத்திக் கொண்டிருக்கும்  சமூகத்திற்குப் பதிலாக தமது தோல்விகளை ஏற்று  தமது திருத்திக்கொள்ளும் சமூகமொன்றை உருவாக்குவது பற்றி இமாம் அல் கஸ்ஸாலி அவதானம் செலுத்தியிருந்தார்கள். அரசியல் இராணுமாற்றங்களைவ விட தனிமனித சிந்தனை, நடத்தை போன்றவற்றில் மாற்றங்களை மேற்கொள்வது பற்றி இமாம் அவர்கள் அதிகம் கவனம்செலுத்தினார்கள். இமாம் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் தஸவ்வுப் சிந்தனையாளராக இருந்த அதேவேளை ஹம்பலி சட்டவாக்கத்துறைக்கும் மகத்தான பங்களிப்புக்களை  வழங்கினார்.

கல்வியின் நோக்கம் ஒரு morale based
சமூகமொன்றை உருவாக்குவதாகும் என்ற நிலைப்பாட்டில் இமாம் அவர்கள் தொடர்ந்தும் இருந்து வந்துள்ளார்கள் இதனால் தான் அவர்கள் " இயந்திரங்களை உருவாக்குவது கல்வியின் நோக்கம் அல்ல, சிறந்த சமூகத்தை உருவாக்குவதே அதன் இலக்கு என்று வாதிடுகிறார்கள்.

மத்திய கிழக்கில் வாழ்ந்த கிறிஸ்வர்களுடன், யூதர்களுடனும் அவர்களுக்கு ஆரோக்கியமான உறவுநிலவியது. சிலுவை வீரர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து அரபுலகை மீட்பதற்கான யோசனையின் போது சலாஹூதீனுக்கு பல்வேறு சலால்கள் காத்திருந்தன. முஸ்லிம் என்ற அடையாளத்திற்கு புறம்பாக கோத்திர, சமூக, மொழிவேறுபர்டுகள மக்களை உள்ளார்ந்த ரீதியில் கூறுபோட்டிருந்தன. இதற்கு இமாம் அப்துல் காதிர் ஜீலானியிடம் பயிற்சிபெற்றவர்களை அனுகினார். சுல்தான் சலாஹூத்தீனின் படையில் இருந்த 50சதவீதமான கட்டளைத்தளபதிகளும் படைவீரர்களும் இமாம் அப்துல் காதர் ஜீலானி அவர்களின் மாணவர்கள். ஏனைய வீரர்கள் இமாம் கஸ்ஸாலியின் பயிற்சிபெற்றவர்கள்.

ஹம்பலி சட்டவாக்கத்தின் முன்னோடியமான இமாம் இப்னு ஹுதாமா சுல்தான் ஸலாஹுத்தீனின் சிரேஷ்ட ஆலோசகராக இருந்தார்கள். இமாம் இப்னு ஹுதாமா அவர்கள் இமாம் அப்துல்காதிர் ஜீலானியின் மாணவராகவும், கலீபாகவாகும் இருந்தார்கள். கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து சமூகப் புணர்நிர்மாணத்திற்கான அடித்தளங்களை ஏற்படுத்துவதே காலத்தின் தேவையாகும்

இன்றைய போராட்டங்களின் பின்னடைவுகளுக்கும் இவ்வாறான அம்சங்கள் தாக்கம் செலுத்துகின்றன.

அல்கபீலிய்யா லில் ஹஸீமா (தம்மை தாமே தோல்வியுச் செய்யும மக்களின் நிலை மனோநிலை சமூகத்தின் பாரிய பிரச்சினையாகும்) 21ம் நூற்றாண்டின் முஸ்லிம் சமூகம் கொடுத்திருக்கும் கல்வி, சிந்தனை. கலாசார விழுமியங்கள் ஆகிய துறைகளில் பின்னடைவுகளே முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களாகும். ஒரு சமூகம் சமூக ரீதியில் தற்கொலைசெய்து கொள்வதற்கு இது சமமாகும்.

இமாம் அல் கஸ்ஸாலி, இமாம் அப்துல் காதிர் ஜீலானி ஆகியோரிடம் பெற்ற பயிற்சி சலாஹுத்தீனின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் பிரதிபலித்தது. தஸவப் வழங்கிய வழிகாட்டல்  வத்திகானையும் ஆச்சிரியத்துக்குள்ளாக்கியது. ஸலாஹூத்தீன் ஆன்மீகத்துறையில் தன்னை தகுதிவாய்ந்தவராக மாற்றிக்கொண்டார். இமாம் அல் கஸ்ஸாலி, இமாம் அப்துல் காதிர் ஆகியோரை சிறந்த பயிற்றுவிப்பாளர்களாக தெரிவுசெய்துகொண்டார்.

88 வருடங்கள் தாம் வாழந்த காலத்தில் 1 இலட்சம் பேரை இஸ்லாத்திற்குள் எடுத்தபெருமை அவர்களை சாரும். ஆத்மீகத்துறையில் ஏற்படுத்திய மாபெரும் சீர்த்திருத்தம் 'முஹியத்தீன்" என்று அழைக்கப்பட காரணமாக அமைந்தது. இவர்களை போன்ற மாபெரும் சீhத்திருத்தவாதியை காண்பது அரிது. நேர்மையும்,உன்மையும் நிறைந்த தலைவரின் வழிகாட்டல் 21ம் நூற்றாண்டின் சமூக சீர்த்திருத்தில் மகத்தான பங்களிப்பை செய்யும் என்பதல் ஐயம் இல்லை.

"இஸ்லாத்தின் பரவலிலும் எழுச்சியிலும் காதிரிய்யா தரீக்காவின் பங்களிப்புக்கள்" என்ற தலைப்பில் சர்வதேச மாநாடொன்றுக்காக எழுதப்பட் எனது ஆய்வுக்கட்டுரையின் சுருக்கம்.

பஸ்ஹான் நவாஸ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.