நாபாவள அல் பெளஸியா பாலர் பாடசாலை யின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் நாபாவள அல் பெளஸியா பொது மைதானத்தில் சென்ற வியாழக்கிழமை (5) நடைபெற்றது.
2020ம் ஆண்டு கல்வியிணை தொடர இருக்கும் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விளையாட்டுப இவ்விளையாட்டு ப் போட்டியில் lotus, sunflower, red rose ஆகிய இல்லங்கள் போட்டியிட்டன.

 போட்டியின் இடையிடையே மழை குறுக்கிட்ட போதும் மாணவர்கள் மிக ஆர்வத்தோடு விறுவிறுப்பாக போட்டிகளில் ஈடுபட்டனர்.
சுமார் 17 வருடங்களாக இந்தப் பிரதேசத்தில் இயங்கி வருகின்ற இப்பாடசாலையின் ஆசிரியர் களாக ஆசிரியை நூறுன்நிஸா, ஆசிரியை மஸாஹிறா ஆகியோர் கடமையாற்றி வருகின்றனர் .

 விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டிகளின் இறுதியில் அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.
 நிகழ்வின் அதிதிகளாக  அல் பெளஸியா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக குழு தலைவர் அல்ஹாஜ் ஸனூன், பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் பர்ஹான், முன்னால் பிரதேச சபை உறுப்பினரும் முன்னாள் ஆசிரியருமான அல் ஹாஜ்  ஸம்மூன் லெப்பை, முன்னால் அதிபர் அல் ஹாஜ் தவாஹிர் மற்றும் இவர்களுடன் இன்னும் பல பிரமுகர்கள், பெற்றோர், ஊர் மக்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

தகவல் : அஜ்மல் - கஹட்டோவிட்ட 




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.